வரும் பிப்ரவரி 5-ம்‌ தேதி வேளாண்‌ பல்கலையில்‌ காளான்‌ வளர்ப்பு பற்றிய பயிற்சி

கோவை: தமிழ்நாடு வேளாண்‌மைப்‌ பல்கலைக்கழகத்தில் உள்ள பயிர்‌ நோயியல்‌ துறையில்‌ வருகின்ற பிப்ரவரி மாதம்‌ 5ம்‌ தேதி காளான்‌ வளர்ப்பு பற்றிய ஒரு நாள்‌ மற்றும் ஐந்து நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

கோவை: தமிழ்நாடு வேளாண்‌மைப்‌ பல்கலைக்கழகத்தில் உள்ள பயிர்‌ நோயியல்‌ துறையில்‌ வருகின்ற பிப்ரவரி மாதம்‌ 5ம்‌ தேதி காளான்‌ வளர்ப்பு பற்றிய ஒரு நாள்‌ மற்றும் ஐந்து நாள் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

ஒரு நாள்‌ பயிற்சி

வருகின்ற பிப்ரவரி மாதம்‌ 5-ம்‌ தேதி (புதன்கிழமை) காளான்‌ வளர்ப்பு பற்றிய ஒரு நாள்‌ பயிற்சி தமிழ்நாடு வேளாண்‌மைப்‌ பல்கலைக்கழக பயிர்‌ நோயியல்‌ துறையில்‌ நடைபெற உள்ளது.

பயிற்சிக்‌ கட்டணம்‌ - ரூ.590/-

பயிற்சி நேரம்‌ - காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை.

ஐந்து நாள் பயிற்சி

திசு வளர்ப்பு, காளான்‌ வித்து மற்றும்‌ காளான்‌ உற்பத்தி தொடர்பான மேம்படுத்தப்பட்ட திறன்‌ சார்ந்த ஐந்து நாள்‌ பயிற்சி கோயம்புத்தூர்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக பயிர்‌ நோயியல்‌ துறையில்‌ இம்மாதம்‌ 27-ம்‌ தேதி முதல்‌ 31-ம்‌ தேதி வரை நடைபெற உள்ளது.

இப்பயிற்சியில்‌ ஆர்வமுள்ளவர்கள்‌ ரூ.10,030/-க்கான வரைவோலையை பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, பயிர்‌ நோயியல்‌ துறை, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌ என்ற பெயரில்‌ பயிற்சிக்கு 15 நாட்களுக்கு முன்னர்‌ அனுப்பி பதிவு செய்து கொள்ளவும்‌.

மேலும்‌ விவரங்களுக்கு

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌

பயிர்‌ நோயியல்‌ துறை

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌

கோயம்புத்தூர்‌ - 641003

தொலைபேசி எண் - 0422 6611336 / 226

Newsletter