வெள்ளை ஈக்களால் தொல்லை..! திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் தென்னை சாகுபடி செய்து வருகின்றனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் தென்னை சாகுபடி செய்து வருகின்றனர். 



இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெள்ளை ஈக்களால் தென்னை மரங்கள் பாதிக்கப்படுவதாகவும் இதனால் தேங்காய் மகசூல் குறைந்து வருவதாகவும் விவசாயிகள் கூறி வந்த நிலையில் இன்று அவர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். 



மேலும், தற்போது காய் பயிர் வகைகளான வெள்ளரிக்காய், கத்தரிக்காய் உள்ளிட்ட செடிகளையும் வெள்ளை ஈக்கள் தாக்கி வருவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர். 

இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை, என குற்றம் சாட்டிய விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Newsletter