வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில் பயோகான்கரன்ஸா 2020 மற்றும்‌ முதுநிலை தொழில்நுட்பவியல்‌ கருத்தரங்கு

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ உயிரி தொழில்நுட்பவியல்‌ பயிலும்‌ இளநிலை மற்றும்‌ முதுநிலை மாணவர்கள்‌ சேர்ந்து தேசியளவிலான கருத்தரங்கு “பயோகான்கரன்ஸா 2020 மற்றும்‌ முதுநிலை தொழில்நுட்பவியல்‌ கருத்தரங்கு” கடந்த மார்ச் 13 மற்றும்‌ 14ம் தேதிகளில் நடைபெற்றது.

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ உயிரி தொழில்நுட்பவியல்‌ பயிலும்‌ இளநிலை மற்றும்‌ முதுநிலை மாணவர்கள்‌ சேர்ந்து தேசியளவிலான கருத்தரங்கு “பயோகான்கரன்ஸா 2020 மற்றும்‌ முதுநிலை தொழில்நுட்பவியல்‌ கருத்தரங்கு” கடந்த மார்ச் 13 மற்றும்‌ 14ம் தேதிகளில் நடைபெற்றது.

இந்த பதினைந்தாவது கருத்தரங்கானது தாவர மூலக்கூறுவியல்‌ மற்றும்‌ உயிரி தொழில்நுட்பவியல்‌ இயக்குநகரத்தின்‌ மூலம்‌ முனைவர்‌ சு. மோகன்குமார்‌, இயக்குனர்‌ (CBMB&B) அவரின்‌ தலைமையின்‌ மூலம்‌ ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும்‌ அவர்‌ இக்கருத்தரங்கத்தின்‌ முக்கியத்துவத்தையும்‌, மாணவர்களின்‌ திறமைகளை வெளிக்கொண்டு வருவதற்கான ஒரு வாய்ப்பு ஏற்படுவதாக கூறினார்‌.



தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ பேராசிரியர்‌ நீ. குமார்‌ அவர்கள்‌ இவ்விழாவினை தொடக்கிவைத்து இச்சமூக முன்னேற்றத்திற்கான தற்கால மாணவர்களின்‌ பங்களிப்பு மற்றும்‌ ஆராய்ச்சியில்‌ அவர்களின்‌ பங்களிப்பு எவ்வாறு இருக்கவேண்டும்‌ என்பதை வலியுறுத்தினார்‌. மேலும்‌ , இவ்விழாவில்‌ வாழ்த்துரையானது பல்கலைக்கழகத்தின்‌ முக்கிய துறை அதிகாரிகளால்‌ வழங்கப்பட்டது. அதில்‌ வேளாண்மை கல்லூரியின்‌ முதல்வர்‌ முனைவர்‌ எம்‌. கல்யாணசுந்தரம்‌ அவர்களின்‌ உரையின்‌ போது இன்றைய கால வேளாண்மை சவால்களை வருங்கால தொழில்நுட்பத்தின்‌ மூலம்‌ சரிசெய்யவேண்டும்‌ என வலியுறுத்தினார்‌. அதேபோல முதுநிலை அறிவியல்‌ கல்லூரியின்‌ முதன்மையர்‌ முனைவர்‌ ஜே.எஸ்‌ கென்னடி அவர்கள்‌ புதிய கண்டுபிடிப்புகளின்‌ முக்கியத்துவத்தை மேற்கோள்காட்டி உரையாற்றினார்‌.

மேலும்‌, பல்கலைக்கழகத்தின்‌ முதன்மை தேர்வு துறை கட்டுப்பாட்டு அதிகாரி முனைவர்‌ கே. சூரியநாதசுந்தரம்‌ அவர்களின்‌ வாழ்த்துரையின்போது மாணவர்கள்‌ வேளாண்மை மற்றும்‌ அதனை சார்ந்த துறைகளில்‌ உள்ள வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக்கொள்ள வலியுறுத்தினார்‌. இவ்விழாவில்‌, மூன்றாமாண்டு மாணவிகளான செல்வி ஆர்‌. பவித்ரா (உயிரி தொழில்நுட்பவியல்‌) மற்றும்‌ செல்வி என்‌. சிவசங்கர பாரதி (உயிரி தகவல்தொடர்பியல்‌) அவர்களால்‌ வரவேற்புரை மற்றும்‌ நன்றியுரையாற்றப்பட்டது.

மேலும்‌ இக்கருத்தரங்கானது பயோகான்கரன்ஸா 2020 - இன்‌ தகவல்‌ உள்ளடக்கிய குறுந்தகட்டினை வெளியிட்டு தொடக்கிவைக்கப்பட்டது. இக்கருத்தரங்கத்தின்‌ முக்கிய நிகழ்வாக பல்வேறு பகுதியில்‌ இருந்து வந்த சிறந்த வல்லுநர்களால்‌ உயிரி தொழில்நுட்பத்தின்‌ ஆராய்ச்சிகளை எடுத்துரைத்து கலந்தாலோசிக்கப்பட்டது. பெங்களூருவில்‌ அமைந்துள்ள NCBS-யின்‌ பேராசிரியர்‌ ஆர்‌. செளதாமினி அவர்கள்‌ மருத்துவ குணமுள்ள துளசி, முருங்கை மற்றும்‌ பிரண்டை தாவரங்களின்‌ மூலக்கூறு வரிசைப்படுத்துவதைப் பற்றி உரையாற்றினார்‌. அவருடைய ஆராய்ச்சியானது யுர்சோலிக்‌ அமிலம்‌ மற்றும்‌ டாக்ஸால்‌ போன்ற புற்றுநோய்‌ எதிர்ப்புத்திறனுடைய மரபணுவினை கண்டறிவதாக இருந்தது.

புதுதில்லியிலுள்ள ICGEB- யின்‌ குழுத்தலைவர்‌ முனைவர்‌ எம்‌.கே ரெட்டி அவர்கள்‌ மரபணு திருத்துதல்‌ (ஜீனோம்‌ எடிட்டிங்க்‌) தொழில்நுபத்தைபற்றியும்‌ பயிர்‌ மேம்பாட்டிற்கான அதன்‌ பயன்பாடுகளை பற்றியும்‌ விளக்கினார்‌. அவருடைய ஆராய்ச்சியானது நெற்பயிரில்‌ மகசூல்‌ மற்றும்‌ ஊட்டச்சத்து மேம்படுத்துவதை உறுதியளிப்பதாக இருந்தது. அதேபோல, கொச்சினில்‌ உள்ள அக்ரிஜீனோம்‌ பி. லிமிடெட்‌. இன்‌ தலைமை ஆராய்ச்சியாளர்‌ முனைவர்‌ போனி குரிகோஸ்‌ அவர்கள்‌ கறிவேப்பிலையின்‌ மூலக்கூறு வரிசைப்படுத்துவதைப் பற்றி உரையாற்றினார்‌. மேலும்‌, அவர்களுடைய ஆய்வானது பாம்புகளின்‌ விஷத்திற்கு காரணமான மரபணுக்களின்‌ பண்புகளை பற்றி ஆய்வுசெய்திருப்பது உயிரி தொழில்நுட்பவியலின்‌ மூலம்‌ அதிகளவு ஆன்ட்டி-வினோம்‌ உற்பத்திக்கு வழிவகை செய்வதாக அமைந்துள்ளது.

மேலும்‌ இக்கருத்தரங்கத்தின்‌ முக்கிய அம்சமாக மருத்துவர்‌ வி. ராஜேஷ்‌ பாபு அவர்கள்‌ உடலுறுப்பு தானம்‌ பற்றி விரிவாக எடுத்துரைத்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்‌. அதனை தொடர்ந்து உயிரி தொழில்நுட்பத்தின்‌ புதிய ஆராய்ச்சிகளை பற்றி பல்வேறு இளநிலை மற்றும்‌ முதுநிலை மாணவர்களால்‌ எடுத்துரைக்கப்பட்டது. இக்கருத்தரங்கில்‌ பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த மாணவர்கள்‌ மற்றும்‌ ஆராய்ச்சியாளர்கள்‌ கலந்துகொண்டு பயனடைந்தனர்‌. இரண்டாம்‌ நாளான 14.03.2020 அன்று காலை மாணவர்களிடையே உயிரி தொழில்நுட்ப சம்பந்தமான வினாடி-வினா போட்டி நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து உயிரி தொழில்நுட்பம்‌ சார்ந்த இரண்டு விதமான செய்முறை பயிற்சி வகுப்புகள்‌ மாணவர்களிடையே கற்பிக்கப்பட்டது. அதில்‌ மொத்தம்‌ 32 பேர்‌ கலந்துகொண்டு பயனடைந்தனர்‌.

மேலும்‌ , பெங்களூருவில்‌ அமைந்துள்ள அஸூகா லைஃப்‌ சயின்ஸ்‌-இன்‌ முதன்மை செயல்‌ அதிகாரி முனைவர்‌ ஃபாத்திமா ஃபெனாசிர்‌ அவர்கள்‌ இக்கருத்தரங்கில்‌ கலந்துகொண்டு உரையாற்றினார்‌. அவரின்‌ உரையில்‌ தொழில்தொடங்குவதைபற்றியும்‌, தொழில்முனைவோர்களுக்கு ஏற்படும்‌ இன்னல்கள்‌ மற்றும்‌ அதனை முறியடிக்கும்‌ உத்திகளையும்‌ மாணவர்களிடையே பகிர்ந்துகொண்டார்‌.



பயோகான்கரன்‌ஸா 2020 கருத்தரங்கின்‌ நிறைவு விழாவில்‌ பல்கலைக்கழகத்தின்‌ பதிவாளர்‌ முனைவர்‌ à®….சு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள்‌ கலந்துகொண்டு முடிவுரையாற்றினார்‌. அவரது உரையில்‌ நுண்ணுயிர்‌ சார்ந்த புதிய கண்டுபிடிப்புகள்‌ மற்றும்‌ தொழில்‌ தொடங்குவதற்கான வாய்ப்புகளை மாணவர்கள்‌ ஏற்படுத்தி கொள்ளவேண்டுமென வலியுறுத்தினார்‌.

முன்னதாக உயிர்‌ தகவல்‌ தொடர்பியல்‌ துறையின்‌ தலைவர்‌ முனைவர்‌ என்‌. குமாரவடிவேல்‌ அவர்கள்‌ இக்கருத்தரங்கிற்கான அறிக்கையை சமர்ப்பித்தார்‌. அதனை தொடர்ந்து இயக்குனர்‌ முனைவர்‌ எஸ்‌. மோகன்குமார்‌ அவர்கள்‌ வாழ்த்துரையாற்றினார்‌. பல்வேறு போட்டிகளில்‌ கலந்துகொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு மாணவர்‌ நலசங்க இயக்கு நகரத்தின்‌ முதல்வர்‌ டி. ரகுசந்தர்‌ அவர்களால்‌ பரிசுப்பொருட்கள்‌ மற்றும்‌ சான்றிதழ்கள்‌ வழங்கப்பட்டது. இவ்விழாவில்‌ மூன்றாமாண்டு மாணவர்களான செல்வன்‌ எஸ்‌. முகமது சுஹைல்‌ மற்றும்‌ செல்வன்‌ சி. அபிக்குமார்‌ அவர்களால்‌ வரவேற்புரை மற்றும்‌ நன்றியுரையாற்றப்பட்டது. 

Newsletter