கோவையில் ஒட்டுண்ணிகள்‌ மற்றும் இரை விழுங்கிகள் வளர்ப்பு முறைகள்‌ பற்றிய ஒரு நாள் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ பூச்சியியல்‌ துறை மூலமாக “ஒட்டுண்ணிகள்‌ மற்றும்‌ இரை விழுங்கிகள்‌ வளர்ப்பு மற்றும்‌ பயன்படுத்தும்‌ முறைகள்‌” பற்றிய ஒரு நாள்‌ பயிற்சி 12.02.2020 புதன்கிழமை அன்று அளிக்கப்படும்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ பூச்சியியல்‌ துறை மூலமாக “ஒட்டுண்ணிகள்‌ மற்றும்‌ இரை விழுங்கிகள்‌ வளர்ப்பு மற்றும்‌ பயன்படுத்தும்‌ முறைகள்‌” பற்றிய ஒரு நாள்‌ பயிற்சி 12.02.2020 புதன்கிழமை அன்று அளிக்கப்படும்‌. 

பயிற்சியின்‌ முக்கிய அம்சங்களாவன:-

1. ஒட்டுண்ணிகள்‌ வகைகள்‌

2. ஊண்‌ விழுங்கிகள்‌ / இரை விழுங்கிகள்‌

3. நெல்‌ அந்துப்பூச்சி வளர்ப்பு முறை

4. டிரைக்கோகிரம்மா முட்டை ஒட்டுண்ணி வளர்ப்பு

5. புழு ஒட்டுண்ணி வளர்ப்பு

6. கண்ணாடி இறக்கைப்‌ பூச்சி வளர்த்தல்‌

7. பொறிவண்டு வளர்ப்பு

8. பப்பாளி மாவுப்பூச்சி ஒட்டுண்ணி அசரோபகஸ்‌ வளர்ப்பு

9. பயிர்‌ பாதுகாப்பில்‌ ஒட்டுண்ணிகள்‌ மற்றும்‌ இரை விழுங்கிகள்‌ பயன்பாடு

பயிற்சியில்‌ கலந்து கொள்ள விரும்புவோர்‌ 12.02.2020 புதன்கிழமை அன்று காலை 9.00 மணிக்குள்ளாக பூச்சியியல் துறைக்கு தங்கள்‌ செலவில்‌ வந்து சேர வேண்டும்‌. பயிற்சியில்‌ கலந்து கொள்வதற்கு ரூ.900/- (ரூபாய்‌ தொள்ளாயிரம்‌ மட்டும்‌ நேரிடையாக பயிற்சி நாள்‌ அன்று செலுத்த வேண்டும்‌. பயிற்சி நேரம்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை பயிற்சியின்‌ இறுதியில்‌ சான்றிதழ்‌ வழங்கப்படும்‌.




மேலும்‌ விபரங்களுக்கு அணுக வேண்டிய முகவரி:

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, வேளாண் பூச்சியியல்‌ துறை,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயமுத்தூர்‌ - 641 003.

தொலைபபசி எண்: 0422-6611214 / 474

மின்னஞ்சல்‌ : entomology @tnau.ac.in

Newsletter