தமிழ்நாடு வேளாண்‌ பல்கலையில்‌ பூச்சி மேலாண்மை குறித்த சர்வதேச கருத்தரங்கம்‌

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ இந்திய பூச்சியியல்‌ சங்கம்‌ இணைந்து நடத்தும்‌ நாடு கடந்த பூச்சி மேலாண்மை குறித்த சர்வதேச கருத்தரங்கத்தின்‌ துவக்க விழா இன்று கோவையில்‌ உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌ நடைபெற்றது.

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ இந்திய பூச்சியியல்‌ சங்கம்‌ இணைந்து நடத்தும்‌ நாடு கடந்த பூச்சி மேலாண்மை குறித்த சர்வதேச கருத்தரங்கத்தின்‌ துவக்க விழா இன்று கோவையில்‌ உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌ நடைபெற்றது.

இக்கருத்தரங்கில்‌ பூச்சியியல்‌ துறை, நோயியல்‌ துறை மற்றும்‌ நூற்புழுவியில்‌ துறை பேராசிரியர்கள்‌ மற்றும்‌ முதுகலை ஆராய்ச்சி மாணவர்கள்‌ மற்றும்‌ பலர்‌ கலந்து கொண்டு பயன்பெற்றனர்‌.



தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ என்‌. குமார்‌ அவர்கள்‌ தனது சிறப்புரையில்‌, நாடு கடந்த பூச்சியின்‌ முக்கியத்துவம்‌ மற்றும்‌ தோட்டக்கலை பயிர்களில்‌ அதன்‌ தாக்கம்‌ குறித்து வலியுறுத்தினார்‌. கடந்த காலங்களில்‌ பூச்சிகளினால்‌ பாதிப்புக்குள்ளான தென்னை எரியோபைட்‌ சிலந்தி, தக்காளி ஊசிப்புழு, தென்னை ரூகோஸ்‌ சுருள்‌ வெள்ளைப்பூச்சி, பப்பாளி மாவுப்பூச்சி, மக்காச்சோளம்‌ படைப்புழு ஆகியவற்றில்‌ மிகப்‌பெரிய அளவில்‌ சேதம்‌ விளைவிக்கின்றன. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால்‌ பரிந்துரைக்கப்பட்ட ஒருங்கிணைந்த பூச்சிகள்‌ மேலாண்மையைப் பின்பற்றுவதன்‌ மூலம்‌ சுற்றுபுறச்‌ சூழலை சீராக்க இயலும்‌. மேலும்‌ வேளாண்‌ பொருட்களை இறக்குமதி செய்யும்‌ போது இருட்டடிப்பு முறையில்‌ நாடு கடந்து வரும்‌ பூச்சிகளை கட்டுப்படுத்தலாம்‌ என்றும்‌ கூறினார்‌.



புதுதில்லி வேளாண்மை ஒத்துழைப்பு மற்றும்‌ உழவர்‌ நலத்துறையின்‌ வேளாண்மை ஆணையர்‌ முனைவர்‌ எஸ்‌. கே. மல்கோத்ரா அவர்கள்‌ வேளாண்‌ அறிவியல் பயிற்சி மையஙகள, மாநில வேளாண் பல்கலைக்‌ கழகங்கள்‌ மற்றும்‌ மாநில வேளாண்மைத் துறைகள்‌ மூலம்‌ விவசாய சமூகத்திற்கு தேவையான பயிற்சிகள்‌ மற்றும்‌ விழிப்புணர்வு திட்டங்களின்‌ அவசியத்தை வலியுறுத்தினார்‌.

அமெரிக்காவின்‌ வர்ஜீனியா தொழில்நுட்பத்தின்‌ ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை ஆயவகத்தின்‌ இயக்குநர்‌ முனைவர்‌ ஆர்‌. முனியப்பன்‌ அவர்கள்‌ நாடுகடந்த பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்கான ஆராய்ச்சி மற்றும்‌ மேம்பாட்டு உத்திகளை வகுக்க வேண்டும்‌ என வலியுறுத்தினார்‌.



மேலும்‌, இந்நிகழ்வின்‌ தொடர்ச்சியாக தமிழ்நாடு 6வவளாணர்மை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ இந்திய பூச்சியியல்‌ சங்கம்‌ இணைந்து, எட்டு பூச்சியியல்‌ வல்லுநர்களுக்கு வாழ்நாள்‌ சாதனையாளர்‌ விருதும்‌, ஏழு பூச்சியியல்‌ வல்லுநர்களுக்குச் சிறப்பு விருதும்‌ வழங்கினார்‌. என்‌.பி.ஏ.ஐ.ஆர்‌, பெங்களூரின்‌ முன்னாள்‌ இயக்குநர்‌ முனைவர்‌ ஆர்‌.ஜே. இரபீந்திரா அவர்கள்‌ உயிரியல்‌ பூச்சி கட்டுப்பாட்டு முறையில்‌ ஈரியோபைட்‌ சிலந்தி, பப்பாளி மாவுப்‌ பூச்சி ஆகியவற்றை போன்ற பூச்சிகளை கையாளுவதில்‌ தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்‌.

இந்திய பூச்சியியல்‌ கழகம்‌, புதுதில்லி தலைவர்‌ முனைவா எஸ். என்‌. பூரி அவர்கள்‌ இந்திய பூச்சியில்‌ கழகம்‌- தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்‌ கழகம்‌, கோயம்புத்தூர்‌ கிளையினை துவங்கி வைத்தார்‌. இதில்‌ 120 மாணவர்கள்‌ மற்றும்‌ விஞ்ஞானிகள்‌ இக்கிளையில்‌ பதிவுசெய்துள்ளதாகவும்‌ கூறினார்‌. மேலும்‌, நம்‌ நாட்டிற்கும்‌ ஊடுருவிய பூச்சிகளை உயிரியல்‌ கட்டுப்பாட்டு முறை மூலம்‌ கட்டுப்படுத்துவது பற்றியும்‌ உரை நிகழ்த்தினார்‌.

நாடு முழுவதும்‌ உள்ள வேளான்‌ பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ ஆராய்ச்சி நிறுவனங்களைச் சேர்ந்த 400க்கும்‌ மேற்பட்ட விஞ்ஞானிகள்‌ மற்றும்‌ ஆராய்ச்சி மாணவர்கள்‌ பங்கேற்று தங்களின்‌ ஆராய்ச்சியை முன்வைத்தனர்‌. இந்த கருத்தரஙகளில்‌ பூச்சி வகைப்பாடு, உயிரியல்‌ பூச்சி கட்டுப்பாடு, உயிர்‌ தொழில் நுட்பவியல், ஒருங்கிணைந்த பூச்சிகள்‌ மேலாண்மை மற்றும்‌ நானோ தொழில்நுட்பஙகள்‌ ஆகிய தலைப்புகளில்‌ விவாதிக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியின்‌ தொடக்கவுரையாக தாவரப்‌ பாதுகாப்பு ஆய்வுகள்‌ மையத்தின்‌ இயக்குநர்‌ முனைவர்‌ கு. பிரபாகர்‌ அவர்கள்‌ வரவேற்புரை நிகழ்த்தினார்‌. இறுதியாக தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக பூச்சியியல்‌ துறையின்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌ ந. சாத்தையா அவர்கள்‌ நன்றியுரை வழங்கினார்‌.

Newsletter