கோவை வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ விஞ்ஞானிகளுக்கு பயிற்சி

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகத்திலுள்ள பயிர்‌ பாதுகாப்பு மையத்தின்‌ கீழ்‌ இயங்கும்‌ வேளாண்‌ பூச்சியியல்‌ துறை, பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ இந்திய வேளாண்‌ ஆராய்ச்‌சிக்‌ கழகத்தின்‌ உறுப்பு நிறுவனங்களின்‌ விஞ்ஞானிகளுக்கான உயர்திறன்‌ வளர்ப்பு பயிற்சி மையத்தில்‌ 21 நாள்‌ பயிற்சி திட்டத்தை ஏற்பாடு செய்து நவம்பர்‌ 5 முதல்‌ 25 வரை நடத்தியது. பூச்சுகளின்‌ எதிர்ப்பிற்கான சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ மூலக்கூறு அணுகுமுறைகள்‌ குறித்த நுண் திறன்‌ வளர்ப்பு பயிற்சியில்‌, பதினொரு மாநிலங்களைச்‌ சேர்ந்த பதினெட்டு விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்‌.

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகத்திலுள்ள பயிர்‌ பாதுகாப்பு மையத்தின்‌ கீழ்‌ இயங்கும்‌ வேளாண்‌ பூச்சியியல்‌ துறை, பல்கலைக்கழகங்கள்‌ மற்றும்‌ இந்திய வேளாண்‌ ஆராய்ச்‌சிக்‌ கழகத்தின்‌ உறுப்பு நிறுவனங்களின்‌ விஞ்ஞானிகளுக்கான உயர்திறன்‌ வளர்ப்பு பயிற்சி மையத்தில்‌ 21 நாள்‌ பயிற்சி திட்டத்தை ஏற்பாடு செய்து நவம்பர்‌ 5 முதல்‌ 25 வரை நடத்தியது. பூச்சுகளின்‌ எதிர்ப்பிற்கான சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ மூலக்கூறு அணுகுமுறைகள்‌ குறித்த நுண் திறன்‌ வளர்ப்பு பயிற்சியில்‌, பதினொரு மாநிலங்களைச்‌ சேர்ந்த பதினெட்டு விஞ்ஞானிகள் கலந்து கொண்டனர்‌.

இப்பயிற்சியின்‌ முக்கிய நோக்கம்‌ பயிர்‌ பாதுகாப்பில்‌ பூச்‌சுகளுக்கான எதிர்ப்புதிறன்‌ உடைய பயிர்‌ இரகங்களை அடையாளம்‌ காணும்‌ முறைகளில்‌ நிபுணத்துவம்‌ பெறுதல்‌, காலத்திற்கேற்ப நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துதல்‌ போன்றவையாகும்‌.



பல்கலைக்கழகத்தின்‌ பல்துறை விஞ்ஞானிகள்‌ மற்றும்‌ புது டில்லியில்‌ உள்ள தேசிய தாவர மரபணு ஆராய்ச்‌சி நிறுவனம்‌ (என்ஜஐபிஜிஆர்‌), இந்திய தானியப்‌ பயிர்கள்‌ ஆராய்ச்‌சி நிறுவனம்‌ (ஐஐஎம்‌ஆர்‌), ஹைதராபாத்‌ , இந்திய எண்ணெய்‌ வித்து ஆராய்ச்சி நிறுவனம்‌ (ஐஐஓஆர்‌, ஹைதராபாத்‌, கரும்பு இனப்பெருக்கம்‌ நிறுவனம்‌, கோவை ஆகிய உயர்‌ துறைகளைச்‌ சார்ந்த நிபுணர்கள்‌ பயிற்சி அளித்தனர்‌.

பயிற்சியின்‌ முடிவில்‌, நவம்பர்‌ 25ம்‌ தேதி நிறைவு விழா நடைபெற்றது. தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழக பதிவாளர்‌ முனைவர்‌ ஏ.எஸ்‌. கிருஷ்ணமூர்த்தி விழாவிற்கு தலைமை தாங்கினார்‌. பயிற்‌சியாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி, தலைமையுரை ஆற்றும்பொழுது, அவர்‌, பூச்சுகளுக்கான எதிர்ப்புத்தன்மை பயிர்களில்‌ இயற்கையாகவே அமையப்‌ பெற்றுள்ளது. இதுவே, பயிர் பாதுகாப்பின்‌ அடித்தளமாக உள்ளது என்றார்‌. இனிவருங்காலத்தில் பூச்சு மற்றும்‌ நோய்களுக்கு எதிர்ப்புத்திறன்‌ படைத்த பயிர்‌ இரக்கங்களைக் கவனத்துடன்‌ உருவாக்க வேண்டும்‌ என அறிவுறுத்தினார்‌.



இந்தியாவில்‌ பூச்சு எதிர்ப்பு திறன்‌ கொண்ட பயிர்களுக்கான ஆராய்ச்சியில் முன்னோடியாக விளங்கி வரும்‌, தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகத்தின்‌ முன்னாள்‌ விரிவாக்க கல்வி இயக்குநராகப்‌ பணியாற்றிய, முனைவர்‌ சு.உத்தமசாமி, முக்கியவுரையாற்றினார்‌. பூச்சு எதிர்ப்புத்திறனுடைய பயிர்களின்‌ வரலாற்றைக்‌ குறிப்பிட்டுப் பேசுகையில்‌, தற்போது நாம்‌ சந்திக்கின்ற பிரச்சனைகளான சுற்றுப்புறச்சூழல்‌ மாசுபடுதல்‌, பசுமைக்குடில்‌ வாயுக்களினால்‌ ஏற்படும்‌ மாற்றங்கள்‌, காலநிலை மாறுபாடுகள்‌ ஆகியவற்றைக்‌ கருத்தில்‌ கொண்டு ஆராய்ச்‌சிகள்‌ மேம்படுத்த வேண்டும்‌ என்று கூறினார்‌.

கூட்டத்தில்‌ உரையாற்றிய, பல்கலைக்கழகத்தின்‌ முதுகலைப்‌ பட்டப்படிப்பு புலத்தின்‌ முன்னாள்‌ முதன்மையரும்‌, பூச்சியியல்‌ நிபுணருமான, முனைவர்‌ எஸ்‌.மோகன்‌, விஞ்ஞானிகளின்‌ ஆராய்ச்‌சி மற்றும்‌ மேம்பாட்டுத்துறையில்‌, திறன் மேம்பாடு, பயிற்சி, தொழில்நுட்ப பரிமாற்றம்‌ மற்றும்‌ வர்த்தகம்‌ ஆகியவற்றைப்‌ பயிற்றுவிப்பது நாட்டிற்குப் பயனுள்ளதாக இருக்கும்‌ என்று கூறினார்‌.

மாணவர்‌ நல மையத்தின்‌ முதன்மையரும்‌, நோயியல் நிபுணருமான, முனைவர்‌ ரகுச்சந்தர்‌, கூட்டத்தில்‌ முனைப்பான ஆராய்ச்‌சியைத்‌ தொடரவும்‌, கண்டுபிடிப்புகளை உயர்‌ மதிப்பீடுள்ள பத்திரிகைகளில்‌ வெளியிடவும்‌ அறிவுறுத்தினார்‌. இது ஒட்டுமொத்த ஆராய்ச்‌சிக்கும்‌ உத்வேகம்‌ அளிக்கும்‌ என்று கூறினார்‌. பூச்‌சியல்‌ துறையின்‌ பேராசிரியர்‌ மற்றும் தலைவரும்‌, இப்பயிற்சி மையத்தின்‌ இயக்குநர்‌, முனைவர்‌. ந. சாத்தையா, பயிற்சி அறிக்கையை சமர்ப்பித்தார்‌. பூச்சியியல்‌ பேராசிரியரும்‌, பயிற்சி ஒருங்கிணைப்பாளருமான முனைவர்‌. சீ.சுரேஸ்‌ முன்னதாக வரவேற்புரையாற்றினார்‌. இறுதியில்‌, பூச்‌சியியல்‌ பேராசிரியர்‌ முனைவர்‌ மா.முருகன்‌ நன்றி கூறினார்‌.

Newsletter