கோவை வேளாண்‌ பல்கலைக்கழகத்தில்‌ 'ஈகோஃபெஸ்ட்‌' சுற்றுச்சூழல்‌ திருவிழா

கோவை: “ஈகோஃபெஸ்ட்‌'- இளங்கலை ஆற்றல்‌ மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ பொறியியல்‌ மாணவர்களால்‌ கடந்த டிசம்பர் 14ம் தேதி கோவையில் உள்ள வேளாண் பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தில்‌ நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கில்‌ 150க்கும்‌ மேற்பட்ட பங்கேற்பாளர்கள்‌ கலந்து கொண்டனர்‌.


கோவை: “ஈகோஃபெஸ்ட்‌'- இளங்கலை ஆற்றல்‌ மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ பொறியியல்‌ மாணவர்களால்‌ கடந்த டிசம்பர் 14ம் தேதி கோவையில் உள்ள வேளாண் பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தில்‌ நடத்தப்பட்டது. இக்கருத்தரங்கில்‌ 150க்கும்‌ மேற்பட்ட பங்கேற்பாளர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

வேளாண் பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலைய முதல்வர்‌ டாகடர்‌.பா.ஸ்ரீதர்‌ அவர்கள்‌ ஆற்றல்‌ மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ பொறியியல்‌ துறையின்‌ நோக்கத்தை எடுத்துரைத்தார்‌. ஈகோஃபெஸ்ட்‌ ஆனது உலக ஆற்றல்‌ பாதுகாப்பு தினத்தை நினைவுகூறும்‌ வகையில்‌ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்‌. மேலும்‌ நாடு முழுவதும்‌ பல்வேறு துறைகளைச்‌ சார்ந்த மாணவர்கள்‌, பொறியாளர்கள்‌ மற்றும்‌ தொழில்நுட்ப வல்லுநர்கள்‌ தங்களின்‌ கருத்துக்கள்‌, கண்டுபிடிப்புகள்‌, தொழில்நுட்பங்கள்‌ மற்றும்‌ தயாரிப்புகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை வழங்குகிறது என்றார்‌.

சிஃபா சன்ப்ரா பிரைவேட்‌ லிமிடெட்‌ நிறுவனத்தின்‌ இயக்குனர்‌ டாகடர்‌.சையத்‌ இஸ்மாயில்‌ அவர்கள்‌ ஆற்றல்‌ பாதுகாப்பின்‌ முக்கியத்துவத்தைத் தெளிவாகவும்‌ எளிய முறையிலும்‌ எடுத்துரைத்தார்‌. சுற்றுச்சூழல்‌ என்பது உயிரினங்கள்‌ வாழ்வதற்கான இடமாகும்‌. நம்முடைய வளர்ச்சி எந்த வகையிலும்‌ சுற்றுச்சூழலை பாதிக்காதவாறு அமைய வேண்டும்‌ என்றும்‌ இன்றைய இளைஞர்கள்‌ ஆற்றல்‌ மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்‌ என்றும்‌ கூறினார்‌.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர்‌ டாகடர்‌. ௮.சு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள்‌ இக்கருத்தரஙகை தொடங்கி வைத்து ஆற்றல்‌ மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ பொறியியல்‌ துறையின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்‌. மேலும்‌, மாணவர்கள்‌ தற்போதைய தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும்‌ என்றும்‌ கூறினார்‌.

முன்னதாக இளங்கலை ஆற்றல்‌ மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ பொறியியல்‌ பிரிவில்‌ நான்காம்‌ ஆண்டு படிக்கும்‌ மாணவன்‌ செல்வன்‌.க.ஆகாஷ்‌ கருத்தரங்கிற்கு வருகை தந்திருந்த அனைவரையும்‌ வரவேற்றார்‌. இறுதியாக இளங்கலை ஆற்றல்‌ மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ பொறியியல்‌ பிரிவில்‌ நான்காம்‌ ஆண்டு படிக்கும்‌ மாணவி செல்வி.வ.ஹாசினி நன்றியுரையாற்றினார்‌.

Newsletter