தமிழ்நாடு வேளாண்‌ பல்கலையில்‌ விதை நாள்‌ திருவிழா கொண்டாட்டம்

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பலகலைக்கழகத்தில்‌ விதை அறிவியல்‌ மற்றும்‌ தொழில்‌நுட்பத்‌ துறை, விதை மையம்‌ சார்பில் விதை நாள்‌ விழா நேற்று கொண்டாடப்பட்டது.

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பலகலைக்கழகத்தில்‌ விதை அறிவியல்‌ மற்றும்‌ தொழில்‌நுட்பத்‌ துறை, விதை மையம்‌ சார்பில் விதை நாள்‌ விழா நேற்று கொண்டாடப்பட்டது. 

இவ்விழாவில்‌ தமிழகத்தின்‌ பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார்‌ 50 வேளாண் பெருமக்கள்‌ கலந்து கொண்டனர்‌. விதை மையம்‌ மற்றும்‌ விதை அறிவியல்‌ மற்றும்‌ தொழில்நுட்பத்‌ துறையின்‌ விஞ்ஞானிகள்‌ மற்றும்‌ மாணவ, மாணவியர்‌ விழாவில்‌ கலந்து கொண்டு விழாவில்‌ விதைத்‌ தர மேம்பாடு, சான்று விதை உற்பத்தி, வீரிய ஒட்டு விதை உற்பத்தி குறித்த கருத்துக்‌ காட்சிகள்‌ மற்றும்‌ செயல்‌ விளக்கங்களை விவசாயிகளுக்கு தெளிவாக எடுத்துரைத்தனர்‌.

இவ்விழாவிற்கு முனைவர்‌.பெ.இரா.ரெங்கநாயகி, பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, விதை அறிவியல்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்பத்துறை வரவேற்புரையையும்‌ முனைவர்‌ க.கிருஷ்ண வேணி, பேராசிரியர்‌ அவர்கள்‌ அறிமுக உரையும்‌ வழங்கினார். விழாவில்‌ பீ.ஆர்‌.நாராயணசுவாமி, தலைமை நிர்வாக அலுவலர்‌, அக்ரோ பாரஸ்டிரி பாஃர்மர்‌ புரடியூசர்‌ கம்பெனி லிமிடெட்‌, கோயம்புத்தூர்‌ வாழ்த்துரை வழங்கினார்‌.

பயிர்‌ இனப்பெருக்கம்‌ மற்றும்‌ மரபியல்‌ மையம்‌ சிறப்பு விருந்தினராக விழாவில் பேசிய முனைவர்‌.சே.க தா, இயக்குநர்‌, ஒவ்வொரு பயிரிலும்‌ விதை உற்பத்திக்கு ஏற்ற நல்ல விளைச்சல்‌ தரக்கூடிய தமிழ்நாடு வேளாண்மைப்‌ பலகலைக்கழகத்தால்‌ வெளியிட்ட பயிர் இரகங்களை விவசாயிகள்‌ பயன்படுத்த வேண்டுமென்றும்‌ எண்ணெய் வித்துப்‌ பயிர்களில் விதை உற்பத்தியை அதிகப்படுத்த வேண்டுமென்றும்‌ கூறி சிறப்புரை வழங்கினார்‌.

முனைவர்‌.செ.சுந்தரேஸ்வரன்‌, இயக்குநர்‌, விதை மையம்‌ அவர்கள்‌ தலைமை உரையாற்றி விவசாயிகளுக்கு விதை உற்பத்தி, விதைத்‌ தர மேம்பாடு பற்றியும்‌ எடுத்துரைத்தார்‌. மேலும்‌, விவசாயிகளே சிறந்த விதை உற்பத்தியாளர்களாக மாற வேண்டுமென்று கூறி விதை நாள்‌ விழா சிறப்பு மலரை வெளியிட்டார்‌. விவசாயிகள்‌ விதை உற்பத்தியில்‌ தங்களுக்குள்ள இடர்பாடுகளையும்‌ அதற்குள்ள தீர்வுகளையும்‌ விதை விஞ்ஞானிகளுடன்‌ கலந்துரையாடினர்‌.

Newsletter