மிளகாயின்‌ பண்ணை விலை கிலோவிற்கு 160 முதல்‌ 170 ரூபாயாக இருக்கும்‌ - வேளாண் பல்கலைக்கழகம் தகவல்

மிளகாய்‌, மசாலா மூலப்பொருளாகவும்‌ மற்றும்‌ சுவையூட்டியாகவும்‌ பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இது கேப்சைசின்‌ கொண்டிருப்பதால்‌ சாப்பிடும்போது எரியும்‌ உணர்ச்சியைத்‌ தருகிறது. மேலும்‌ கேப்சாந்தின்‌ இருப்பதால்‌ சிவப்பு நிறத்தில்‌ உள்ளது. மிளகாய்‌ அவற்றின்‌ காரத்தன்மை மற்றும்‌ நிறத்தின்‌ அடிப்படையில்‌ மதிப்பிடப்படுகிறது. மிளகாயில்‌ சோடியம்‌ மற்றும்‌ கொழுப்பின்‌ அளவு குறைவாகவும்‌, வைட்டமின்‌ ஏ, வைட்டமின்‌ சி, வைட்டமின்‌ ஈ, பொட்டாசியம்‌ மற்றும்‌ & போலிக்‌ அமிலம்‌ அளவு அதிகளவிலும்‌ உள்ளது.


மிளகாய்‌, மசாலா மூலப்பொருளாகவும்‌ மற்றும்‌ சுவையூட்டியாகவும்‌ பரவலாக பயன்படுத்தப்படுகிறது. இது கேப்சைசின்‌ கொண்டிருப்பதால்‌ சாப்பிடும்போது எரியும்‌ உணர்ச்சியைத்‌ தருகிறது. மேலும்‌ கேப்சாந்தின்‌ இருப்பதால்‌ சிவப்பு நிறத்தில்‌ உள்ளது. மிளகாய்‌ அவற்றின்‌ காரத்தன்மை மற்றும்‌ நிறத்தின்‌ அடிப்படையில்‌ மதிப்பிடப்படுகிறது. மிளகாயில்‌ சோடியம்‌ மற்றும்‌ கொழுப்பின்‌ அளவு குறைவாகவும்‌, வைட்டமின்‌ ஏ, வைட்டமின்‌ சி, வைட்டமின்‌ ஈ, பொட்டாசியம்‌ மற்றும்‌ & போலிக்‌ அமிலம்‌ அளவு அதிகளவிலும்‌ உள்ளது.

இந்தியா, உலகின்‌ மசாலா கிண்ணம்‌ என்று பிரபலமாக அறியப்படுகிறது. மேலும்‌, மிளகாய்‌ உற்பத்தி, நுகர்வு மற்றும்‌ ஏற்றுமதியில்‌ மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கிறது. உலகளவில்‌ சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியா மிளகாய்‌ உற்பத்தியில்‌ முன்னணியில்‌ உள்ளது. இந்தியா மசாலா வாரியம்‌ கணக்கெடுப்பின்படி 2018-19 ஆம்‌ ஆண்டில்‌ , இந்தியாவில்‌ 7-21 லட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ மிளகாய்‌ பயிரிடப்பட்டு 16.89 இலட்சம்‌ டன்‌ உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்திய மிளகாயின்‌ நிறம்‌ மற்றும்‌ காரத்தன்மை காரணமாக வணிகத்தில்‌ முக்கியபங்கு வகிக்கின்றது. இந்தியாவிலிருந்து மிளகாய்‌ சீனா, வியட்நாம்‌, தாய்லாந்து, இலங்கை, வங்கதேசம்‌ மற்றும்‌ ஐக்கிய அரபு நாடுகளுக்கு முக்கியமாக ஏற்றுமதி செய்யப்படுகிறது.

வர்த்தக மூலங்களின்படி, கொரோனா வைரசின்‌ தாக்கத்தினால்‌ சீனாவிற்கான மிளகாய்‌ ஏற்றுமதி குறைவதற்கான வாய்ப்புகள்‌ உள்ளன. எனினும்‌, அக்டோபர்‌ மாதத்தில்‌ தமிழ்நாடு, மத்தியப்பிரதேசம்‌ மற்றும்‌ கர்நாடகாவில்‌ பெய்த கனமழையால்‌ பயிர்கள்‌ சேதம்‌ அடைந்து வரத்து குறைவால்‌ விலை உயர்ந்துள்ளது.

இந்தியாவில்‌, ஆந்திர பிரதேசம்‌ (49 சதவீதம்‌), கர்நாடகா (18 சதவீதம்‌), மகாராஷ்டிரா (6 சதவீதம்‌) மற்றும்‌ தமிழ்நாடு (3 சதவீதம்‌) ஆகியவை மிளகாய்‌ பயிரிடப்படும்‌ முக்கிய மாநிலங்களாகும்‌. தமிழ்நாட்டில்‌, 2018-2019ம்‌ ஆண்டில்‌ 46,873 எக்டர்‌ பரப்பளவில்‌ மிளகாய்‌ பயிரிடப்பட்டு 21,693 டன்கள்‌ உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. முண்டு மற்றும்‌ சன்னம்‌ இரகம்‌ தமிழகத்தில்‌ அதிகளவில்‌ பயிரிடப்படுகின்றன. தமிழகத்தில்‌ இராமநாதபுரம்‌ மற்றும்‌ தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில்‌ முண்டு இரகமும்‌, சிவகங்கை, விருதுநகர்‌ மற்றும்‌ திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில்‌ சன்னம்‌ இரகமும்‌ பெருமளவில்‌ பயிரிடப்படுகின்றன. மிளகாய்‌ அதிகளவில்‌ விளைவிக்கும்‌ மாவட்டங்களில்‌ விதைப்பு பொதுவாக அக்டோபர்‌ மாதத்தில்‌ நடைபெறுகிறது.

இந்தியாவில்‌ மிளகாய்‌ சந்தைக்கு வரத்தானது நவம்பர்‌ முதல்‌ மே வரை இருக்கும்‌. மிளகாய்‌ வரத்து நவம்பர்‌ மாதத்தில்‌ மத்தியப்பிரதேசம்‌ மற்றும்‌ கர்நாடகாவிலிருந்து, அதனை தொடர்ந்து டிசம்பர்‌ மாதத்தில்‌ மகாராஷ்டிரா மற்றும்‌ ஆந்திர பிரதேசம்‌ ஆகிய மாநிலங்களிலிருந்து வருகிறது. தமிழ்நாட்டில்‌ உற்பத்தி செய்யப்பட்ட மிளகாயானது கோவில்பட்டி, சாத்தூர்‌, சங்கரன்கோவில், இராஜபாளையம்‌, கமுதி, முதுகுளத்தூர்‌. ஆர்‌.எஸ்‌.மங்களம்‌, அருப்புக்கோட்டை, வத்திராயிருப்பு மற்றும்‌ விருதுநகர்‌ சந்தைக்கு வரத்து மார்ச்‌ முதல்‌ மே வரை அதிகமாக வருகிறது. தமிழ்நாட்டில்‌ ஒருபோகம்‌ பயிர்‌ சாகுபடி நடைமுறையில்‌ உள்ளது. எனவே வியாபாரிகள்‌ மிளகாய்‌ அறுவடையின்‌ போது, அதிகளவில்‌ கொள்முதல்‌ செய்து இருப்பு வைப்பதன்‌ மூலம்‌ ஆண்டு முழுவதற்கான, தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌, வேளான்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில்‌ இயங்கி வரும்‌ தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின்‌ முன்னறிவிப்புத்‌ திட்டம்‌, கடந்த 19 ஆண்டுகளான இராமநாதபுரத்தில்‌ உள்ள ஒழுங்கு முறை விற்பனைக்‌ கூடத்தில்‌ நிலவிய மிளகாய்‌ விலை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வுகளின அடிப்படையில்‌, தரமான மிளகாயின்‌ பண்ணை விலை (மார்ச்‌ 2020 முதல்‌ செப்டம்பர்‌ 2020) கிலோவிற்கு ரூ.160 முதல்‌ 170 ஆக இருக்கும்‌. எனவே, விவசாயிகள்‌ மேற்கொண்ட விலையின்‌ அடிப்படையில் சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும்‌ விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

உள்நாட்டு மற்றும்‌ ஏற்றுமதி சந்தைத்‌ தகவல்‌ மையம்‌,

வேளான்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயமுத்தூர்‌ - 641 003.

தொலைபேசி- 0422-2431405

மேலும்‌ தொழில்நுட்ப விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

வாசனை மற்றும்‌ நறுமணப்‌ பொருட்கள்‌ துறை,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

தொலைபேசி- 0422-6611284

Newsletter