இஸ்ரேல்‌ நாட்டின்‌ கவுன்சில்‌ ஜெனரல்‌ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு வருகை

கோவை: இஸ்ரேல்‌ நாட்டின்‌ மேன்மைமிகு கவுன்சில்‌ ஜெனரல்‌ மிஸ்‌ தனா குர்ஸ்‌ அவர்கள்‌ பரஸ்பர நன்மை பயக்கும்‌ கூட்டு ஆராய்ச்சி தொடர்பான உரையாடலை கடந்த 29ம் தேதி கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌ ஆரம்பித்து வைத்தார்‌.

கோவை: இஸ்ரேல்‌ நாட்டின்‌ மேன்மைமிகு கவுன்சில்‌ ஜெனரல்‌ மிஸ்‌ தனா குர்ஸ்‌ அவர்கள்‌ பரஸ்பர நன்மை பயக்கும்‌ கூட்டு ஆராய்ச்சி தொடர்பான உரையாடலை கடந்த 29ம் தேதி கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌ ஆரம்பித்து வைத்தார்‌.

துணைவேந்தர்‌ முனைவர்‌ நீ.குமார்‌ அவர்கள்‌ மலர்க்கொத்து கொடுத்து இஸ்ரேல்‌ நாட்டின்‌ கவுன்சில்‌ ஜெனரல்‌ அவர்களை அன்புடன்‌ வரவேற்றார்‌. ஆராய்ச்சி இயக்குநர்‌ முனைவர்‌ கீ.செ.சுப்ரமணியன்‌ அவர்கள்‌ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ சாதனைகள்‌ மற்றும்‌ செயல்பாடுகளை எடுத்துரைத்துக் கூட்டு ஆராய்ச்சி செய்யக்கூடிய திட்டப்பிரிவுகளை முன்வைத்தார்‌. இவைகள்‌ நவீன கால எதிர்பார்ப்பான பூச்சி, நோய்‌ மற்றும்‌ சத்துக் குறைபாடு குறித்து முன்னரே அறிவதற்கான உணர்வு கருவிகள்‌ (Sensors), பயிர்‌ ஆரோக்கிய கண்காணிப்பிற்கான செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence), இடுபொருள்‌ இடுவதற்கான டிரோன்‌ தொழிற்நுட்பம்‌ (Drone) மற்றும்‌ வேளாண்மையில்‌ ரோபோடிக்ஸின்‌ பங்கு ஆகியன ஆகும்‌. மேலும்‌ இந்தியாவில்‌ ராஜஸ்தானிற்கு அடுத்தப்படியாக தமிழ்நாடு வறட்சி பாதிக்கும்‌ மாநிலமாக உள்ளதால்‌, இஸ்ரேல்‌ நாட்டின்‌ நா மேலாண்மை தொழிற்நுட்பங்கள்‌ குறித்து தெரிந்து கொள்ள வேண்டியதன்‌ அவசியத்தை வலியுறுத்தினார்‌. இஸ்ரேலியா்கள்‌ நார மேலாண்மை புக்திகளில்‌ சிறந்து விளங்குபவர்கள்‌ என்பது அனைவருக்கும்‌ தெரிந்த ஒன்றே.



இஸ்ரேல்‌ நாட்டின்‌ கவுன்சில்‌ ஜெனரல்‌ அவர்கள்‌ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌ மற்றும்‌ இஸ்ரேல்‌ நாட்டின்‌ ஆராய்ச்சி நிறுவனங்கள்‌/பல்கலைக்கழகங்கள்‌ உடன்‌ கூட்டு ஆராய்ச்சி திட்டங்களை வரவேற்பதாகவும்‌, ஒத்துழைப்பு நல்குவதாகவும்‌ தெரிவித்தார்‌. மிஸ்‌. தனா குர்ஸ்‌ அவர்கள்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ சாதனைகள்‌ மற்றும்‌ செயல்பாடுகளால்‌ ஈர்க்கப்பட்டார்‌. அவர்‌ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ நானோ தொழிற்நுட்ப ஆராய்ச்சி மற்றும்‌ வளர்ச்சி நடவடிக்கைகளை மேலும்‌ வலிமையாக்க ஆர்வத்தினை தெரிவித்தார்‌. அவர்‌ பல்கலைக்கழக பழ பண்ணையின்‌ அடர்‌ மாமர நடவினை பார்வையிட்டு, இத்தொழில்நுட்பத்தினை வடிவமைத்த பல்கலைக்கழக துணைவேந்தருடன்‌ கலந்துரையாடினார்‌. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌ கவுன்சில்‌ ஜெனரல்‌ அவர்களின்‌ வருகையால்‌ உற்சாகமடைந்தது. மேலும்‌ பல்கலைக்கழகம்‌ இஸ்ரேல்‌ நாட்டுடன்‌ கூட்டு ஆராய்ச்சியினை மேற்கொள்ளவும்‌ விருப்பமாக உள்ளது.

Newsletter