வேளாண் பல்கலையில் கொடிக்கால்‌ பயிர்களில்‌ நூற்புழு பாதிப்பை கண்டறிதல்‌ மேலாண்மை குறித்த பயிற்சி

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, நூற்புழுவில்‌ துறை சார்பில்‌ கொடிக்கால்‌ பயிர்களில்‌ நூற்புழு பாதிப்பை கண்டறிதலும்‌ மேலாண்மையும்‌ குறித்த பயிற்சி பொள்ளாச்சி வேட்டைக்காரனபுதூர்‌ கொடிக்கால்‌ பயிர்‌ செய்யும்‌ விவசாயிகளுக்கு 20.02.2020 (வியாழக்கிழமை; அகில இந்திய ஒருங்கிணைந்த நூற்புழு ஆராய்ச்சி திட்டத்தின்‌ கீழ்‌ வழங்கப்பட்டது.

முன்னதாக முனைவர்‌ ப.கலையரசன், உதவிப்‌ பேராசிரியர்‌(நூற்புழுவியலி அவர்கள்‌ விவசாயிகளை வரவேற்று தாவர நூற்புழுக்கள்‌ மற்றும்‌ அதன்‌ பாதிப்பின் அறிகுறிகளைப்‌ பற்றி எடுத்துரைத்தார்‌. மேலும்‌ தாவர நூற்புழுக்களையும், பாதிக்கப்பட்ட வேர்களையும்‌ முறையே நுண்ணோக்கி மற்றும்‌ நேரடியாகவும்‌ விவசாயிகளுக்கு காண்பிக்கப்பட்டது. அடுத்தபடியாக தாவர நூற்புழு மற்றும்‌ பூஞ்சான, பாக்டீரிய கூட்டு நோய்கள்‌ எவ்வாறு கொடிக்கால்‌ பயிரினைத்‌ தாக்கி அதிக இழப்பினை ஏற்படுத்துவதுடன்‌ பயிர்களை முற்றிலும்‌ அழிக்கும்‌ என்பதை முனைவர்‌ மு. கார்த்திகேயன்‌, உதவி பேராசிரியர்‌(பயிர் நோயியல்)‌ அவர்கள்‌ விளக்கினார்‌.

முனைவர்‌ நா.சுவர்ணகுமாரி உதவி பேராசிரியர்‌ (நூற்புழுவியல) அவர்கள்‌ உயிரியல்‌ முறையில்‌ நன்மை செய்யும்‌ நூற்புழுக்கொல்லி பூசணங்கள்‌ அதனை எவ்வாறு தொழு உரத்துடன்‌ கலந்து அதிகமாக பெருக்கி பயிர்களுக்கு இட்டு தாவர நூற்புழுக்களை கட்டுப்படுத்தலாம்‌ என்பதனை செயல் விளக்கம்‌ செய்துகாட்டினார்‌.

இவ்வயல்‌ விழாவில்‌ சுபசக்தி முன்னோடி கொடிக்கால்‌ விவசாயி அவர்கள்‌ நன்றி கூறினார்‌. இவ்வயல்‌ விழாவில்‌ 30க்கும்‌ மேற்பட்ட கொடிக்கால்‌ விவசாயிகள்‌ பங்குபெற்று பயனடைந்தனர்‌.

Newsletter