வேளாண்‌ பல்கலையில்‌ 6வது விதை கருத்தரங்கு; 60க்கும்‌ மேற்பட்ட வேளாண்‌ விஞ்ஞானிகள்‌ பங்கேற்பு

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, விதை மையம்‌ சார்பாக, 6வது விதை கருத்தரங்கு 06.03.2020 அன்று விதை மையத்தில்‌ நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, விதை மையம்‌ சார்பாக, 6வது விதை கருத்தரங்கு 06.03.2020 அன்று விதை மையத்தில்‌ நடைபெற்றது.

இந்த கருத்தரங்கில்‌, விதை மைய இயக்குநர்‌ முனைவர்‌ செ. சுந்தரேஸ்வரன்‌ அவர்கள்‌ தனது வரவேற்புரையில்‌, தானியம்‌, பயறு வகைகள்‌, எண்ணெய்வித்துக்கள்‌, தீவனப்பயிர்கள்‌ மற்றும்‌ காய்கறிப்‌ பயிர்களில்‌ இந்த வருடம்‌ சுமார்‌ 1700 டன்‌ தரமான விதை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும்‌, இது சென்ற வருடத்தை விட 20 சதம்‌ கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும்‌ தெரிவித்தார்‌.



இந்த விழாவில்‌, வேளானர்‌ வணிக துறை இயக்குநர்‌ முனைவர்‌. எஸ்‌.டீ. சிவகுமார்‌ அவர்கள்‌ விதை உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பதன்‌ மூலம்‌ அதிக வேலை வாய்ப்பையும்‌, வருமானத்தையும்‌ ஏற்படுத்த முடியும்‌ என்று கூறினார்கள்‌.

ஆராய்ச்சி இயக்குநர்‌ முனைவர்‌. கே.எஸ்.சுப்ரமணியன்‌ அவர்கள்‌ தனது வாழ்த்துரையில், தரமான விதைகளின்‌ தரத்தை அறிய புதிய தொழில்நுட்பமான பார்கோடிங் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும்‌ என்றும்‌, கலவன்களை அறிய ட்ரோன்‌ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும்‌ மற்றும்‌ நானோ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விதையின்‌ தரத்தை மேம்படுத்த வேண்டும்‌ என்று‌ கூறினார்.



தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ ந. குமார்‌ அவர்கள்‌ தனது தலைமையுரையில்‌ தரமான விதை உற்பத்தியில்‌ ஈடுபடும்‌ விஞ்ஞானிகள்‌ அதிக கவனத்துடன்‌, விதையில்‌ கலப்பு ஏற்படாமல்‌ பார்த்துக்‌ கொள்ள வேண்டும்‌ எனவும்‌, வேளாண்‌ பல்கலைக்கழகம் வெளியிடும்‌ புதிய இரகங்களின்‌ விதைகள்‌ விவசாயிகளுக்கு எளிதில்‌ கிடைத்திட வழிவகை செய்திட வேண்டும்‌ மற்றும்‌ தரமான விதைகள்‌ சரியான நேரத்தில்‌ தரமாக கிடைத்திட விஞ்ஞானிகள்‌ கவனம்‌ செலுத்த வேண்டும்‌ என்று கூறினார்.

விதை அறிவியல்‌ மற்றும்‌ தொழிலநுட்பத்துறை பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌ பி.ஆர்‌. ரெங்கநாயகி அவர்கள்‌ நன்றியுரை கூறினார். இந்த 6வது விதை கருத்தரங்கில்‌ 60க்கும்‌ மேற்பட்ட வேளாண்‌ விஞ்ஞானிகள்‌ கலந்து கொண்டு 2020-21 வருடத்திற்கான விதை உற்பத்தி இலக்கு குறித்து கலந்துரையாடி முடிவு‌ செய்யப்பட்டுள்ளது.

Newsletter