உதகை அழகு தாவரங்கள் மற்றும் மூலிகை தாவர வகுப்பில் பங்கேற்ற கோவை வேளாண் கல்லூரி மாணவர்கள்

நீலகிரி: உதகை தமிழ்நாடு வேளாண் தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற அழகு தாவரங்கள் மற்றும் மூலிகை தாவரங்களை பற்றிய வகுப்பில் கோவை அமிர்தா வேளாண் கல்லூரி மாணவ, மாணவிகள் 120க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

உதகையில் தமிழ்நாடு தாேட்டக்கலை துறை சார்பில் நடத்தப்படும் தாேட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தில் ஆயிரக்கணக்கான மருத்துவ குணமிக்க அறிய வகை தாவரங்கள் பயிரிடப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த தாவரங்கள் குறித்து அறிவதற்காக நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு வேளாண்மை கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் இதன் சிறப்பம்சங்கள், வளர்க்கும் முறைகள் குறித்து அறிந்துசெல்வர்.

இந்நிலையில், உதகைக்கு வந்திருந்த காேவை வேளாண்மை கல்லூரி மாணவ, மாணவியர் உதகையில் உள்ள மருத்துவ குணமிக்க மூலிகை தாவரங்களை குறித்து கேட்டறிந்தனர். இந்த வகுப்பு தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக அழகு தாவரங்கள் மற்றும் மூலிகை தாவரங்களை பற்றிய வகுப்பில் கலந்து கொண்ட மாணவர்கள் தெரிவித்தனர்.

Newsletter