தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தில்‌ பல்முனை வேளாண் காடுகள் துவக்கம்‌

கோவை: கோயம்புத்தூர்‌ தமிழ்நாடு வேளாண் பல்கலைக்‌ கழகத்தின்‌ உழவியல்‌ தறை மற்றும்‌ மேட்டுப்பாளையம்‌, வேளாண் காடுகள்‌ துறை, வனக்கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம் இணைந்து நேற்று உழவியல்‌ துறையின்‌ கிழக்குப்‌ பண்ணையின்‌ 71வது புலத்தில்‌ ஒரு பல்முனை வேளாண் வனவியல்‌ மாதிரியை நிறுவியுள்ளன.

கோவை: கோயம்புத்தூர்‌ தமிழ்நாடு வேளாண் பல்கலைக்‌ கழகத்தின்‌ உழவியல்‌ தறை மற்றும்‌ மேட்டுப்பாளையம்‌, வேளாண் காடுகள்‌ துறை, வனக்கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம் இணைந்து நேற்று உழவியல்‌ துறையின்‌ கிழக்குப்‌ பண்ணையின்‌ 71வது புலத்தில்‌ ஒரு பல்முனை வேளாண் வனவியல்‌ மாதிரியை நிறுவியுள்ளன.



மேட்டுப்பாளையம்‌ வனக்கல்லூரி முதல்வர்‌ முனைவர்‌. கே.டி. பார்த்திபன்‌ அவர்கள்‌ பலமுனை வேளாண் வனவியல்‌ மாதிரியின்‌ பயன்பாடு குறித்து விளக்கம்‌ அளித்தார்‌. மரம்‌ நடுவிழாவினை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ பேராசிரியர்‌ (முனைவர்‌) ந. குமார்‌ அவர்கள்‌ துவக்கி வைத்தார்‌. இந்த விழாவிற்கு ராஜஸ்தானில்‌ உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்திற்குட்பட்ட மத்திய வறண்ட தோட்டக்கலை மையத்தின்‌ இயக்குநர்‌ பேராசிரியர்‌ முனைவர்‌. பி.எல்‌. சரோஜ்‌ கலந்து கொண்டு சிறப்பித்தார்.

சிறு மற்றும்‌ குறு விவசாயிகள்‌ பயன்‌பெறும்‌ வகையில்‌ செம்மரம்‌, கடம்பு, தேக்கு மற்றும்‌ முருங்கை வகை மரங்கள்‌ ஏக்கருக்கு 250 மரங்கள்‌ என்ற அளவில்‌ நடப்பட்டது. மேலும்‌ கருவேப்பிலை, காய்கறிப்‌ பயிர்கள்‌ போன்ற ஊடுபயிர்களும்‌ நடப்பட்டன. மாதிரியில்‌ மேற்கொள்ளப்படும்‌ நடவடிக்கைகளை கண்காணிக்க மாதிரியின்‌ மையத்தில்‌ ஒரு குடிசை அமைக்கப்பட்டுள்ளது.

முனைவர்‌ என்‌. சக்திவேல்‌, இணைப்‌ பேராசிரியர்‌ (பண்ணை), முனைவர்‌. ஆர்‌. கார்த்திகேயன்‌, பண்ணை மேலாளர்‌ (கிழக்குப்‌ பண்ணை), முனைவர்‌. எஸ்‌.கே. நடராஜன்‌, பண்ணை மேலாளர்‌ (மத்தியப்‌ பண்ணை), முனைவர்‌, ந. தவப்பிரகாஷ்‌ பண்ணை மேலாளர்‌ (நன்செய்‌ பண்ணை) ஆகியோர்‌ பல்முனை வேளாண் வனவியல்‌ மாதிரி நிறுவுதலுக்குத் தேவையான ஏற்பாடுகளை செய்தனர்‌.

பல்கலைக்கழகத்தின்‌ உயர்‌ அதிகாரிகள்‌ ராஜஸ்தான்‌ வேளாண் பல்கலைக்கழக அதிகாரிகள்‌, பேராசிரியர்கள்‌ மற்றும்‌ தலைவர்கள்‌ மற்றும்‌ மாணவர்கள்‌ இந்த விழாவில்‌ பங்கேற்று மரக்கன்றுகளை நட்டனர்‌.

முன்னதாக, பயிர்‌ மேலாண்மைத்‌ துறை இயக்குநர்‌ முனைவர்‌. வெ. கீதாலட்சுமி, வரவேற்புரையும்‌ உழவியல்‌ துறையின்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌ சி.ஆர்‌.சின்னமுத்து நன்றியுரையும்‌ வழங்கினர்‌.

Newsletter