வேளாண் பல்கலைக்கழகத்தில் உழவியல்‌ விஞ்ஞானிகளுக்கான மேம்பட்ட பயிற்சி மையம்‌

கோவை: உழவியல்‌ ஆசிரியர்களுக்கான மேம்பட்ட பயிற்சி மையத்தின்‌ 37வது பயிற்சியானது உழவியல்‌ துறையில்,‌ நவம்பர்‌ மாதம்‌ 28ம்‌ நாள்‌ முதல்‌ டிசம்பர்‌ மாதம்‌ 18ம்‌ நாள்‌ வரை வேளாண்‌ பெருமக்களின்‌ வருமானத்தை இருமடங்காக்க மேம்படுத்தப்பட்ட வேளாண்‌ தொழில்நுட்பங்கள்‌ மற்றும்‌ உழவியல்‌ தொழில்நுட்பங்களின்‌ பங்கு என்ற தலைப்பில்‌ நடைபெற உள்ளது. இப்பயிற்சிக்கு மொத்தம்‌ பதினான்கு பங்கேற்பாளர்கள்‌ இந்தியா முழுவதும்‌ மொத்தமாக ஏழு மாநிலங்களிலிருந்து பங்கு பெற்றுள்ளனர்‌.

இப்பயிற்சியின்‌ துவக்க விழாவானது இன்று(நவ., 28)‌ உழவியல்‌ துறை, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ நடைபெற்றது. 

இப்பயிற்சியினை துணைவேந்தர்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌ முனைவர்‌ ந.குமார்‌ அவர்கள்‌ துவக்கி வைத்து வேளாண்மையில்‌ உழவர்களுக்கு கிடைக்கக்கூடிய குறைந்த வருமானம்‌ பற்றி எடுத்துரைத்து, அவற்றை இருமடங்காக்க மேம்படுத்தப்பட்ட வேளாண்‌ தொழில்நுட்பங்கள்‌ மற்றும்‌ உழவியல்‌ தொழில்நுட்பங்களின்‌ பங்கு பற்றி விரிவாக எடுத்துரைத்தார்‌. மேலும்‌, விவசாய பெருமக்களின்‌ வருமானத்தை இருமடங்காக உயர்த்த பயிர்களின்‌ உற்பத்தி திறனை மேற்கண்ட தொழில்நுட்பத்தைப் பயன்‌படுத்தி உயர்த்த வேண்டும்‌ மேலும்,‌ விவசாய பெருமக்களுக்கு அவர்களுடைய உற்பத்தி செய்யப்படும்‌ பொருள்களுக்கு அதிக விலை நிர்ணயம்‌ செய்வதும்‌ முக்கியமாகும்‌ என்றார்‌.

விழாவில் முனைவர்‌. வி. கீதாலட்சுமி, இயக்குநர்‌, பயிர்‌ மேலாண்மை இயக்ககம்‌ அவர்கள்‌ சிறப்புரை ஆற்றுகையில்,‌ தற்போதைய வேளாண்மை சந்திக்கும்‌ சவால்களான பருவநிலை மாற்றம்‌, மண்‌ ஊட்டச்சத்துக் குறைபாடு மற்றும்‌ அதிக மழைபெய்ப்பின்‌ மாற்றம்‌ போன்றவற்றை முதன்மை தொழில்நுட்பங்களைக் கொண்டு எதிர்கொண்டு சிறப்பான மற்றும்‌ வேளாண்‌ உற்பத்தியைப் பெருக்க வேண்டுகோள்‌ விடுத்தார்‌. மேலும்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பலகலைக்கழகத்தால்‌ நடத்தப்படும்‌ வேளாண்‌ பெருமக்களின்‌ இருமடங்கு பெருக்க கிணத்துகடவு பகுதியில்‌ செயல்படும்‌ திட்டங்கள்‌ பற்றி எடுத்துரைத்தார்‌.

முன்னதாக, முனைவர்‌. சி. ஆர்‌. சின்னமுத்து, பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ (உழவியல்‌ மற்றும்‌ இயக்குநர், உழவியல்‌ ஆசிரியர்களுக்கான மேம்பட்ட பயிற்சி மையம்‌ அவர்கள்‌ இப்பயிற்சி பற்றிய நோக்கங்கள்‌ மற்றும்‌ அது உருவான விதம்‌ பற்றி விரிவாக எடுத்துரைத்து அனைவரையும்‌ இப்பயிற்சிக்கு வரவேற்றார்‌. இறுதியாக, பேராசிரியர் முனைவர்‌. à®….வேலாயுதம்‌ அவர்கள்‌ நன்றியுரை ஆற்றினார்‌.

Newsletter