வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ வரும் மார்ச் 9ம் தேதி முதல் வேளாண்மை வெளியிடை 2020 நிகழ்வு

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ மாணவ சமுதாயத்திற்கு வேளாண்மை சம்பந்தமான விழிப்புணர்வை ஏற்படுத்தும்‌ விதமாக 09.03.2020 மற்றும்‌ 10.3.2020 ஆகிய இரண்டு நாட்கள்‌ வேளாண்மை வெளியிடை'2020 நிகழ்வு நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வானது பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவர்களுக்குத் திறமைகளை வெளிப்படுத்தும்‌ மேடையாகவும்‌ அதே சமயத்தில்‌ வேளாண்மை பற்றிய புரிதலைக்‌ கொடுக்கும்‌ தளமாகவும்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான வினாடி வினா (தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலம்‌, பேச்சுப்போட்டி (தமிழ்‌), கவிதைப்‌ போட்டி (தமிழ்‌ மற்றும்‌ ஆங்கிலம்‌, கிறுக்கல்கள்‌, வார்த்தை விளையாட்டு போன்றனவும்‌ கல்லூரி மாணவர்களுக்கான வினாடி வினா, கவிதை, சந்தைப்படுத்துதல்‌, பேச்சுப்‌ போட்டி, புதையல்‌ வேட்டை, பானை ஓவியம்‌ போன்றவையும்‌ நடைபெறும்‌.

இந்நிகழ்வில்‌ பங்கு பெற www.agronova.oline என்ற இணையதளம்‌ மூலம்‌ 5.3.2020க்குள்‌ இலவசமாக பதிவு செய்து பங்கேற்கலாம்‌. பள்ளி மாணவர்களுக்கு நேரடி பதிவு முறை செய்யும்‌ வசதி உள்ளது. மேலும்‌ இந்நிகழ்வில்‌ காட்சிப்படுத்தப்படும்‌ வேளாண்மை சம்பந்தமான மாதிரிகள்‌ மற்றும்‌ வேளாண்மையில்‌ ஏற்படவுள்ள புதுமைகள்‌ சம்பந்தமான புகைப்படங்களையும்‌ பொதுமக்கள்‌ பார்வையிடவும்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Newsletter