மக்காச்சோளத்தின் விலை அதிகரிக்க வாய்ப்புகள் குறைவு - வேளாண்மைப் பல்கலைக்கழகம் தகவல்..!

கோவை: வேளாண்‌ மற்றும்‌ விவசாய நல அமைச்சகத்தின்‌ முதலாவது முன்கூட்டியே மதிப்பீட்டின் படி, 2019-2020 ஆம்‌ ஆண்டில்‌ மக்காச்சோளமானது இந்தியளவில்‌ கிட்டத்தட்ட 93.00 இலட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ பயிரிடப்பட்டு 198.90 இலட்சம்‌ டன்கள்‌ உற்பத்தி செய்யப்படும்‌ என கணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில்‌ மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், கர்நாடகா, பீகார்‌, தெலுங்கானா மற்றும்‌ ஆந்திரப்பிரதேசம்‌ ஆகிய மாநிலங்கள்‌ மக்காச்சோளத்தை அதிகளவு பயிரிடுகின்றன. தமிழ்நாட்டில்‌ சேலம்‌, திண்டுக்கல்‌, நாமக்கல்‌, புதுக்கோட்டை, திருப்பூர்‌, விழுப்புரம்‌, பெரம்பலூர்‌ மற்றும்‌ அரியலூர்‌ ஆகிய மாவட்டங்களில்‌ அதிகளவில்‌ மக்காச்சோளம் பயிரிடப்படுகிறது.

வர்த்தக மூலங்களின்‌ படி தமிழ்நாட்டிற்கு மக்காச்சோளத்தின்‌ வரத்தானது ஆந்திரப்பிரதேசம்‌, கர்நாடகா, மற்றும்‌ பீகார்‌ ஆகிய மாநிலங்களிலிருந்து வருகிறது. தமிழ்நாட்டில்‌ அதிக அளவு வரத்தானது அரியலூர்‌, பெரம்பலூர்‌, தேனி, கோவில்பட்டி, கந்தர்வகோட்டை, திண்டுக்கல், திருப்பூர்‌ மற்றும்‌ விருதுநகர்‌ ஆகிய மாவட்டங்களிலிருந்து ஜனவரி, 2020 முதலும்‌ அதனை தொடர்ந்து பிற மக்காச்சோளம்‌ விளையும்‌ பகுதிகளிலிருந்தும்‌ வரத்து வரும்‌ என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய பருவத்தில்‌ நீடித்த பருவமழை மற்றும்‌ மக்காச்சோள விவசாயிகளால்‌ எடுக்கப்பட்ட போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால்‌ படைப்புழுவின்‌ தாக்கம்‌ குறைந்து உள்ளதால்‌ பயிர்‌ வளர்ச்சி மற்றும்‌ மகசூல்‌ நன்றாக உள்ளது. தமிழ்நாட்டிலிருந்து வரத்து ஏற்கனவே தொடங்கியுள்ள நிலையில்‌ வரத்து போதுமானதாக இருப்பதால்‌ விலை அதிகரிக்க வாய்ப்பில்லை.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பலகலைக்கழகத்தில்‌, வேளாண் மற்றும் ஊரகமேம்பாட்டு ஆய்வு மையத்தில்‌ இயங்கி வரும்‌ தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ விலை முன்னறிவிப்புத்‌ திட்டம்‌ கடந்த 19 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில்‌ நிலவிய மக்காச்சோளம்‌ விலை மற்றும்‌ சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. ஆய்வுகளின்‌ அடிப்படையில், தரமான மக்காச்சோளத்தின்‌ பண்ணை விலையானது (பிப்ரவரி-மார்ச்‌, 2020) குவிண்டாலுக்கு ரூ.1800 முதல்‌ ரூ.1900 ஆக இருக்கும்‌. எனவே, விவசாயிகள்‌ மேற்கூறிய ஆலோசனையின்‌ அடிப்படையில்‌ சந்தை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்‌.

மேலும்‌ விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

உள்நாட்டு மற்றும்‌ ஏற்றுமதி சந்தைத்‌ தகவல்‌ மையம்‌,

வேளான்‌ மற்றும்‌ ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயமுத்தூர்‌ - 641 003.

தொலைபேசி: 0422-2431405

தொழில்நுட்ப விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்‌

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

சிறுதானிய துறை,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயம்புத்தூர்‌ - 641 003.

தொலைபசி எண்‌: 0422-2450507

Newsletter