வரும் டிச., 2ம் தேதி வேளாண்‌ பல்கலையில்‌ வேளாண் ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதி பயிற்சி

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண்‌ வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ ஐந்து நாட்கள்‌ வேளாண் ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதி பயிற்சி இறுதி ஆண்டு பட்டதாரி மாணவர்கள், பட்டதாரிகள்‌ மற்றும்‌ இளைஞர்களுக்கு வழங்கப்படுகிறது.

வேளாண்‌ ஏற்றுமதி மற்றும்‌ இறக்குமதி பற்றிய அனைத்து தகவல்களும்‌ இப்பயிற்சியில்‌ பயிற்றுவிக்கப்படுகிறது.

இப்பயிற்சி வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில்‌ டிசம்பர்‌ மாதம்‌ 2ம் தேதி முதல்‌ 6ம் தேதி வரை வழங்கப்படுகிறது. பயிற்சி கட்டணமாக நபர்‌ ஒன்றுக்கு ரூபாய்‌ 10,000 + ரூ 1,800 ஜிஎஸ்டி (18%) - ரூபாய்‌ 11,800/- வசூலிக்கப்படுகிறது. பதிவுக்கு குறைந்த எண்ணிக்கையிலான இடங்களே (20 நபர்கள்‌) உள்ளது.

மேலும்‌ பதிவுக்கு, தொடர்பு கொள்ள:

மின்னஞ்சல்‌: business @tnau.ac.in / eximabdtnau @ gmail.com

தொலைபேசி எண்: 0422-6611310 / 9500476626.

Newsletter