2020ம்‌ ஆண்டு தமிழக அரசின்‌ பொங்கல்‌ பரிசாக புதிய பயிர்‌ இரகங்கள்‌ வெளியீடு

தமிழக விவசாயப்‌ பெருமக்களின்‌ வாழ்க்கைத்‌ தரம்‌ உயர, அவர்களின்‌ தேவையை அறிந்து, ஒவ்வொரு ஆண்டும்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ பல புதிய பயிர்‌ இரகங்களை வெளியிட்டு வருகிறது. இவ்வருடம்‌ 2020 ஆம்‌ ஆண்டு பொங்கல்‌ பரிசாக அளிக்க 13 புதிய இரகங்களை வேளாண்‌ மற்றும்‌ தோட்டக்கலை விவசாயிகளுக்காக வெளியிடுகிறது. (இதில்‌ வேளாண்‌ பயிர்கள்‌ 7ம்‌, தோட்டக்கலைப்‌ பயிர்கள்‌ 6ம்‌ அடங்கும்‌.

தமிழக விவசாயப்‌ பெருமக்களின்‌ வாழ்க்கைத்‌ தரம்‌ உயர, அவர்களின்‌ தேவையை அறிந்து, ஒவ்வொரு ஆண்டும்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ பல புதிய பயிர்‌ இரகங்களை வெளியிட்டு வருகிறது. இவ்வருடம்‌ 2020 ஆம்‌ ஆண்டு பொங்கல்‌ பரிசாக அளிக்க 13 புதிய இரகங்களை வேளாண்‌ மற்றும்‌ தோட்டக்கலை விவசாயிகளுக்காக வெளியிடுகிறது. (இதில்‌ வேளாண்‌ பயிர்கள்‌ 7ம்‌, தோட்டக்கலைப்‌ பயிர்கள்‌ 6ம்‌ அடங்கும்‌.

1. நெல்‌-கோ 53

2. நெல்‌- ஏடீடி 54

3. கரும்பு - சிஒசி 13339

4. பருத்தி- கோ 17

5. உளுந்து - வம்பன்‌ 11 (விபிஎண்‌.11 |

6. சோளம்‌ - கோ 32

7. தினை - ஏடிஎல்‌1

8. வாழை (வீரிய ஒட்டு) - கோ 2

9. தக்காளி (வீரிய ஒட்டு) -கோ 4

10. சிறிய வெங்காயம்‌ - கோ 6

11. மரவள்ளி-ஒய்டிபி 2

12. கொடுக்காபுளி - பிகேஎம்‌ 2

13. மணத்தக்காளி - கோ 1

இரண்டு புதிய நெல்‌ இரகங்களில்‌, ஒன்றான கோ 53 தமிழ்நாட்டின்‌ வறட்சி பாதிப்புக்குள்ளாகும்‌ இராமநாதபுரம்‌, சிவகங்கை மற்றும்‌ விருதுநகர்‌ மாவட்டங்களுக்கு ஏற்றது. இது வறட்சி மற்றும்‌ பகுதி வறட்சியைத்‌ தாங்கி வளரக்கூடிய குறுகிய கால (115-120 நாட்கள்‌) இரகம்‌. மானாவாரி நேரடி விதைப்பிற்கு ஏற்றது. சராசரி நெல்‌ மகசூல்‌ எக்டருக்கு 3866 கிலோ. இது வறட்சியைத்தாங்கி வளர்வதுடன், மேட்டூர்‌ அணைநீர்‌ திறப்பதற்கு காலதாமதம்‌ ஆனாலும்‌ பயிரிட ஏற்ற இரகமாகும்‌.

இரண்டாவது நெல்‌ இரகமான ஏடீடி 54 அதிக மகசூல்‌ தரவல்ல ( எக்டருக்கு சராசரி 6307 கிலோ நெல்‌) மத்திய கால இரகம்‌ (130-135 நாட்கள்‌, வெள்ளை மத்திய சன்ன அரிசி இரகம்‌, அதிக அரவைத்திறன்‌ (72.3%) உடையது. தமிழ்நாட்டில்‌ பின்சம்பா, தாளடி பருவங்களுக்கு ஏற்றது.

புதிய இரக கரும்பு கோ.க 13339, 330-360 நாட்களில்‌ முதிர்ச்சியடைந்து, எக்டருக்கு அதிக மகசூலாக 141.6 டன்கள்‌ கரும்பும்‌, 18.2 டன்கள்‌ சர்க்கரை மகசூலும்‌ தந்துள்ளது. நடுப்பட்டம்‌ மற்றும்‌ பின்பட்டத்திற்கு ஏற்றது. கடந்த 20 ஆண்டுகளாக பயிரிடப்படும்‌ கோ.86032 கரும்பு இரகத்திற்கு ஒரு மாற்று இரகமாக கோ.க.13339 வெளியிடப்பட்டுள்ளது.

பருத்தியில்‌, புதிய இரகமான கோ 17, 130 நாட்களில்‌ முதிர்ச்சியடைந்து எக்டருக்கு 2504 கிலோ விதைப்‌ பருத்தி மகசூலாகக்‌ கிடைக்கிறது. ஒரே சமயத்தில்‌ காய்‌ முதிர்வடைதல்‌, செடிகள்‌ அதிக கிளைகள்‌ இல்லாமல்‌ இருத்தல்‌, குறுகிய காய்‌ பிடிக்கும்‌ கிளைகள்‌ போன்றவை இதன்‌ சிறப்பம்சங்களாகும்‌, தமிழ்நாட்டின்‌ நெல்‌ தரிசு, குளிர்கால மானாவாரி மற்றும்‌ கோடைகால நீர்ப்பாசன பகுதிகளுக்கு ஏற்றது. மேலும்‌ இது அடர்‌ நடவு முறைக்கும்‌ இயந்திர அறுவடைக்கும்‌ ஏற்ற இரகமாகும்‌.

வம்பன்‌ 11 (விபிஎண்‌-11) என்ற புதிய உளுந்து இரகம்‌ மஞ்சள்‌ தேமல்‌ நோய்க்கு எதிர்ப்புத்திறன்‌ கொண்டது. வயது 70-75 நாட்கள்‌, 4 பட்டங்களிலும்‌ (ஆடி, புரட்டாசி, மார்கழி மற்றும்‌ சித்திரை) பயிரிடலாம்‌. மானாவாரியில்‌ எக்டருக்கு 865 கிலோவும்‌, இறவையில்‌ 940 கிலோவும்‌ கொடுக்கவல்லது.

இரண்டு புதிய சிறுதானியப்‌ பயிர்கள்‌ இவ்வருடம்‌ வெளியிடப்பட்டுள்ளது. அவை முறையே சோளம்‌ கோ 32 மற்றும்‌ தினை ஏடிஎல்‌ 1 (அத்தியேந்தல்‌) ஆகும்‌. சோளம்‌ கோ 32 இரகம்‌ மானாவாரியில்‌ தானிய மகசூலாக எக்டருக்கு 2445 கிலோவும்‌, உலர் தட்டை மகசூலாக 6490 கிலோவும்‌ கொடுக்கவல்லது. தானியம்‌ அதிக புரதசத்தும்‌ (14.6%), நார்ச்சத்தும்‌ (5.80%) கொண்டது. மானாவாரி மற்றும்‌ இறவையில்‌ தமிழகம்‌ முழுவதும்‌ பயிரிடலாம்‌. தினை ஏடிஎல்‌ 1, இரகம்‌ எக்டருக்கு 2117 கிலோ தானியம்‌ மற்றும்‌ 2785 கிலோ தட்டும்‌ மகசூலாகக்‌ கொடுக்கவல்லது. இந்த இரண்டு சிறு தானியங்களும்‌ குழந்தைகள்‌ மற்றும்‌ காப்பிணி பெண்களின்‌ ஊட்டச்சத்துக்‌ குறைபாட்டை நிவர்த்தி செய்ய பயன்படுகிறது. இந்த சிறு தானியங்கள்‌ பயிரிட குறைந்த செலவே ஆகிறது. ஆனால்‌ வருமானம்‌ இருமடங்காகிறது.

தோட்டக்கலைப்‌ பயிர்களில்‌ 6 இரகங்கள்‌ வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில்‌ கோ 2 வீரிய ஒட்டு வாழை இரகம்‌ நெய்பூவன்‌ போன்று தோற்றத்தில்‌ இருக்கும்‌. எக்டருக்கு மகசூல்‌ 32 டன்கள்‌ ஆகும்‌. வாழையைத்‌ தாக்கும்‌ நூற்புழு மற்றும்‌ வாடல்‌ நோய்க்கு எதிர்ப்புத்திறன்‌ கொண்டது. இது வாழை விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகும்‌.

கோ 4 வீரிய ஒட்டு தக்காளி காம்பை ஒட்டிய பகுதி பழுக்கும்போது பச்சை நிறம்‌ மற்றும்‌ இளஞ்சிவப்பு நிறத்துடன்‌ இருப்பதால்‌ அதிக தூரம்‌ எடுத்துச்‌ செல்லவும்‌, அதிக நாட்கள்‌ சேமிக்கவும்‌ பயன்படும்‌. நீண்ட நாட்களுக்கு இந்த இரகம்‌ மகசூல்‌ தரவல்லது. எக்டருக்கு 92.3 டன்கள்‌ மகசூல்‌ கிடைக்கும்‌. பழங்களில்‌ அமி்லத்தன மை அதிகம்‌.

சிறிய வெங்காயம்‌ கோ 6 குமிழ்கள்‌(Bulbs) மற்றும்‌ விதை உற்பத்தி செய்ய ஏற்ற இரகமாகும்‌. குமிழ்‌ மகசூலாக எக்டருக்கு 19.1 டன்கள்‌ கிடைக்கும்‌. விதை மகசூலாக எக்டருக்கு 300 கிலோ கிடைக்கும்‌. அதிக நாட்களுக்கு சேமித்து வைக்கலாம்‌. ஆனால்‌ தற்போது பயிரிடப்பட்டு வரும்‌ கோ.5 இரகம்‌ குறைவான சேமபிப்புத்திறனே கொண்டது. தற்போது வெளியிடப்பட்டுள்ள கோ.6 இரகம்‌ தமிழ்நாட்டின்‌ பெரம்பலூர்‌, நாமக்கல்‌, கடலூர்‌, திருப்பூர்‌ போன்ற மாவட்டங்களுக்கு ஏற்றது.

மரவள்ளி ஒய்டிபி-2 இரகம்‌ எக்டருக்கு 46.2 டன்கள்‌ கிழங்குகளை மகசூலாகக்‌ கொடுக்கிறது. இதில்‌ மாவுச்சத்து 30 சதம்‌ இருக்கிறது.

கொடுக்காபுளி பி.கே.எம்‌-2 இரகம்‌ ஆண்டுதோறும்‌ சீராகக்‌ காய்த்து அதிக பட்சமாக ஒரு மரத்திற்கு 90 கிலோவும்‌, ஒரு எக்டருக்கு 13.5 டன்‌ பழங்களையும்‌ மகசூலாகக்‌ கொடுக்க வல்லது. இடு பொருட்கள்‌ குறைந்த அளவே போதும்‌ வறடசியைத்தாங்கி வளரக்கூடியது. பழங்கள்‌ சத்துக்கள்‌ நிறைந்தது. பழத்தின்‌ வெளிப்புறத்தோல்‌ இளஞ்சிவப்பு நிறுத்திலும்‌, சதைப்பகுதி சிவப்பு நிறத்திலும்‌ இருக்கும்‌. தமிழ்நாட்டின்‌ களர்‌, உவர்‌ நிலங்களுக்கும்‌ மற்றும்‌ மானாவாரி நிலங்களுக்கும்‌ உகந்தது. நகர்ப்புற பழமுதிர்‌ நிலையங்களில்‌ இந்த இரகம்‌ கிலோவிற்கு -.200 - 250/- வரை விற்கப்படுகிறது.

மணத்தக்காளி கோ 1 இரகம்‌ கீரை மகசூலாக எக்டருக்கு 30-35 டன்கள்‌ கொடுக்கிறது. இது வைட்டமின்‌ பி்‌ காம்பளக்ஸ்‌ ஊட்டச்சத்து மிகுந்த கீரையாகவும்‌, மருந்துத்‌ தன்மைக்காகவும்‌ பயன்படுத்த உகந்தது. வீட்டுத்‌ தோட்டம்‌ மற்றும்‌ மாடித்‌ தோட்டத்தில்‌ வளர்க்க ஏற்றது. இந்த புதிய இரகங்களை வருங்காலத்தில்‌ பயிரிட்டு பயன்‌ பெறுமாறு தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகமும்‌, அரசு வேளாண்மைத்‌ துறையும்‌ விரும்பி கேட்டுக்‌கொள்கிறது.

Newsletter