எள்ளின்‌ விலை நிலையாக இருக்கும்‌ - வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்..!

கோவை: உலகளவில்‌ இந்தியா எள்‌ உற்பத்தி, நுகர்வு மற்றும்‌ ஏற்றுமதியில்‌ முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின்‌ எண்ணெய் பிழிதல்‌ அமைப்பின்படி, 2018-19 ஆம்‌ ஆண்டில்‌ இந்தியாவில்‌ 13.84 இலட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ எள்‌ பயிரிடப்பட்டு 7.10 இலட்சம்‌ டன்‌ உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

கோவை: உலகளவில்‌ இந்தியா எள்‌ உற்பத்தி, நுகர்வு மற்றும்‌ ஏற்றுமதியில்‌ முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தியாவின்‌ எண்ணெய் பிழிதல்‌ அமைப்பின்படி, 2018-19 ஆம்‌ ஆண்டில்‌ இந்தியாவில்‌ 13.84 இலட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ எள்‌ பயிரிடப்பட்டு 7.10 இலட்சம்‌ டன்‌ உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

உத்திர பிரதேசம்‌, ராஜஸ்தான், மத்தியபிரதேசம்‌ மற்றும்‌ மேற்கு வங்காளம்‌ ஆகிய மாநிலங்களில்‌ எள்‌ அதிக அளவில்‌ உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டில்‌ விழுப்புரம், ஈரோடு, தஞ்சாவூர், கரூர், சேலம்‌ மற்றும்‌ கடலூர்‌ ஆகிய மாவட்டங்களில்‌ எள்‌ அதிக அளவில்‌ பயிரிடப்படுகிறது. டி.எம்‌.வி 3, டி.எம்‌.வி 4, டி.எம்‌.வி 6, டி.எம்‌.வி 7,கோ-1 (கருப்பு எள்), வி.ஆர்‌.ஐ (எஸ்‌.வி) 2 (சிகப்பு எள்) மற்றும்‌ எச்‌.வி.பி.ஆர்‌ 1, ஆகிய இரகங்கள்‌ தமிழ்நாட்டில்‌ அதிகளவில்‌ பயிரிடப்படுகின்றன.

பொதுமக்களிடையே எள்‌ எண்ணெய்க்கான தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக மரச்செக்கு ஆலையைப் பயன்படுத்தி பராம்பரிய முறையிலிருந்து எடுக்கப்படும்‌ எண்ணெய்‌ தேவை, எள்‌ உற்பத்தி செய்யும்‌ விவசாயிகளை ஊக்குவிக்கிறது. எள்‌ உற்பத்தியில்‌ 65 சதவீதம்‌ எண்ணெய்‌ தயாரிப்பதற்கும்‌, 35 சதவீதம்‌ உணவு தேவைகளுக்கும்‌ பயன்படுத்தப்படுகிறது. பழுப்பு மற்றும்‌ கருப்பு நிற எள்‌ வகைகள்‌ எண்ணெய்‌ உற்பத்திக்காகவும்‌, வெள்ளை எள்‌ மிட்டாய்களிலும்‌ பயன்படுத்தப்படுகிறது.

கடந்த பருவத்தில்‌, நீடித்த பருவமழையால்‌ எள்‌ விதைப்பானது இயல்பான பரப்பளவு பயிரிடப்பட்டுள்ளது. வர்த்தக ஆதாரங்களின்‌ படி, தமிழ்நாட்டிற்கு ஆந்திராவிலிருந்து (கடப்பா மற்றும்‌ வேம்பள்ளி) எள்‌ வருகையானது பிப்ரவரியில்‌ தொடங்கும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது. இவை தமிழ்நாட்டின்‌ மொத்த தேவையில்‌ 30 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. உள்நாட்டு எள்‌ வரத்தானது கரூர்‌, கொடுமுடி, மைலம்பாடி மற்றும்‌ திருச்சி மாவட்டத்திலுள்ள முக்கிய பகுதிகளிலிருந்து வருகிறது. இவ்வரத்து ஜனவரி 2020, இரண்டாவது வாரத்துடன்‌ முடிவடையும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.

இச்சூழலில்‌, விவசாயிகள்‌ விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌, வேளாண்‌ மற்றும்‌ ஊரகமேம்பாட்டு ஆய்வு மையத்தில்‌ இயங்கி வரும்‌ தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ விலை முன்னறிவிப்புத்‌ திட்டம்‌ கடந்த 17 ஆண்டுகளாக ஈரோட்டில்‌ உள்ள சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்‌ கூடத்தில்‌ நிலவிய எள்‌ விலை மற்றும்‌ சந்தை ஆய்வுகள்‌ மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுகளின்‌ முடிவுகளின்‌ அடிப்படையில்‌, நல்ல தரமான எள்ளின்‌ விலை ஜனவரி முதல் மார்ச்‌ 2020,வரை ஒரு கிலோவிற்கு ரூ.1715 முதல்‌ à®°120 இருக்கும்‌ என கணிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள்‌ மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில்‌ விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும்‌ விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

உள்நாட்டு மற்றும்‌ ஏற்றுமதி சந்தைத்‌ தகவல்‌ மையம்‌,

வேளான்‌ மற்றும்‌ ஊரகமமம்பாட்டு ஆய்வு மையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

தொலைபேசி எண் : 0422-2431405

தொழில்நுட்ப விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

எனர்ணெய்‌ வித்துக்கள்‌ துறை,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

தொலைபேசி எண் : 0422-2450812

Newsletter