வேளாண் பல்கலையில் செங்காந்தள்‌ மருத்துவ பயிரில்‌ நோய் மேலாண்மை குறித்த கருத்தரங்கு

கோவை: மருத்துவ பயிரான செங்காந்தள்‌ (குளோரியோசா சுபர்பா) தமிழகத்தில்‌ சுமார்‌ 3000 எக்டர்‌ பரப்பளவில்‌ திருப்பூர்‌, கரூர், திண்டுக்கல்‌, சேலம்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌ மற்றும்‌ நாகபட்டினம்‌. மாவட்டங்களில்‌ பயிரிடப்படுகிறது.

கோவை: மருத்துவ பயிரான செங்காந்தள்‌ (குளோரியோசா சுபர்பா) தமிழகத்தில்‌ சுமார்‌ 3000 எக்டர்‌ பரப்பளவில்‌ திருப்பூர்‌, கரூர், திண்டுக்கல்‌, சேலம்‌, அரியலூர்‌, பெரம்பலூர்‌ மற்றும்‌ நாகபட்டினம்‌. மாவட்டங்களில்‌ பயிரிடப்படுகிறது. 

இப்பயிரின்‌ விதைகளில்‌ கேன்சர்‌ மற்றும்‌ மூட்டுவலி நோய்களுக்கெதிரான வேதிப்பொருட்கள்‌ அடங்கியுள்ளது. மருத்துவத்தில்‌ தேவை அதிகரிப்பதால்‌ தற்பொழுது விவசாயிகள்‌ செங்காந்தள்‌ (கண்வலிக்கிழங்கு) சாகுபடியில்‌ அதிக ஆர்வம்‌ காட்டுகின்றனர்‌. இப்பயிர்‌ சாகுபடி, கிழங்கு மூலம்‌ ஆகஸ்ட்‌ மாதத்தில்‌ நடவு செய்யப்பட்டு 160 முதல்‌ 180 நாட்களில்‌ அறுவடை செய்யப்படுகிறது. இப்பயிரில்‌ கடந்த வாரத்தில்‌ தமிழ்நாடு வேளாண்மைப்பலகலைக்கழகம்‌ விஞ்ஞானிகள்‌ திருப்பூர்‌ மற்றும்‌ திண்டுக்கல்‌ மாவட்டத்தில்‌ மேற்கொண்ட வயல்வெளி பார்வையில், வேர் அழுகல்‌ மற்றும்‌ இலைக்கருகல்‌ நோயின்‌ தாக்கமானது அதிக அளவில்‌ பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. தொடர்ந்து பெய்து வரும்‌ மழை மற்றும்‌ உகந்த தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக இப்பயிரில்‌ நோயின்‌ தாக்கம்‌ அதிகமாக உள்ளது. இச்சமயத்தில்‌ இப்பயிரை தாக்கக்கூடிய வேர்‌ அழுகல்‌ மற்றும்‌ இலைக்கருகல்‌ நோய் தாக்கத்தினால்‌ மகசூல்‌ பாதிக்கப்படுவதால்‌ விவசாயிகள்‌ பெரும்‌ சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது.

இந்நோய்களை கட்டுப்படுத்துவதற்கு ஒருங்கிணைந்த முறையில்‌ மேலாண்மை முறைகளை கடைபிடிக்க வேண்டும். அதாவது நோயற்ற தரமான கிழங்குகளை நடுதல்‌, மண்புழு உரம்‌ இடுதல், உயிர் நுண்ணுயிரிகளை மண்ணில்‌ இடுதல்‌ மற்றும்‌ பயிர்களின்‌ மேல்‌ தெளித்தல்‌, களை செடிகளை அகற்றுதல்‌, மிகவும்‌ தேவையான சமயத்தில்‌ மட்டுமே பூஞ்சாண கொல்லிகளை உபயோகித்தல்‌, மண்ணிலிருந்து நோய்‌ தாக்கிய செடிகளை அகற்றுதல்‌ போன்ற செயல்களை கடைபிடித்தால்‌ அதிக மகசூல்‌ பெறலாம்‌. நோயின்‌ அறிகுறிகள்‌, நோய்‌ தோன்றும்‌ பருவம்‌, நோய்‌ காரணிகள்‌ பற்றி அறிந்தால்‌ மட்டுமே தக்க சமயத்தில்‌ மேலாண்மை முறைகளை எளிதில்‌ கடைபிடிக்கலாம்‌.

வேர்‌ அழுகல்‌ நோய்‌







இந்நோய்‌ மண்ணில்‌ வாழக்கூடிய இரண்டு வகையான பூஞ்சாணங்களான மேக்ரோபோமினா பேசியோலினா மற்றும்‌ ஸ்கிளிரோசியம் ராலப்சி மூலம்‌ வேர்‌ அழுகலை ஏற்படுத்துகிறது. இப்பூஞ்சாணத்தின்‌ காரணிகள்‌ மண்ணில்‌ நீண்ட காலம்‌ உயிர்‌ வாழ்வதால்‌ கிழங்குகளை தாக்கி நடவு செய்த முப்பது நாட்களில்‌ முளைத்து வரும்‌ செடிகளை தாக்குகிறது. நோய்‌ தாக்கப்பட்ட செடியின்‌ இலைகள்‌ பச்சை நிறத்திலிருந்து மாறுபட்டு மஞ்சள்‌ நிறத்துடன்‌ வாடி காணப்படும்‌. நோய்‌ தீவிரமடையும்‌ போது தண்டு மற்றும்‌ வேர்‌ பகுதி முழுவதும்‌ அழுகிவிடுவதால்‌ செடிகள்‌ வாடிவிடும்‌. நோய் முற்றிய நிலையில்‌ ஸ்கிளிரோசியம் பூசணம்‌ தாக்குதலாக இருந்தால்‌ தண்டு மற்றும்‌ வேர்‌ இணையும்‌ பகுதியில்‌ வெண்மை நிறமான பூசணத்துடன்‌ கடுகு போன்ற முடிச்சுகள்‌ காணப்படும்‌. மெக்ரோபோமினா பூஞ்சாண தாக்குதலாக இருந்தால்‌ அடித்தண்டு பகுதியில்‌ கரும்புள்ளிகளாக நோய்‌ காரணிகள்‌ காணப்படும்‌. மண்ணின்‌ தன்மை கொண்டு இப்பூஞ்சாணங்கள்‌ மாறுபடும்‌. மேலும்‌ நோய்‌ தாக்கப்பட்ட செடிகளிலிருந்து மணர்‌ மற்றும்‌ வாய்க்கால்‌ தண்ணீரின்‌ மூலம்‌ பூஞ்சாண வித்துக்கள்‌ மற்ற செடிகளுக்கு பரவும்‌.

மேலாண்மை முறைகள்‌

• நோயின்‌ அறிகுறிகள்‌ தென்பட்டவுடன்‌ செடியை சுற்றிலும்‌ 0.1 சதம்‌ கார்பனடாசிம்‌ (1 கிராம்‌ / லிட்டர்) அல்லது 0.25 சதம்‌ காப்பர்‌ ஆக்ஸி குளோரைடு (2.5 கிராம்‌ /லிட்டர்) 10 நாள்‌ இடைவெளியில்‌ இரண்டு முறை மண்ணில்‌ இட வேண்டும்‌.

• நோயின்‌ அறிகுறிகள்‌ தீவரமாகும்‌ பொழுது செடியை சுற்றிலும்‌ -0.1 சதம்‌ டெபுகோனசோல்‌ (1 மில்லி / லிட்டர்‌) அல்லது டெபுகோனசோல்‌ 50 சதம்‌ + டிரைபுளோக்ஸி ஸ்ரோபின்‌ 25 சதம்‌ 10 நாட்கள்‌ இடைவெளியில்‌ இரண்டு முறை மண்ணில் இட வேண்டும்‌.

• விதைப்பதற்கு பயன்படுத்தப்படும்‌ விதை கிழங்குகளை காற்றோட்டம்‌ உள்ள குடோன்களில்‌ சேமிக்கவும்‌.

• நோய் தாக்கிய காய்ந்த செடிகளை அப்புறப்படுத்தி அழிக்கவும்‌.

இலைக்கருகல்‌ நோய்‌

இந்நோய்‌ ௮ல்டர்நேரியா ௮ல்டர்நேட்டா பூஞ்சாணத்தினால்‌ ஏற்படுகிறது. பயிர்‌ பூக்கும்‌ தருவாயில்‌ செப்டம்பர்‌ கடைசி வாரம்‌ முதல்‌ டிசம்பர்‌ கடைசி வாரம்‌ வரை இலைக்கருகல்‌ நோயின்‌ தாக்கத்தை காணலாம்‌. நோயின்‌ அறிகுறிகளாக முதலில்‌ சிறு வட்ட அல்லது நீளவட்ட பழுப்பு நிற புள்ளிகள்‌ தோன்றும்‌. அதன்பின்‌ இப்புள்ளிகள்‌ ஒன்றுடன்‌ ஒன்றிணைந்து இலைக்கருகலை ஏற்படுத்தும்‌. மேலும்‌ நோய்‌ தீவிரமடையும்போது பூஞ்சாண வித்துக்கள்‌ தண்டு மற்றும்‌ மலர்களுக்கு பரவி கருகலை உண்டாக்கும்‌. தொடர்‌ மழை, குளிர்ச்சியான வெப்பம்‌, காற்றில்‌ அதிக ஈரப்பதம்‌ (80 சதம்‌) நிலவும்‌ போது பூஞ்சாண வித்துக்கள்‌ இலைகளில்‌ பெருகி தொடர்ந்து காற்றின்‌ மூலம்‌ பரவி மற்ற செடிகளின்‌ இலைகளில்‌ கருகலை ஏற்படுத்தும்‌. பூக்கும்‌ பருவத்தில்‌ நோய்‌ தாக்குவதால்‌ அதிக மகசூல்‌ பாதிப்பை ஏற்படுத்தும்‌.

இதனை கட்டுப்படுத்த விவசாயிகள்‌ கீழ்க்காணும்‌ மேலாண்மை முறைகளை பின்பற்றுமாறு பரிந்துரைக்கப்படுகிறது.

மேலாண்மை முறைகள்‌

• நோய் தாக்கப்பட்ட இலைச்சருகுகளை அகற்றி அப்புறப்படுத்துதல்‌ மற்றும்‌ களைச்செடிகளை அகற்றுதல்‌

• நோயின்‌ அறிகுறிகள்‌ தென்பட்டவுடன்‌ 0.2 சதம்‌ மேன்‌கோசேப் (2 கிராம்‌ / லிட்டர்) என்ற அளவில்‌ இலை வழியாக 10 நாட்கள்‌ இடைவெளியில்‌ இரண்டு முறை தெளிக்க வேண்டும்‌.

• நோயின்‌ தாக்கம்‌ தீவரமாகும்‌ பொழுது அல்லது 0.1 சதம்‌ டெபுகோனசோல்‌ (1 மில்லி/ லிட்டர்) அல்லது 0.2 சதம்‌ கார்பன்டாசிம்‌ 4 மேன்கோசேப்‌ கொண்ட மருந்தை (2 கிராம்‌ / லிட்டர்‌) என்ற அளவில் 10 நாள்‌ இடைவெளியில்‌ இரண்டு அல்லது மூன்று முறை தெளிக்க வேண்டும்‌.

பயிர்களில்‌ நோய்‌ வரும்‌ முன்‌ காப்போம்‌ என்ற நிலைபாட்டை கடைபிடித்து உயிர்‌ நுண்ணுயிரிகளான டிரைக்கொடேர்மா அஸ்பர்லம் பேசில்லஸ் சப்டிலிஸ் மற்றும்‌ சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் கொண்டு நோய்‌ மேலாண்மை முறைகளை கடைபிடித்தால்‌ மண்ணின்‌ வளத்தை கூட்டுவதோடு பயிர்களில்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தியை பெருக்க உதவுகின்றது மற்றும்‌ வீரியமான நோயற்ற பயிரை பெற வழிவகுக்கும்‌. மருத்துவ பயிர்களில்‌ தேவைப்பட்டால்‌ மட்டுமே ரசாயன கொல்லி மருந்தை உபயோகிக்க வேண்டும்‌. அறுவடைக்கு ஒரு மாதம்‌ முன்பே மருந்து தெளிப்பதை நிறுத்தி விட வேனர்டும்‌. இத்தகவலை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌, தோட்டக்கலை கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்திலுள்ள மருந்து மற்றும்‌ மணமூட்டும்‌ பயிர்கள்‌ துறையை சேர்ந்த விஞ்ஞானிகள்‌ தெரிவித்துள்ளனர்‌.

மேலும்‌ தொடர்புக்கு,

பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌,

மருந்து மற்றும்‌ மணமூட்டும்‌ பயிர்கள்‌ துறை,

தோட்டக்கலைக்கலலூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்பல்கலைக்கழகம்‌,

கோயமுத்தூர்‌ - 641 003.

தொலைப்பேசி எண்கள்‌: 0422-6611365.

Newsletter