வேளாண்மைப்‌ பல்கலை.,யில் பயிர்‌ உற்பத்தித்‌ திறனை மேம்படுத்துவதற்கான சர்வதேச விரிவுரை தொடர்‌

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ கீழ்‌ இயங்கி வரும்‌ பயிர்‌ வினையியல்‌ துறையில்‌, “மாறும்‌ காலநிலையில்‌ பயிர்‌ உற்பத்தித்‌ திறனை மேம்படுத்துவதற்கான பயிர்‌ வினையியல்‌ அணுகுமுறைகள்‌” என்ற தலைப்பில்‌ இரண்டு நாள்‌ சர்வதேச விரிவுரை தொடர்‌ கடந்த மார்ச்‌ 12 மற்றும்‌ 13ம் தேதிகளில்‌ நடைபெற்றது.

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ கீழ்‌ இயங்கி வரும்‌ பயிர்‌ வினையியல்‌ துறையில்‌, “மாறும்‌ காலநிலையில்‌ பயிர்‌ உற்பத்தித்‌ திறனை மேம்படுத்துவதற்கான பயிர்‌ வினையியல்‌ அணுகுமுறைகள்‌” என்ற தலைப்பில்‌ இரண்டு நாள்‌ சர்வதேச விரிவுரை தொடர்‌ கடந்த மார்ச்‌ 12 மற்றும்‌ 13ம் தேதிகளில்‌ நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ அதன்‌ கீழ்‌ இயங்கும்‌ பல்வேறு கல்லூரிகளிலிருந்தும்‌ மாணவ மாணவிகளும்‌ மற்றும்‌ சர்‌-இ காஷ்மீர்‌ விவசாய மற்றும்‌ தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திலிருந்து மாணவ மாணவிகள்‌ தேசிய விவசாய உயர்‌ கல்வித்திட்டத்தின்‌ கீழ்‌ கலந்துகொண்டனர்‌. இந்த சர்வதேச விரிவுரை தொடர்‌ இளநிலை பட்டம்‌ பயிலும்‌ மாணவர்கள்‌எதிர்‌ காலத்தில்‌ ஆராய்ச்சி துறையில்‌ சிறந்து விளங்க உற்சாகபடூத்தும்‌ வகையில்‌ நடத்தப்பட்டது. முனைவர்‌ 1, ஜெயக்குமார்‌, பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, பயிர்‌ வினையியல்‌ துறை, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ அவர்கள்‌ வரவேற்புரை வழங்கி சர்வதேச விரிவுரை தொடர்‌ குறித்து எடுத்துரைத்தார்‌.

முனைவர்‌. S. பன்னீர்செல்வம்‌, இயக்குநர்‌, நீர் மேலாண்மை இயக்குனரகம்‌ தனது வாழ்த்துரையில்‌ HT உற்பத்தி மற்றும்‌ மேம்பாடு, அழிவின்‌ விளிம்பில்‌ இருக்கும்‌ பன்முகத் தன்மை கொண்ட தாவரங்கள்‌ மற்றும்‌ பழமையான இரகங்களை உபயோகித்து உயிரற்ற காரணிகளாலான அழுத்தத்தைக்‌ குறைத்து, உற்பத்தியை பெருக்கும்‌ முறைகளை கையாளுவதை குறித்து எடுத்துரைத்தார்‌.

முனைவர்‌.ஜெ. வெங்கட்‌ பிரபு, இயக்குநர்‌, திட்டமிடுதல்‌ மற்றும்‌ மேற்பார்வை இயக்குனரகம்‌ அவர்கள்‌ தாவரங்களில்‌ வினையியல்‌ மற்றும்‌ மூலக்கூறுவியலின்‌ முக்கியத்துவம்‌ மற்றும்‌ தாவரங்களில்‌ வளர்சிதை மாற்ற பாதைகளில்‌ வினையியல்‌ மற்றும்‌ மூலக்கூறுவியல்‌ கொண்டு மாற்றத்தை ஏற்படுத்துவதன்‌ மூலம்‌ உயிரற்ற காரணிகளுக்கான எதிர்ப்புத்‌ தன்மையை அதிகரிப்பது குறித்து வலியுறுத்தினார்‌.

முனைவர்‌. P.V. வரபிரசாத்‌, பேராசிரியர்‌ மற்றும்‌ இயக்குநர்‌, கன்சாஸ்‌ பல்கலைக்கழகம்‌, அமெரிக்கா, சிறப்பு விருந்தினர்‌ மற்றும்‌ பேச்சாளராக தனது தொடக்க உரையில்‌ ஆராய்ச்சிகளில்‌ விவசாயிகளின்‌ பங்களிப்பு மற்றும்‌ காலநிலையில்‌ பாதிப்புகளை ஏற்படுத்தாத விவசாய முறைகளைப் பின்பற்றுவதற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்‌. தாவரங்களில்‌ உயிரற்ற அழுத்த காரணிகளில்‌ எதிர்ப்புத்தன்மை பண்புகளை பழமையான தாவர இனங்கள்‌ மூலம்‌ இனப்பெருக்க திட்டங்கள்‌ மூலம்‌ மேம்படுத்துதல்‌ மற்றும்‌ புவிவெப்பமடைதலால்‌ ஏற்படும்‌ உயிருள்ள மற்றும்‌ உயிரற்ற காரணிகளின்‌ அழுத்தங்களின்‌ அளவை குறைப்பது பற்றி எடுத்துரைத்தார்‌.

தாவரங்களின்‌ விளைச்சலை மேம்படுத்த வெப்பநிலை, ஓளி, நர்‌ மற்றும்‌ ஊட்டச்சத்துக்கள்‌ போன்ற பல்வேறு வளர்ச்சி காரணிகளுக்கு தாவரங்கள்‌ எவ்வாறு எதிர்வினையாற்றுகின்றன என்பதை புரிந்துகொள்வது மிகவும்‌ முக்கியமானது என்று கூறினார்‌. உயிரற்ற அழுத்தங்களுக்கு எதிரான போரை நடத்துவதற்கு இடைஓமழுங்கு அணுகுமுறையின்‌ அவசியத்தை அவர்‌ வலியுறுத்தினார்‌. மேலும்‌ அவர்‌ அறுவடைபின்சார்‌ தொழில்நுட்ப ஆராய்ச்சிகளை Cumann பயிர்‌ இழப்புகளை குறைப்பதனை பற்றி கூறினார்‌. சர்வதேச விரிவுரை தொடரில்‌ (1) உணவு மற்றும்‌ பாதுகாப்பிற்கான நிலையான கீவிரதன்மை (2) பயிர்‌ உற்பத்தித்‌ திறனில்‌ காலநிலை மாற்றத்தின்‌ தாக்கம்‌ மற்றும்‌ சாத்தியமான தீர்வுகள்‌ மற்றும்‌ (3) பயிர்‌ வினையியல்‌ மற்றும்‌ உயிரற்ற அழுத்தங்களை நிவர்த்தி செய்வதற்கான அணுகுமுறைகள்‌ பற்றி விரிவாக எடுத்துரைத்தார்‌. மாணவ மாணவிகள்‌ பயிர்‌ வினையியல்‌ துறையில்‌ வறட்சி, அதிக வெப்பநிலை, வெள்ளம்‌ போன்ற மாறும்‌ காலநிலையில்‌ ஆராய்ச்சிக்கு பயன்படும்‌ பல்வேறுவிதமான ஆராய்ச்சி கருவிகள்‌ மற்றும்‌ கட்டமைப்புகளை பார்வையிட்டனர்‌. மேலும்‌, உயிரற்ற தாவர அழுத்தங்களிலிருந்து தாவரங்களை மீட்டெடுக்கும்‌ முறைகள்‌ குறித்து பேராசிரியர்களுடன்‌ விவாதித்தனர்‌.

சர்வதேச விரிவுரை தொடரின்‌ நிறைவு விழாவில்‌ முனைவர்‌. வெ. கீதாலட்சுமி, இயக்குநர் (பயிர்‌ மேலாண்மை அவர்கள்‌ தனது உரையில்‌ நாம்‌ மேற்கொள்ளும் ஆராய்ச்சிகள்‌ மாறும்‌ காலநிலை மாற்றத்திலும்‌ நிலையான மற்றும்‌ உணவு உற்பத்தியை அதிகரிக்கும்‌ தன்மை கொண்டதாக இருக்க வேண்டும்‌ என்று வலியுறுத்தினார்‌. முனைவர்‌. à®®. கல்யாணசுந்தரம்‌.முதல்வர்‌ அவர்கள்‌ அறுவடைக்கு முன்‌ மற்றும்‌. அறுவடைபின்சார்‌ பயிர்‌ ஆராய்ச்சியில்‌ பயிர்‌ வினையியல்‌ துறையின்‌ முக்கியத்துவம்‌ பற்றி எடுத்துரைத்தார்‌. முனைவர்‌. J.S. கென்னடி, முதல்வர்‌ (முதுகலைபடிப்புபள்ளி) அவர்கள்‌ உயிரற்ற மற்றும்‌ உயிருள்ள அழுத்தங்களின்‌ போது தாவரங்களின்‌ செயல்பாடுகளை அறிந்துகொள்ளும்‌ ஆராய்ச்சிகளை அதிகரிக்க வேண்டும்‌ என்று வலியுறுத்தினார்‌.

முனைவர்‌. நீ. குமார்‌, துணைவேந்தர்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ அவர்கள்‌ தனது உரையில்‌ மாறும்‌ காலநிலை குறித்து மக்கள்‌ அனைவரும்‌ அறிவார்‌ மற்றும்‌ மாறும்‌ காலநிலையில்‌ அதிக அளவு மகசூல்‌ குறைகிறது என்றும்‌ அது குறித்து பயிர் வினையியல்‌ ஆராய்ச்சியாளர்கள்‌ தீவிர ஆராய்ச்சியை மேற்கொள்ள வேண்டும்‌ என வலியுறுத்தினார்‌. இறுதியில்‌ சர்வதேச விரிவுரை தொடரில்‌ பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள்‌ வழங்கப்பட்டது. நூற்றிற்கும்‌ மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள்‌ மற்றும்‌ மாணவர்கள்‌ இந்த சர்வதேச விரிவுரை தொடரில்‌ கலந்து கொண்டு சிறப்பித்தனர்‌.

Newsletter