அங்கக விவசாயம்‌, செலவில்லா இயற்கை விவசாயம்‌ குறித்து கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌ அங்கக கருத்துக்கேட்பு கூட்டம்

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகததில்‌ அங்கக வேளாண்மை பங்குதாரர்கள்‌ பங்கேற்ற அங்கக தொழில்நுட்பம்‌ பற்றியான கலந்துரையாடல்‌ இன்று பிப் 21 ஆம் தேதி நடைபெற்றது.

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகததில்‌ அங்கக வேளாண்மை பங்குதாரர்கள்‌ பங்கேற்ற அங்கக தொழில்நுட்பம்‌ பற்றியான கலந்துரையாடல்‌ இன்று பிப் 21 ஆம் தேதி நடைபெற்றது.

முன்னோடி விவசாயிகள்‌, அங்கக பொருட்களை சந்தைப்படுத்துபவா்கள்‌, உறபததியாளர்கள்‌, வர்த்தகர்கள்‌, அங்கக சான்றிதழ் அதிகாரிகள், கல்வியாளர்கள்‌, நுகர்வோர்‌ மற்றும்‌ கொள்கை வகுப்பாளர்கள்‌ என பலதரப்பினரும்‌ பங்கேற்று அவர்களின்‌ பல்வேறு விதமான அனுபவங்களை விவாதித்தனர்‌. 

தமிழ்நாட்டில்‌ பல்வேறு பகுதியிலிருந்து சுமார்‌ 50 இக்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள்‌ கலந்துகொண்ட இந்நிகழ்வின்‌ துவக்க விழா இன்று நடந்தேறியது. இந்த பங்குதாரர்களின்‌ கூட்டத்தின்‌ முக்கிய நோக்கமானது அங்கக காய்கறி வேளாண்மை பயிரிடுதல்‌, தரமான காய்கறிகள்‌ சாகுபடி குறைந்த செலவில்‌ பயிரிடுதல்‌, வலுவான விநியோக சங்கிலி உருவாக்குதல்‌ அங்கக காய்கறி சாகுபடியை ஊக்குவித்தல்‌ போன்றவையாகும்‌.



பேராசிரியா்‌. முனைவா்‌. ந.குமார், துணை வேந்தா, தமிழ்நாடு வேளாணர்மை பல்கலைக்கழகம்‌, கோவை அவர்கள்‌ அங்கக விவசாயிகளின்‌ விவரம்‌ அடங்கிய புத்தகத்தை வெளியிட்டு தமது தலைமையுரையில்‌ செலவு குறைந்த (ITK) பழமையான அல்லது முந்தைய கால தொழிலநுட்பத்தின்‌ அறிவியல்‌ தன்மையை à®†à®¯à¯à®µà¯ செய்ய வேண்டும் எனவும்‌ அறிவியல்‌ பூர்வமாக இயற்கை விவசாயம்‌, அங்கக விவசாயம்‌, செலவில்லா இயற்கை விவசாயம்‌ ஆகியன குறித்து ஆய்வு செய்ய வேண்டும் எனவும்‌ வலியுறுத்தினார்‌.

மேலும்‌, அங்கக விவசாயம்‌, செலவில்லா இயற்கை விவசாயம்‌ பொருட்களின்‌ தரத்தையும்‌ மற்றும்‌ அதன்‌ பண்புகளையும்‌ அறியும்‌ ஆராய்ச்சியில்‌ கவனம்‌ செலுத்த வேண்டும்‌ என்றும்‌ அங்கக வேளாண்மை குறித்த அனைத்து ஆய்வுகளையும் இப்பல்கலைக்கழகத்தில்‌ வளங்குன்றா அங்கக வேளாண் துறையில்‌ மேம்பட்ட கருவிகள்‌ கொண்ட ஆய்வக வசதி இருப்பதால்‌ அங்கக வேளாண்மையில்‌ தொடர்புடைய அனைவரும்‌ பயன்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌ என்றார்‌.

பல்கலைக்கழக ஆராயச்சி இயக்குநர் முனைவா்‌. கே.எஸ்‌.சுப்ரமண்‌யன்‌ தமது சிறப்புரையில்‌ மண்ணின்‌ கரிமச்சத்தளவை அதிகரிப்பதன்‌ மூலம் அங்கக வேளாண்‌ உற்பததியை பெருக்க இயலும்‌. அதனைத்‌ தொடாந்து முனைவர்‌. கே.ஆர்‌. அசோக்‌ (வேளான்‌ மற்றும்‌ ஊரக மேம்பாடு) அவர்கள்‌ தமது உரையில்‌ இடுபொருட்களின்‌ விலை நிர்ணயம்‌ மற்றும்‌ உணவு பாதுகாப்பு குறித்த கருத்தாய்வுகள்‌ மேற்கொள்ளப்பட வேண்டும்‌ என வலியுறுத்தினார்‌.

முனைவர்‌. எல. புகழேந்தி, முதன்மையர்‌ (தோட்டக்கலை) அவர்கள்‌ அங்கக காய்கறி சாகுபடி தொழிலில்‌ ஈடுபடுபவர்களுக்கு வருங்காலங்களில்‌ அதிக மதிப்பு கிடைக்கும்‌ எனவும்‌ உடல்‌ நலனில்‌ அக்கறை கொண்ட அனைவரும்‌ அங்கக முறையில்‌ விளைவிக்கப்படும்‌ காய்கறி மறறும்‌ கனிகளை நாடுவதால்‌ நல்ல உள்நாட்டு சந்தை உள்ளது எனவும்‌ கூறினார்‌.

திருமதி. சித்ரா தேவி, வேளாண் இணை இயக்குநர், கோவை மற்றும் இயக்குநர்‌ (அங்கக சான்றிதழ், கோவை ஆகியோரும்‌ இக்கூட்டத்தில்‌ பங்கேற்று தமது அனுபவங்களையும்‌ அங்கக வேளாண்மையில்‌ அரசின்‌ ஆதரவு பற்றியும்‌ அங்கக சானறிதழ்‌ பெறுவது குறிதீதும்‌ அதன்‌ விதிகள்‌ மற்றும்‌ நெறிமுறைகளையும்‌ தெளிவாக விவரித்தார்கள்‌.

முன்னதாக பயிர்‌ மேலாண்மை இயக்குநர்‌ முனைவர்‌. வெ. க தாலெட்சுமி இக்கூட்டம்‌ நடைபெறுவதற்கான காரணங்களை விளக்கியதோடு வரவேற்புரையும்‌ கூறினார்‌. இறுதியாக அங்கக வேளாண்மை துறை பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌. ஏ. சோமசுந்தரம்‌ நன்றியுரை வழங்கினார்‌. 

Newsletter