வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வரும் 13ம் தேதி வேளாண்மையில்‌ ஆற்றல்‌ திறன்‌ மேம்பாடு பற்றிய ஒரு நாள்‌ விழிப்புணர்வு பயிலரங்கம்‌

கோவை: வேளாண்மையில்‌ ஆற்றல்‌ திறன்‌ மேம்பாடு பற்றிய ஒரு நாள்‌ விழிப்புணர்வு பயிலரங்கம்‌ வரும் மார்ச்‌ 13ம் தேதி தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நடைபெறவுள்ளது.

கோவை: வேளாண்மையில்‌ ஆற்றல்‌ திறன்‌ மேம்பாடு பற்றிய ஒரு நாள்‌ விழிப்புணர்வு பயிலரங்கம்‌ வரும் மார்ச்‌ 13ம் தேதி தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நடைபெறவுள்ளது.

சுமார் 250 விவசாயிகள்‌ இந்நிகழ்ச்சியில்‌ கலந்து கொள்ளவுள்ளனர்‌. தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ நீ. குமார்‌, அவர்கள்‌ விழிப்புணர்வு முகாமை துவக்கி வைக்கவுள்ளார்‌.

இவ்விழாவில்‌, தெலுங்கானா மாநில புதுப்பிக்கத்தக்க ஆற்றல்‌ மேம்பாட்டுக்‌ கழகம்‌ மற்றும்‌ ஆற்றல்‌ திறன்‌ பணியக அதிகாரிகள்‌, வேளாண்‌ இணை இயக்குநர்‌, கோயம்புத்தூர்‌, வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி முதன்மையர்‌, விரிவாக்க கல்வி இயக்குநர்‌, விஞ்ஞானிகள்‌, மாணவர்கள்‌, பம்ப்செட்‌ உற்பத்தியாளர்கள்‌ ஆகியோர்‌ பங்கு பெறவுள்ளனர்‌.

இம்முகாமில்‌, நீர் மேலாண்மை, வேளாண்மையில்‌ ஆற்றல்‌ திறன்‌ மேம்பாடு சூரிய ஆற்றலில்‌ இயங்கும்‌ பம்ப்செட்‌ மற்றும்‌ ஆற்றல்‌ சேமிப்பு பண்ணை கருவிகள்‌ ஆகியன குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்‌.

இந்நிகழ்ச்சியை இந்திய வேளாண்‌ ஆராய்ச்சி கழகத்தின்‌ வேளாண்‌ தொழில்நுட்ப பயன்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்‌, ஹைதராபாத்‌ மற்றும்‌ தெலுங்கானா மாநில

புதுப்பிக்கத்தக்க ஆற்றல்‌ மேம்பாட்டுக்‌ கழகத்தின்‌ உதவியுடன்‌ விரிவாக்கக்‌ கல்வி இயக்ககம்‌ செயல்படுத்தவுள்ளது.

Newsletter