வேளாண்‌ காடுகள்‌ வழி மரச்சாகுபடியில்‌ வழிகாட்டும்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

இந்தியா முழுவதும்‌ உள்ள மரச்சாகுபடியாளர்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ மேட்டுப்பாளையம்‌ வனக்கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌ ஒப்பந்த மரச்சாகுபடி திட்டத்தைத்‌ தொடங்க உள்ளது.

இந்தியா முழுவதும்‌ உள்ள மரச்சாகுபடியாளர்களின்‌ நலனைக்‌ கருத்தில்‌ கொண்டு தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ மேட்டுப்பாளையம்‌ வனக்கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌ ஒப்பந்த மரச்சாகுபடி திட்டத்தைத்‌ தொடங்க உள்ளது.

வரும்‌ பிப்ரவரி 27 மற்றும்‌ 28ம் தேதி மேட்டுப்பாளையம்‌ வனக்கல்லூரியில்‌ தொழில்‌ சார்ந்த வேளாண்‌ காடுகள்‌ கூட்டமைப்பின்‌ நான்காவது பயிலரங்கம்‌ நடைபெறவுள்ளது. நாடெங்கும்‌ வேளாண்‌ காடுகளுக்கான தேவை நாளுக்கு நாள்‌ அதிகரித்து வரும்‌ வேளையில்‌ தொழிற்சாலைகளுக்காகவும்‌ வீட்டுத்‌ தேவைகளுக்காகவும்‌ பெருமளவு மரங்களை வளர்க்க வேண்டிய கட்டாயத்தில்‌ உள்ளோம்‌. இருந்த போதிலும்‌ வேளாண்‌ காடுகள்‌ வளர்ப்பு பல்வேறு இடர்பாடுகளைச்‌ சந்தித்து வருகிறது. கடந்த 2014ம்‌ ஆண்டு வெளியிடப்பட்ட தேசிய வேளாண்‌ காடுகள்‌ கொள்கையின்‌ படி அரசு சார்ந்த ஆராய்ச்சி நிறுவனங்களின்‌ பங்களிப்பை வலியுறுத்துகிறது.

இந்த பின்புலத்தில்‌ மேட்டுப்பாளையம்‌ வனக்கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தில்‌ நாடளாவிய மரம்‌ சார்ந்த தொழிற்சாலைகள்‌, அறிவியலாளர்கள், நிதி மற்றும்‌ காப்பீட்டு நிறுவன அலுவலர்கள்‌, அரசுத்துறை அலுவலர்கள்‌, முன்னோடி சாகுபடியாளர்கள்‌, மரம்‌ வெட்டுவோர்‌ மற்றும்‌ விற்பனையாளர்‌ குழுக்கள்‌, கிராமப்புற நிறுவனங்கள்‌, அரசு சாரா நிறுவனங்கள்‌, மகளிர்‌ சுய உதவிக்‌ குழுக்கள்‌ மற்றும்‌ உழவர்‌ உற்பத்தியாளர்‌ குழுக்கள்‌ ஆகியவற்றை உறுப்பினர்களாகக்‌ கொண்ட “தொழிற்சாலை சார்ந்த வேளானர்‌ காடுகள்‌ கூட்டமைப்பு” உருவாக்கப்பட்டுள்ளது.

இக்‌கூட்டமைப்பின்‌ வாயிலாக மேற்கொள்ளப்படும்‌ ஒப்பந்த முறை மரம்‌ வளர்ப்பின்‌ வாயிலாக குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும்‌ காப்பீடு ஆகியவை பின்பற்றப்படுகிறது. மரம்‌ வெட்டுதல்‌, தொழிற்சாலைகளுக்கான போக்குவரத்து போன்ற‌ வசதிகளுக்கு கூட்டமைப்பு வழிகாட்டுவதால்‌ மரம்‌ வளர்ப்பில்‌ உழவர்கள்‌ மிகுந்த ஈடுபாடு காட்டி வருகின்றனர்‌. நாடெங்கும்‌ ஒரு லட்சம்‌ எக்டர்‌ பரப்பளவுக்கு மேல்‌ காகிதம்‌, மரக்கூழ்‌, ஒட்டுப்‌ பலகை, பலகை, தீக்குச்சி மற்றும்‌ இதர தொழிற்சாலைகளின்‌ தேவைகளுக்காக வேளான்‌ காடுகள்‌ உருவாக்கப்பட்டிருப்பதே இக்கூட்டமைப்பின்‌ வெற்றிக்குச்‌ சான்றாகும்‌.

இச்செயல்பாடுகளை வலுப்படுத்த வேளாண்‌ காடுகளின்‌ மூலம்‌ உருவாக்கப்படும்‌ மரம்‌ சார்‌ பொருட்களின்‌ விற்பனையை எளிமைப்படுத்துவது அவசியமாகும்‌. இதனைக்‌ கருத்தில்‌ கொண்டு தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ மதுரையை சார்ந்த சுரேஷ்‌ மாஸ்‌ மார்கெட்டிஙி நிறுவனத்துடன்‌ இணைந்து தடிமர ஒப்பந்த சாகுபடி முறையை அறிமுகப்படுத்தவுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ கண்டறிந்துள்ள சிறந்த மரப்பயிர்‌ இரகங்களை ஒப்பந்தமுறை சாகுபடியில்‌ பயிரிடும்‌ திட்டம்‌ உள்ளது. நடைபெறவுள்ள தொழில்‌ சார்ந்த வேளாண்‌ காடுகள்‌ கூட்டமைப்பின்‌ பயிலரங்கில்‌ இக்கூட்டமைப்பின்‌ ஒருங்கிணைப்பாளர்‌ மற்றும்‌ வனக்கல்லூரி முதல்வர்‌ முனைவர்‌ கா.தா. பார்த்திபன்‌ அறிமுகவுரையாற்றவுள்ளார்‌. சுரேஷ்‌ மாஸ்‌ மார்கெட்டிங மமலாண/மை இயக்குநர்‌ சுரேஷ்கணணன, தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழக பதிவாளர்‌ முனைவர்‌ à®….ச. கிருட்டிணமூர்த்தி ஆகியோர்‌ பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர்‌.

தமிழ்நாடு அரசின்‌ முதன்மை கூடுதல்‌ தலைமை வனப்பாதுகாவலர்‌ முனைவர்‌. சுஹதோ தத்‌, இ.வ.ப., சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்‌. தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ ந. குமார்‌ அவர்கள்‌ கலந்து கொண்டு புதிய வெளியீடுகளை வெளியிடுவதோடு ஒப்பந்த முறை சாகுபடி திட்டத்தையும்‌ தொடங்கி வைக்கிறார்‌. வேளாண்‌ காடுகள்‌ துறைத்‌ தலைவர்‌ முனைவர்‌ ஐ. சேகர்‌ நன்றியுரையாற்றுகிறார்‌. தொடக்க விழாவைத்‌ தொடர்ந்து தொழில்நுட்ப அமர்வுகளும்‌ வயல்வெளி பயணங்களும்‌ நடைபெற உள்ளன.

மேலும்‌ விவரங்களுக்கு

முதல்வர்‌ (வனவியல்)‌

வனக்கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

மேட்டுப்பாளையம்‌ - 641301

தொலைபேசி - 04254 - 222010.

Newsletter