மண்‌ நலத்தில்‌ ஆரோக்கியத்தில்‌ காலநிலை மாற்றத்தின்‌ தாக்கம்‌ மற்றும்‌ பயிர்‌ மேலாண்மை கொண்டு மட்டுப்படுத்துதல்‌ குறித்த கருத்தரங்கு

கோவை: முனைவர்‌ ப. இராமமூர்த்தி அவர்களின்‌ எட்டாவது நினைவு உரை மண்ணியல் மற்றும்‌ வேளாண் வேதியியல்‌ துறை மற்றும்‌ இந்திய மண்ணியியல்‌ கழகம்‌, கோவை பிரிவு இயற்கை வள மேலாண்மை இயக்ககம்‌ சார்பில்‌ இன்று நடைபெற்றது. இதில்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ முன்னாள்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ பி. முருகேசபூபதி அவர்கள்‌ உரையாற்றினார்‌. கோயமுத்தூர்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ ந. குமார்‌ அவர்கள்‌ தலைமை வகித்தார்‌.

கோவை: முனைவர்‌ ப. இராமமூர்த்தி அவர்களின்‌ எட்டாவது நினைவு உரை மண்ணியல் மற்றும்‌ வேளாண் வேதியியல்‌ துறை மற்றும்‌ இந்திய மண்ணியியல்‌ கழகம்‌, கோவை பிரிவு இயற்கை வள மேலாண்மை இயக்ககம்‌ சார்பில்‌ இன்று நடைபெற்றது. இதில்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ முன்னாள்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ பி. முருகேசபூபதி அவர்கள்‌ உரையாற்றினார்‌. கோயமுத்தூர்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ ந. குமார்‌ அவர்கள்‌ தலைமை வகித்தார்‌.

மண்ணியல்‌ மற்றும்‌ வேளாண் வேதியியல்‌ துறை பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ மற்றும்‌ இந்திய மணாணியியல்‌ கழக கோவை பிரிவு தலைவர்‌ முனைவர்‌ பி. மலர்விழி அவர்கள்‌ சிறப்பு விருந்தினர்களையும்‌, ஆராய்ச்சியாளர்களையும்‌ மாணவர்களையும்‌ வரவேற்றுப்‌ பேசினார்‌. அவரது உரையில்‌ முனைவர்‌ ப. இராமமூர்த்தி அவர்கள்‌ 20ம்‌ நூற்றாண்டின்‌ மண்ணியியல்‌ விஞ்ஞானிகளில்‌ மிகச்சிறந்த சாதனையாளர்‌ என்றும்‌, இந்திய மண்‌ மற்றும்‌ தட்பவெப்ப நிலைக்கேற்ப பயிர்‌ மகசூலைக்‌ குறிக்கோளாகக்‌ கொண்ட உரப்பரிந்துரையை கண்டறிந்தார்‌ என்றும்‌ எடுத்துரைத்தார்‌. முனைவர்‌ ப. இராமமூர்த்தி அவர்களின்‌ நினைவாக நடத்தப்படும்‌ இவ்வுரையானது இதன்‌ வரிசையில்‌ எட்டாவது நினைவு உரை என்று குறிப்பிட்டார்‌. முனைவர்‌ ப. இராமமூர்த்தி அவர்கள்‌ 20ஆம்‌ நூற்றாண்டின்‌ இந்திய மண்ணியல்‌ துறையின்‌ சிறந்த விஞ்ஞானிகளில்‌ ஒருவர்‌ ஆவார்‌. அகில இந்திய ஒருங்கிணைந்த ஆராய்ச்சித்‌ திட்டத்தின் கீழ்‌ மண்‌ ஆய்வு மற்றும்‌ பயிர்‌ ஏற்புத்திறன்‌ தொடர்பளவு திட்டத்தை 1967-ம்‌ ஆண்டு தொடங்கியவர்‌ 1975-ம்‌ ஆண்டு வரை திறம்பட நடத்திச்சென்ற பெருமை முனைவர்‌ ப. இராமமூர்த்தி அவர்களையே சாரும்‌. இந்திய மண்‌ மற்றும்‌ காலநிலைக்கு உட்படுத்தப்பட்ட மற்றும்‌ மகசூல்‌ நிர்ணய அளவு திட்டத்தை வகுத்தார்‌ என்றும்‌ கூறினார்‌.



வேளாண்‌ பல்கலைக்கழக இயற்கை வள மேலாண்மை இயக்குநர்‌ முனைவர்‌ à®…à®°. சாந்தி அவர்கள்‌ விழாவின்‌ சிறப்பு விருந்தினரை அவைக்கு அறிமுகப்படுத்தினார்‌. அவர்‌, முனைவர்‌ பி.முருகேச பூபதி அவர்கள்‌ முன்னாள்‌ துணை வேந்தர்‌, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்‌கழகம்‌ அவர்கள்‌ மண்ணியல்‌ வல்லுநர்‌ என்றும்‌ மண்‌ ஆய்வு மற்றும்‌ பயிர்‌ ஏற்புத்திறன்‌ தொடர்பளவு திட்டம்‌ சார்ந்த மண்வளம்‌ என்ற பிரிவில்‌ மிகச்‌ சிறந்த பங்களிப்பை இத்துறைக்கு அளித்துள்ளார்‌ என்று கூறினார்‌. டெசிபர்‌ மென்பொருள்‌ மற்றும்‌ மண்‌ நல அட்டை உருவாக்குவதில்‌ அவரது பங்கை நினைவு கூர்ந்தார்‌. மண்ணியல்‌ துறையில்‌ பல்வேறு சிறப்பு செயல்பாடுகளில்‌ அவரது பங்களிப்பு மிகவும்‌ முக்கியத்துவம்‌ வாய்ந்தது என்றும்‌ குறிப்பிட்டார்‌. மண் நலத்துக்கு மிக முக்கியத்துவம்‌ கொடுக்கும்‌ இக்காலகட்டத்தில்‌ இவ்வுரை மிக அவசியம்‌ என்று கூறினார்‌.

முனைவர்‌ ந. குமார்‌, துணை வேந்தர்‌ தமது தலைமை உரையில்‌, இந்தியாவில் நில சீரழிவின்‌ அளவு வளர்ந்து கொண்டே இருக்கிறது என்றும்‌, குறைந்து வரும்‌ மண்ணின்‌ கரிம அளவை கவனத்தில்‌ கொள்ள வேண்டும்‌ என்றும்‌ கூறினார்‌. ஏறக்குறைய 600 மில்லியன்‌ மக்கள்‌ பருவநிலை மாற்றத்தால்‌ பாதிக்கப்படுகிறார்கள்‌ என்றும்‌ கூறினார்‌. மேலும்‌, இப்பிரச்சனைகளைச் சரியான முறையில்‌ அணுகாவிட்டால்‌ இதன்‌ பாதிப்பு அதிக அளவில்‌ இருக்கும்‌. இன்றைய காலகட்டத்தில்‌ நிலச்‌ சீரழிவும்‌, அதனால்‌ சுற்றுச்‌ சூழலுக்கு ஏற்படும்‌ பாதிப்பும்‌ மண்ணியல்‌ விஞ்ஞானிகளுக்கு மிகப்‌ பெரிய சவாலாக இருக்கிறது என்றும்‌ கூறினார்‌. அவர்‌ தம்‌ உரையில்‌ மண் ஆரோக்கியத்தை பாதுகாக்க மேலும்‌ அதனை பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதில்‌ மண்ணியில்‌ மற்றும்‌ வேளான்‌ வேதியியல்‌ துறை, கோவை செய்யும்‌ பணிகளை பாராட்டினார்‌. உலக மண் நாளை ஒட்டி இத்துறையினால்‌ நடத்தப்பட்ட பேரணி மற்றும்‌ நிகழ்ச்சிகள்‌ அனைவரின்‌ கவனத்தையும்‌ ஈர்த்தது என்று கூறினார்‌.

மேலும்‌, அவர்‌ முனைவர்‌ பி. இராமமூர்த்தி அவர்களின்‌ பங்களிப்பே அகில இந்திய அளவில்‌ மண்‌ ஆய்வு மற்றும்‌ பயிர்‌ ஏற்புத்திறன்‌ தொடர்பளவு திட்டத்தை ஆரம்பிக்க காரணமாக இருந்தது என்று கூறினார்‌. அவ்வாறு 1967ம்‌ ஆண்டு கோவை வேளாண்மைப்‌ பல்கலைக்‌கழகத்தில்‌ மண்ணியல்‌ துறையில்‌ தொடங்கப்பட்ட மண்‌ ஆய்வு மற்றும்‌ பயிர்‌ ஏற்புத்திறன்‌ தொடர்பளவு திட்டம்‌ அகில இந்திய அளவில்‌ சிறந்து விளங்குகிறது. இப்பிரிவு விஞ்ஞானிகளால்‌ 31 பயிர்களுக்கும்‌, 10 பயிர்‌ திட்டங்களுக்கும்‌, 17 மண் வகைகளுக்கு, தமிழகத்தில்‌ ஆறு வேளாண்‌ மண்டலங்களுக்கு மண்‌ ஆய்வு மற்றும்‌ பயிர்‌ ஏற்புத்திறன்‌ ஒருங்கிணைந்த பயிர்‌ ஊட்டச்சத்து அமைப்பில்‌ உரங்களை அளிப்பதற்கு சமன்பாடுகள்‌ உருவாக்கப்பட்டு அவை பல்கலைக்‌கழகத்தால்‌ தொழில் நுட்பங்களாகவும்‌ வெளியிடப்பட்டுள்ளன என்று கூறினார்‌.



முனைவர்‌ பி. முருகேச பூபதி அவர்கள்‌ மண்ணின்‌ ஆரோக்கியத்தில்‌ காலநிலை மாற்றத்தின்‌ தாக்கம்‌ மற்றும்‌ அதனை பயிர்‌ மேலாண்மை கொண்டு மட்டுப்படுத்துதல்‌ என்ற தலைப்பில்‌ சிறப்புரை ஆற்றினார்‌. அவர்‌ தமது உரையில்‌ நிலையான வேளாண்மைக்கு மண்‌ ஆரோக்கியம்‌ மிகவும்‌ முக்கியம்‌ என்றார்‌. காலநிலை மாற்றம்‌ கார்பன்‌ -டை- ஆக்ஸைடு, நைட்ரஜன்‌, வெப்பம்‌, மழை ஆகிய காரணிகள்‌ மண்ணின்‌ இயற்பியல், பெளதீக மற்றும்‌ உயிரியல்‌ பண்புகளை மாற்றும்‌ தன்மை கொண்டவை என்றார்‌. காலநிலை மாற்றம்‌ மண்ணின்‌ அங்கக கரிமங்களின்‌ அளவு, வெப்ப அளவு, நீரின் அளவு மற்றும்‌ உப்புத்‌ தன்மை ஆகியவற்றை பாதிக்கிறது என்றார்‌. மேலும்‌ பயிர்களின்‌ செயல்திறன்‌ சத்துக்களின்‌ அளவு மற்றும்‌ அவற்றை பயிர்கள்‌ எடுத்துக்‌ கொள்ளும்‌ திறன்‌ ஆகியவை காலநிலை மாற்றத்தால்‌ பெரிதும்‌ பாதிக்கப்படுகிறது என்றார்‌.

இந்தியா போன்ற வளரும்‌ நாடுகளில்‌ பாலைவனமாக்கல்‌ மற்றும்‌ நில சீரழிவு ஆபத்து அதிகரித்து வருகின்றது, அதற்கு முக்கிய காரணம்‌ அதிகரித்து வரும்‌ வெப்பநிலை, மேம்பட்ட வெப்ப மயமாதல், வறட்சி மற்றும்‌ வளர்ந்து வரும்‌ மக்கள்‌ தொகை ஆகும்‌. உற்பத்தித்‌ திறன்களை அதிகரிக்க சரியான அல்லது பொருத்தமான ஊட்டச்சத்து மேலாண்மை கடைப்பிடிக்க வேண்டும்‌. அது மட்டுமின்றி வறட்சி, வெப்ப அலை மற்றும்‌ குளிர்‌ அலை, வெள்ளம்‌ ஆகியவற்றை தாங்கி வளரக்கூடிய பயிர்களை தேர்வு செய்தல்‌ வேண்டும்‌. பொதுவாக மண்ணின்‌ கரிமப்‌ பொருள்களை மேம்படுத்துவதில்‌, உரங்களின்‌ சரியான முறையில்‌ பயிர்களுக்கு இடுவது மூலமாகவும்‌ மற்றும்‌ மேம்பட்ட வேளாண் மேலாண்மை நடைமுறைகளைக் கையாள்வது மூலமாகவும்‌ பருவநிலை/ காலநிலையால்‌ ஏற்படும்‌ பாதிப்புகளைச் சமாளிக்கலாம்‌. மண்ணின்‌ கரிமப்பொருள்‌ மூலகாரணியாக கொண்டு நீர்‌ பிடிப்பு திறனையும்‌ மற்றும்‌ மண்ணின்‌ கட்டமைப்பை மேம்படுத்த முடியும்‌. இதனால்‌ நீர்‌ பற்றாக்குறை தீவிரத்தை குறைக்க முடியும்‌. அதுமட்டுமின்றி மண்‌ சுருக்கம்‌ மற்றும்‌ மண்‌ அரிப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கலாம்‌. மண்‌ பரிசோதனை அடிப்படையிலான உர அளவுகளை கண்டறிந்து பயிர்களுக்கு உரம்‌ அளித்தால்‌ ஒரு குறிப்பிட்ட ஊட்டச்சத்து அளவை குறைப்பது மட்டுமின்றி நன்மை செலவு விகிதத்தை அதிகரிக்கலாம்‌.

ராமமூர்த்தி மற்றும்‌ பலர்‌ (1967) உருவாக்கிய தூண்டல்‌ மற்றும்‌ இலக்கு விளைச்சல்‌ முறையை பயன்படுத்தினால்‌ சமச்சீர்‌ ஊட்டச்சத்துக்கள்‌ சமமாக பயிர்களுக்கு அளித்தல்‌ மற்றும்‌ மண் கிடைக்கக்‌ கூடிய ஊட்டச்சத்துக்கள்‌ சரியான முறையில்‌ கிடைக்கச்‌ செய்ய முடியும்‌ என்று அறிவியல்‌ ஆராய்ச்சி மூலம்‌ நிரூபித்துள்ளார்‌. இந்த கருத்தின்‌ அடிப்படையில், மண்‌ பரிசோதனை பயிர்‌ பதில்‌ தொடர்பு ஆய்வு கீழ்‌ பல்வேறு ஆராய்ச்சிகள்‌ இந்தியாவில்‌ மேற்கொள்ளப்பட்டது மற்றும்‌ தோட்டக்கலை பயிர்கள்‌ மற்றும்‌ பல்வேறு மண் வகையில்‌ நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்‌ தானியங்கள்‌, தினை, பருப்பு, பருத்தி, காய்கறிகள்‌, மருத்துவப்‌பயிர்கள்‌ மற்றும்‌ மலர்‌ பயிர்கள்‌ அடங்கிய 31 முக்கிய விவசாய மற்றும்‌ தோட்டக்கலைப்‌ பயிர்களின்‌ விரும்பிய மகசூல்‌ இலக்கிற்கு (STCR-IPNS) பரிந்துரைகள்‌ உருவாக்கப்பட்டுள்ளன மற்றும்‌ மானாவாரி பயிர்களுக்கும்‌ வளர்ந்து வரும்‌ தொழில்நுட்பஙகளுக்கு ஏற்ப அதாவது SRI மற்றும்‌ சொட்டு நீர்‌ பாசனம்‌ மற்றும்‌ மானாவாரி பயிர்களுக்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து பரிந்துரைகளான மண்வள மென்பொருள்‌ (DSSIFER) மூலம்‌ தகுந்த இடத்திற்கான சமச்சீர்‌ உர பரிந்துரை மற்றும்‌ நுண்ணூட்டச்சத்து அளவு கொண்ட பரிந்துரையை மண்‌ ஆய்வு மற்றும்‌ தொழில்நுட்ப துறையால்‌ நடத்தப்படும்‌ பல்வேறு அமைப்புகள்‌, தனியார்‌ தொழில்‌ முனைவோர்‌, விஞ்ஞானிகள்‌, ஆராய்ச்சி அறிஞர்கள்‌, முற்போக்கான விவசாயிகள்‌ மற்றும்‌ பலர்‌ இதனை சமச்சீர்‌ உரம்‌ இடுதலுக்கும்‌ மற்றும்‌ நீர்தர மேலாண்மைக்கும்‌ பின்பற்றுகின்றனர்‌. மண்‌ அறிவியல் மற்றும்‌ வேளாண் வேதியியல்‌ துறையில்‌ உள்ள மண் ஆய்வு மற்றும்‌ தொழில்நுட்பம்‌ (SOTAC) பயன்படுத்தி உர பரிந்துரை மற்றும்‌ பண்ணை ஆலோசனை சேவைகள்‌ விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. பருவநிலை / காலநிலை மாற்றத்‌ தழுவல்‌ வழிநடத்தும்‌ தணிப்பை ஊட்டச்சத்து மேலாண்மை உத்திகள்‌ மூலம்‌ அடைய முடியும்‌. அதாவது மண்ணின்‌ கரிமப்‌ பொருட்களின்‌ விரிவாக்கம்‌, மண் பரிசோதனை மற்றும்‌ ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மூலம்‌ உரம்‌ அளித்தல்‌ (STCR-IPNS), இயற்கை நுண்ணூட்டச்‌ சத்துக்களை ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து பரிந்துரைக்கான மண்வள மென்பொருள்‌ மூலம்‌ கொடுப்பது, தார்பூசியா யூரியா, ஊட்டம்‌ ஏற்றிய தொழு உரம்‌, நுண்ணுயிர்கள்‌, பயிர்‌ மீதமுள்ள தாவர கழிவுகளை எரிப்பதை தவிர்ப்பது மூலமாகவும்‌ காலநிலை மாற்றங்களுக்கேற்ப பயிர்களைப் பயன்படுத்துவது மூலமும்‌ மண்வளத்தைப் பாதுகாக்கலாம்‌. விழா முடிவில்‌ மண் அறிவியல்‌ மற்றும்‌ வேளாண் வேதியியல்‌ துறை பேராசிரியர்‌ மற்றும்‌ இந்திய மண்ணியியல்‌ கழக புதுதில்லி கவுன்சிலர்‌ முனைவர்‌ சந்திரசேகரன்‌ அவர்கள்‌ நன்றி உரையை வழங்கினார்‌.

Newsletter