தமிழ்நாடு வேளாண் பல்கலை.,யில் வரும் ஜனவரி 6-ம் தேதி தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம்

கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வரும் ஜனவரி 6-ம் தேதி தேனீ வளர்ப்பு குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது


கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வரும் ஜனவரி 6-ம் தேதி தேனீ வளர்ப்பு குறித்து ஒருநாள் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பூச்சியியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் தேனீ வளர்ப்பு சம்பந்தமான ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகின்றது. இந்தப் பயிற்சி முகாமில் தேனீ இனங்களைக் கண்டுபிடித்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை, தேனைப் பிரித்தெடுத்தல் உள்ளிட்ட தேனீ வளர்ப்பு முறைகள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.

அதன்படி, நடப்பு மாதத்திற்கான தேனீ வளர்ப்பு பயிற்சி முகாம் வரும் ஜனவரி 6-ம் தேதி அப்பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. ரூ. 590 என்ற பயிற்சி கட்டணத்தில் நடத்தப்படும். இதில் கலந்து கொள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் பூச்சியியல் துறையைத் தொடர்பு கொள்ளலாம். 0422-6611414 என்ற தொலைப்பேசி எண் மூலமாகத் தகவல்களைப் பெறலாம். 

Newsletter