தோட்டக்கலை அலுவலர்களுக்கான இயற்கை பயிர்‌ பாதுகாப்பிற்கான எதிர்‌உயிர்‌ இடுபொருள்‌ உற்பத்திக்கான பயிற்சி

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌ தோட்டக்கலை அலுவலர்களுக்கு தரமான இயற்கை பயிர்‌ பாதுகாப்பிற்கான எதிர்‌ உயிர்‌ இடுபொருள்‌ உற்பத்தி பயிற்சி அளிக்கப்படுகிறது.

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில்‌ தோட்டக்கலை அலுவலர்களுக்கு தரமான இயற்கை பயிர்‌ பாதுகாப்பிற்கான எதிர்‌ உயிர்‌ இடுபொருள்‌ உற்பத்தி பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சியின்‌ துவக்க நிகழ்ச்சியில்‌ பயிர்பாதுகாப்பு இயக்குநர்‌ முனைவர்‌.கே.பிரபாகர்‌ கூறுகையில், இயற்கை இடுபொருள்களாகிய உயிரியியல்‌ காரணிகள்‌ அதிகமாக விவசாயிகள்‌ பயன்படுத்துகின்றனர்‌. அது தரமானதாக இருந்தால்தான்‌ பயிர்பாதுகாப்பில்‌ பலன்‌ தரும்‌ இப்பயிற்சியில்‌ உற்பத்தி முறைகள்‌ மற்றும்‌ தரத்தை பரிசோதிக்கும்‌ முறைகள்‌ பற்றிய பயிற்சிகள்‌ அளிக்கப்பட உள்ளது.

வாழ்த்துரை வழங்கிய பல்கலைக்கழக வேளாண்மை முதனமையர்‌ முனைவர்‌. எம்‌.கல்யாணசுந்தரம்‌ அவர்கள்‌ விவசாயிகள்‌ பூச்சி கொல்லிகள்‌ பயன்படுத்துவதை குறைத்து எதிர்‌ உயிர்க்காரணிகளாகிய சூடோமோனஸ்‌ மற்றும்‌ டிரைகோடா்மா பயன்படுத்தி வேர்‌ சம்பந்தமான நோய்களை கட்டுப்படுத்த வேண்டும்‌ என்று கூறினார்‌.

தோட்டக்கலைக்கலலூரி முதன்மையர்‌ முனைவர்‌ எல்‌.புகழேந்தி அவர்கள்‌ தனது உரையில்‌, தகவல்‌ தொழில்நுட்பம்‌ மிகுந்த இக்காலச்சூழ்நிலையில்‌ இடுபொருள்‌ தகவலை விவசாயிகளுக்கு எடுத்துச்செல்லுங்கள்‌, மண்ணிற்கு உயிர்‌ உள்ளது, மண்ணின்‌ வளமே பயிரின்‌ வளம்‌ என்பதை கூறினார்‌. தோட்டக்கலை பயிர்களின்‌ பழங்கள்‌ மற்றும்‌ காய்கறிகளை நேரடியாக உண்பதால்‌ பூச்சிகொல்லிகளில்‌ உள்ள நஞ்சு உடலில்‌ அதிகரித்துவிடும்‌. எனவே உயிரியியல்‌ முறை மிகவும்‌ முக்கியத்துவம்‌ வாய்ந்தது என்பதை உணர்த்தினார்‌. பூச்சியியல்‌ துறைத்தலைவர்‌ முனைவர்‌ என்‌.சாத்தையா அவர்கள்‌ பேசுகையில்‌ அனைத்து பூச்சி மற்றும்‌ நோய்களுக்கான இயற்கை எதிர்‌ உயிர்க்காரணிகள்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ ஆராய்ச்சி செய்து வருகிறது. புதுவகையான பூச்சி தாக்குதலுக்கும்‌ மேலாண்மை உற்பத்தி முறைகள்‌ கொடுத்து வழங்கப்படுகிறது என்றார்‌.



பயிர்‌ நோயியல்‌ துறைத்தலைவர்‌ முனைவர்‌ ஜி.கார்த்திகேயன்‌ அவர்கள்‌ பயிற்சியின்‌ நோக்கத்தையும்‌ மற்றும்‌ வரவேற்புரையும்‌ ஆற்றினார்‌. உதவி பேராசிரியர்கள்‌ முனைவர்‌ வி.செந்தில் வேல்‌ மற்றும்‌ எ.சுதா ஆகியோர்‌ பயிற்சியை நடத்துகின்றனர்‌.

Newsletter