தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ சினஜென்டா இணைந்து மேற்கொள்ளும்‌ பயிர்‌ பாதுகாப்பு ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்து

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, வேளாண் வணிக சின்ஜென்டாவுடன்‌ இணைந்து மேற்கொள்ளவிருக்கும்‌ வேளாண் குறித்த ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது கடந்த பிப்ரவரி 5ம் தேதி கையெழுத்திடப்பட்டது.

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, வேளாண் வணிக சின்ஜென்டாவுடன்‌ இணைந்து மேற்கொள்ளவிருக்கும்‌ வேளாண் குறித்த ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தமானது கடந்த பிப்ரவரி 5ம் தேதி கையெழுத்திடப்பட்டது. 

இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்‌ à®…டிப்படையில்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகமானது சின்ஜென்டாவுடன்‌ இணைந்து வேளாண்‌ மற்றும்‌ தோட்டக்கலைப்‌ பயிர்களில்‌ பூச்சிகள்‌, நோய்கள், நூற்புழுக்கள்‌ மற்றும்‌ களைகள்‌ மேலாண்மை குறித்த ஆராய்ச்சியில்‌ ஈடுபட்டுள்ளது.

முனைவர்‌ கு.பிரபாகர்‌, இயக்குநர்‌ (பயிர் பாதுகாப்பு மையம்‌ சின்‌ஜென்டா பிரமுகர்களை வரவேற்று இந்த கூட்டு ஆராய்ச்சி குறித்த திட்டங்களை எடுத்துரைத்தார்‌. முனைவர்‌. பழனிச்சாமி, சின்ஜென்டா பூச்சிக்கொல்லி பிரிவின்‌ தலைவர்‌ அவர்கள்‌ சின்ஜென்டாவின்‌ அண்மைக்கால ஆராய்ச்சி முறைகள்‌ மற்றும்‌ அவற்றிற்கான முதலீடுகள், புதிய பூச்சி மற்றும்‌ நோய்க்‌ கொல்லிகளின்‌ கண்டுபிடிப்பு மற்றும்‌ வளர்ச்சி, வணிக ரீதியான இனக்கவர்ச்சிப்‌ பொறிகள்‌, இயற்கை எதிரிகள்‌ மற்றும்‌ நுண்ணுயிர்கள்‌ உற்பத்தி குறித்து எடுத்துரைத்தார்‌. வேளாண் பல்கலையின் துணைவேந்தர்‌ ந.குமார்‌ அவர்கள்‌ சின்ஜென்டா உழவர்‌ பெருமக்களுக்காக செய்து வரும்‌ ஆராய்ச்சிகள்‌ குறித்துப்‌ பாராட்டினார்‌. 

மேலும்‌, இந்த புரிந்துணர்வு ஒப்பந்தமானது புதிய வகை பூச்சிகள்‌, நோய்கள்‌ மற்றும்‌ வெட்டுக்கிளிகளின் சேதத்தை கட்டுப்படுத்துவதற்கும்‌, புதிய மேலாண்மை உத்திகளை வகுப்பதற்கும்‌ உதவியாக இருக்கும்‌ என்றும்‌ குறிப்பிட்டார்‌. வேளாண்‌ விரிவாக்கத்தில்‌, அரசு மற்றும்‌ தனியார் நிறுவனங்களின் கூட்டுசார்‌ ஆராய்ச்சியின்‌ பங்களிப்பு குறித்தும்‌ வலியுறுத்தினார்‌.

Newsletter