பருப்பு வகைகளுக்கான விலை முன்னறிவிப்பு - வேளாண் பல்கலைக்கழகம் தகவல்

மொத்த உலக பருப்பு உற்பத்தியில்‌ நான்கில்‌ ஒரு பங்கிற்கு மேல்‌ இந்தியா பங்களிக்கின்றது. ஏற்றுமதி செய்யும்‌ பல நாடுகள்‌ தங்கள்‌ பருப்பு வகைகளை விற்பனை செய்வதற்காக இந்தியாவை நம்பியுள்ளன. இந்தியா உலகின்‌ மிகப்பெரிய பருப்பு உற்பத்தியாளர்‌ மற்றும்‌ நுகர்வோராக இருப்பினும்‌ உற்பத்தி மற்றும்‌ நுகர்வுக்கு இடையே 5-6 மிலலியன்‌ டன்கள்‌ இடைவெளி உள்ளது. இவ்விடைவெளியானது பருப்பு வகைகளை இறக்குமதி செய்வதன்‌ மூலம்‌ பூர்த்தி செய்யப்படுகிறது.

மொத்த உலக பருப்பு உற்பத்தியில்‌ நான்கில்‌ ஒரு பங்கிற்கு மேல்‌ இந்தியா பங்களிக்கின்றது. ஏற்றுமதி செய்யும்‌ பல நாடுகள்‌ தங்கள்‌ பருப்பு வகைகளை விற்பனை செய்வதற்காக இந்தியாவை நம்பியுள்ளன. இந்தியா உலகின்‌ மிகப்பெரிய பருப்பு உற்பத்தியாளர்‌ மற்றும்‌ நுகர்வோராக இருப்பினும்‌ உற்பத்தி மற்றும்‌ நுகர்வுக்கு இடையே 5-6 மிலலியன்‌ டன்கள்‌ இடைவெளி உள்ளது. இவ்விடைவெளியானது பருப்பு வகைகளை இறக்குமதி செய்வதன்‌ மூலம்‌ பூர்த்தி செய்யப்படுகிறது.

இந்திய அரசின்‌ வேளாண் நல அமைச்சகத்தின்‌ நான்காவது முன்கூட்டிய மதிப்பீட்டின்‌ படி, 2018-2019 ம்‌ ஆண்டின்‌ 23.40 மில்லியன்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. மேலும்‌, 2019-2020 ஆம்‌ ஆண்டில்‌ மொத்த பருப்பு உற்பத்தியில்‌ 26.30 மில்லியன்‌ டன்களை எட்டும்‌ என்று இந்திய அரசு எதிர்பார்க்கிறது. உளுந்து மற்றும்‌ பச்சைப்‌ பயறு , மொத்த பருப்பு உற்பத்தியில் 13.93 மற்றும்‌ 10.04 சதவீதம்‌ பஙகளிக்கினறது. இந்தியாவை தவிர பாகிஸ்தான்‌, ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ்‌ மற்றும்‌ மியான்மர்‌ ஆகிய நாடுகள்‌ பரவலாக பருப்பு வகைகளை பயிரிடுகின்றன.

உளுந்து

வேளாண்‌ நல அமைச்சகத்தின்‌ முதல்‌ முன்கூட்டிய மதிப்பீட்டின்‌ படி, 2019-2020ம்‌ ஆண்டின்‌ 2.43 மில்லியன்‌ டன்கள்‌ உளுந்து இந்தியாவில்‌ உற்பத்தி செய்யப்படும்‌ என எதிரபாரககப்படுகிறது. மத்திய பிரதேசம்‌, ஆந்திர பிரதேசம்‌, உத்திரபிரதேசம்‌, தமிழ்நாடு, ஜார்கண்ட்‌ மற்றும்‌ மகாராஷ்டிரா ஆகியவை உளுந்து அதிக அளவில்‌ பயிரிடப்படும்‌ முக்கிய மாநிலங்களாகும்‌. இம்மாநிலங்கள்‌ சேர்ந்து நாட்டின்‌ மொத்த உளுந்து உற்பத்தியில்‌ 89 சதவீதம்‌ பங்களிக்கின்றன. இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான்‌ மற்றும்‌ தாய்லாந்து ஆகியவை உளுந்து இறக்குமதி செய்யும்‌ முக்கிய நாடுகளாகும்‌. இந்த நாடுகள்‌ முக்கியமாக மியான்மார்‌, தாய்லாந்து, கனடா மற்றும்‌ ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கின்றன.

இந்திய பருப்பு தானியங்கள்‌ சங்கத்தின்‌ படி, 2019 ஆம்‌ ஆண்டில்‌ நாட்டின்‌ காப்‌ பருவ உளுந்து உற்பத்தியானது சுமார்‌ 50 சதவீதத்திற்குக் குறைந்துள்ளது. இதனால்‌ வர்த்தக அமைச்சகம்‌ மார்ச்‌ 2020 இறுதி வரை ஆலை உரிமையாளர்கள்‌ மற்றும்‌ சுத்திகரிப்பு நிறுவனங்களின்‌ இறக்குமதியை 1.5 முதல்‌ 4 இலட்சம்‌ டன்கள்‌ வரை உயர்த்தியுள்ளது. தமிழ்நாட்டில்‌ பொதுவாக 4.26 இலட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ உளுந்து பயிரிடப்பட்டு 3.01 இலட்சம்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்படுகிறது. கடலூர்‌, நாகப்பட்டினம்‌, விழுப்புரம்‌, தஞ்சாவூர்‌ மற்றும்‌ திருவாரூர்‌ ஆகியவை உளுந்து உற்பத்தி செய்யும்‌ முக்கிய மாவட்டங்களாகும்‌. ஏ.டி.டீ 3, ஏ.டி.டீ 4, ஏ.டி.டீ 5, கே.கே.எம்‌ 1, கோ 6, வம்பன்‌ 5 மற்றும்‌ வம்பன்‌ 6 ஆகிய உளுந்து இரகங்கள்‌ அதிகளவில்‌ பயிரிடப்படுகின்றன.

தற்போது, உளுந்து வரத்தானது ஆந்திர பிரதேசம்‌ மற்றும்‌ மத்திய பிரதேசம்‌ ஆகிய மாநிலங்களிலிருந்து வரத்தொடஙுகியுள்ளது. மேலும்‌, தமிழ்நாட்டிலிருந்து வரத்தானது வரும்‌ மார்ச்‌ முதல்‌ வாரத்திலிருந்து வரத்தொடங்கும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. மியான்மரிலிருந்து இறக்குமதி செய்யப்படும்‌ உளுந்தானது உள்நாட்டு சந்தையின்‌ விலையை பாதிக்கும்‌ என வர்த்தக மூலகங்கள்‌ கூறுகின்றன.

ஆ. பச்சைப்‌ பயிறு

வேளாண்‌ நல அமைச்சகத்தின்‌ முதல்‌ முன்கூட்டிய மதிப்பீட்டின்‌ படி, 2019-2020ம்‌ ஆண்டின்‌ 1.42 மில்லியன்‌ டன்கள்‌ பச்சை பயிறு இந்தியாவில்‌ உற்பத்தி செய்யப்படும்‌ என எதிர்ப்பாக்கப்படுகிறது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார்‌, ஆந்திர பிரதேசம்‌ மற்றும்‌ தமிழ்நாடு ஆகியவை பச்சைப்‌ பயறு உற்பத்தி செய்யும்‌ முக்கிய மாநிலங்களாகும்‌. இம்மாநிலங்கள்‌ சேர்ந்து நாட்டின்‌ மொத்த பச்சைப்‌ பயறு உற்பத்தியில்‌ 79 சதவீதம்‌ பங்களிக்கின்றன. மியான்மார்‌, சீனா, தான்சானியா, மொசாம்பிக்‌ மற்றும்‌ இந்தோனேசியா ஆகியவை பச்சை பயிறு இறக்குமதி செய்யும்‌ முக்கிய நாடுகளாகும்‌.

தமிழ்நாட்டில்‌, சுமார்‌ 1.89 இலட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ பச்சைப்‌ பயறு பயிரிடப்பட்டு 0.78 இலட்சம்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்படுகிறது. கோ 6, கோ 7, கோ 8 மற்றும்‌ வம்பன்‌ 3 ஆகிய பச்சைப்‌ பயறு இரகங்கள்‌ அதிகளவில்‌ பயிரிடப்பட்டு வருகின்றன. திருவாரூர்‌, நாகப்பட்டினம்‌, தூத்துக்குடி, கடலூர்‌, திருவள்ளூர்‌, சேலம்‌ மற்றும்‌ தஞ்சாவூர்‌ ஆகியவை தமிழகத்தில்‌ பச்சைப்‌ பயறு உற்பத்தி செய்யும்‌ முக்கிய மாவட்டங்களாகும்‌.

இந்தியாவின்‌ தேசிய விவசாய கூட்டுறவு சந்தைப்படுத்தல்‌ கூட்டமைப்பு ஆனது இப்பயிர்களை கொள்முதல்‌ செய்யும்‌ நிறுவனம்‌ ஆகும்‌. தூத்துக்குடி, விருதுநகர்‌ மற்றும்‌ திருவள்ளூர்‌ ஆகிய மாவட்டங்களில்‌ பச்சைப்பயிர்‌ கொள்முதல்‌ ஏற்கனவே பிப்ரவரியில்‌ தொடங்கிவிட்டது மற்றும்‌ உளுந்து கொள்முதலானது திருநெல்வேலி, திண்டுக்கல், புதுக்கோட்டை, அரியலூர்‌, திருவண்ணாமலை, கடலூர்‌, விழுப்புரம்‌ மற்றும்‌ திருப்பூர்‌ ஆகிய மாவட்டங்களில்‌ ஏப்ரல்‌ 1-ல்‌ தொடங்கும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில்‌, விவசாயிகள்‌ விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு மவளாணிமைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ வேளாளர்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில்‌ இயங்கி வரும்‌ தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின்‌ விலை முன்னறிவிப்புத்‌ திட்டம்‌, கடந்த 18 ஆண்டுகளாக விழுப்புரம்‌ ஒழுங்கு முறை விற்பனைக்‌ கூடத்தில்‌ நிலவிய உளுந்து மற்றும்‌ பச்சைப்‌ பயறு விலை மற்றும்‌ சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வுகளின்‌ அடிப்படையில்‌, அறுவடையின்‌ போது (மார்ச்‌-ஏப்ரல்‌ 2020) தரமான உளுந்தின்‌ சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 65-67 வரை இருக்கும்‌ மற்றும்‌ நல்ல தரமான பச்சைப்‌ பயறு சராசரி பண்ணை விலை கிலோவிற்கு ரூ. 68-70 வரை இருக்கும்‌ என கணிக்கப்பட்டுள்ளது. மேலும்‌, பிற மாநிலங்களிருந்து வரும்‌ வரத்து மற்றும்‌ இறக்குமதியை பொறுத்து விலையில் மாற்றம்‌ இருக்கும்‌. தற்போது, நெல்‌ தரிசு பகுதிகளில்‌ உளுந்து மற்றும்‌ பச்சைப்‌ பயறு அறுவடை தொடங்கியுள்ளது. எனவே, விவசாயிகள்‌ மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில்‌ விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்‌.

மேலும்‌ விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

உள்நாட்டு மற்றும்‌ ஏற்றுமதி சந்தைத்‌ தகவல்‌ மையம்‌,

வேளான்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

தொலைபேசி -0422-2431405

தொழில்நுட்ப விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

பயறுவகைத்‌ துறை,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

தொலைபேசி - 0422 -2450498

Newsletter