கோவை வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில் 'தோட்டக்கலைத்‌ திருவிழா 2020'

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ “தோட்டக்கலைத்‌ திருவிழா 2020” நேற்று நடைபெற்றது.

கோவை: à®•ோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ “தோட்டக்கலைத்‌ திருவிழா 2020” நேற்று நடைபெற்றது.



இவ்விழாவில்‌ கோயமுத்தூர்‌ தோட்டக்கலைக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, பெரியகுளம்‌ தோட்டக்கலைக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, திருச்சி மகளிர்‌ தோட்டக்கலைக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌, RVS பத்மாவதி தோட்டக்கலைக்‌ கல்லூரி திண்டுக்கல்‌ மற்றும்‌ ஆதிபராசக்தி தோட்டக்கலைக்‌ கல்லூரி கலவை ஆகிய கல்லூரிகளிலிருந்து சுமார்‌ 1300 தோட்டக்கலை பயிலும்‌ இளங்கலை, முதுகலை, முனைவர்‌ மற்றும்‌ பேராசிரியர்கள்‌ பங்கேற்று இவ்விழாவினை சிறப்பித்தனர்.

இவ்விழாவின்‌ நோக்கமானது தோட்டக்கலை மாணவர்களை தங்கள்‌ துறையில்‌ தனித்துவமான திறமைகளை வெளிப்படுத்தவும்‌, வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்‌, தன்னம்பிக்கையை வளர்ப்பது மற்றும்‌ ஆளுமை மேம்பாட்டிற்கான போட்டிகள்‌ நடத்தப்பட்டது.



“தோட்டக்கலைத்‌ திருவிழா 2020” துவக்க விழாவில்‌ இறுதியாண்டு முதுகலை மாணவர்‌ இஜாஸ்‌ வரவேற்றார்‌. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக புகழ்பெற்ற முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்‌ மற்றும்‌ முதன்மை வன உயிரினக்‌ காப்பாளர்‌ எஸ்‌. யஜவராஜ்‌, சென்னை, அவர்கள்‌ கலந்து கொண்டு விழாவினை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்‌. மேலும்‌ தோட்டக்கலை துறையின்‌ ஆற்றலையும்‌, தற்போதுள்ள வாய்ப்புகள்‌ மற்றும்‌ எதிர்கால இலக்குகள்‌ பற்றியும்‌ அவர்‌ எடுத்துரைத்தார்‌.

கோவை தோட்டக்கலை கல்லூரியின்‌ முதல்வர்‌ முனைவர்‌ இல.புகழேந்தி சிறப்புரையாற்றினார்‌. மேலும்‌ மற்ற பல்கலைக்கழக அதிகாரிகள்‌ கலந்து கொண்டு மாணவர்களை வாழ்த்தினர்‌. இறுதி ஆண்டு பி.டெக்‌ தோட்டக்கலை மாணவி என்‌. இலக்கியா நன்றி கூறினார்‌. முன்னணி தோட்டக்கலை தொழில்‌ முனைவர்‌ சஜி ஆப்ராம்‌ இயக்குநர்‌ டெஸ்மேக்‌ பிசினஸ்‌ கன்சல்டன்சி கோயம்புத்தூர்‌ அவர்கள்‌ கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஊக்கவுரை வழங்கினார்‌.



விழாவில்‌ மாணவர்களின்‌ தனித்திறனை வெளிக்கொண்டு வரும்‌ வகையில்‌ காய்கறி செதுக்குதல்‌, தமிழில்‌ கவிதை படைத்தல்‌, சுவரொட்டி விளக்கக்‌ காட்சிகள்‌, ஓவியம்‌ தீட்டுதல்‌, குறும்படம்‌, பேச்சுப்போட்டி, முக ஓவியம்‌, மற்றும்‌ கருத்துக்காட்சிகள்‌ நடத்தப்பட்டன.

இவ்விழாவின்‌ நிறைவு விழாவில்‌ மாணவர்‌ கமலேஸ்‌ வரவேற்புரை வழங்கினார்‌. முதன்மை விருந்தினராக பல்கலைக்கழக துணைவேந்தர்‌ பேராசிரியர்‌ ந.குமார்‌ அவர்கள்‌ மாணவர்களை வாழ்த்தி தோட்டக்கலைத்‌ துறையின்‌ முக்கியத்துவத்தையும்‌, எதிர்கால சவால்களையும்‌ எடுத்துரைத்தார்‌. இறுதியாக, பல்வேறு போட்டிகளுக்கான பரிசுகள்‌ வழங்கப்பட்டன. மாணவி செல்வி. சந்தியா நன்றியுரையாற்றினார்‌.

Newsletter