தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ புவி கேர்‌ இடையே வசம்பு 6 சதம்‌ ஈ.சி புரிந்துணர்வு ஒப்பந்தம்‌

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ கீழ்‌ இயங்கி வரும்‌ வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனரகம்‌, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால்‌ வெளியிடப்படும்‌ தொழிலநுட்பஙகள்‌, இயந்திரங்கள்‌ மற்றும்‌ வீரிய ஒட்டு ரகங்கள்‌ ஆகியவற்றை வணிகமயமாக்கி வருகின்றது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ கீழ்‌ இயங்கி வரும்‌ வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனரகம்‌, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால்‌ வெளியிடப்படும்‌ தொழிலநுட்பஙகள்‌, இயந்திரங்கள்‌ மற்றும்‌ வீரிய ஒட்டு ரகங்கள்‌ ஆகியவற்றை வணிகமயமாக்கி வருகின்றது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ புவி கேர்‌ பிரைவேட்‌ லிமிடெட்‌, திருநெல்வேலி இடையே தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக வசம்பு 6 சதம்‌ ஈ.சி என்ற பூச்சி மருந்தை பெரிய அளவில்‌ உற்பத்திக்கும்‌, விற்பனைக்கும்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ ந. குமார்‌ அவர்கள்‌ முன்னிலையில்‌ கடந்த மார்ச் 03ம் தேதி ஒரு புரி]ந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்தானது.



இந்த புதிய பூச்சிக்கொல்லி மருந்து பூச்சியியல்‌ துறை பயிர்‌ பாதுகாப்பு மையம்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ கோயம்புத்தூரில்‌ பணிபுரியும்‌

பேராசிரியர்களால்‌ கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பூச்சி மருந்து வசம்பு கிழங்கிலிருந்து எடுக்கக்கூடிய எண்ணெய்‌ கொண்டு தயார்‌ செய்யப்படுகின்றது. இந்தப்‌ பூச்சி மருந்து சேமித்து வைக்கப்பட்ட உளுந்து, பாசிப்பயறு, தட்டைப்பயிறு மற்றும்‌ கொண்டைக்கடலை விதைகளில்‌ பூச்சி தாக்குதலை ஆறு மாதத்திற்கு கட்டுப்படுத்தும்‌ திறமை படைத்தது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ சார்பில்‌ பதிவாளர்‌ முனைவர்‌. கிருஷ்ணமூர்த்தி மற்றும்‌ புவி கேர்‌ பிரைவேட்‌ லிமிடெட்‌, திருநெல்வேலி சார்பாக, நிர்வாக இயக்குனர்‌ டி.ஜி.ஆர்‌. குஞ்சரமணர ஆகியோர்‌ புரிந்துணர்வு ஒப்பந்தத்தில்‌ கையெழுத்திட்டனர்‌.

வேளாண் வணிக மேம்பாட்டு இயக்குனர்‌ முனைவர்‌. சிவகுமார்‌, பயிர்‌ பாதுகாப்பு மையத்தின்‌ இயக்குனர்‌ முனைவர்‌. கு. பிரபாகர்‌, பேராசிரியர்‌ முனைவர்‌. என்‌. முத்துகிருஷ்ணன்‌ மற்றும்‌ பேராசிரியர்‌ முனைவர்‌. சா. ஜெயராஜன்‌ நெல்சன்‌ ஆகியோர்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter