வாசனைப்பயிர்களில்‌ அகில இந்திய அளவில்‌ ஒருங்கிணைக்கப்பட்ட ஆராய்ச்சித்திட்டத்தின்‌ முப்பதாவது குழு கூட்டம்‌

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ வாசனைப்பயிர்களில் அகில இந்திய அளவில்‌ ஒருங்கிணைக்கப்பட்ட ஆராயச்சித்திட்டத்தின்‌ முப்பதாவது குழு கூட்டம்‌ நேற்று துவங்கியது. இதை கோழிக்கோட்டில்‌ அமைந்துள்ள இந்திய வாசனைப்பயிர்கள்‌ ஆராய்ச்சி நிறுவனமும்‌, கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ வாசனை மற்றும்‌ மலைத்தோட்டப்பயிர்கள்‌ துறையும்‌ இணைந்து நடத்தியது. இந்த கூட்டம்‌ நாளை வரை நடைபெற உள்ளது.

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ வாசனைப்பயிர்களில் அகில இந்திய அளவில்‌ ஒருங்கிணைக்கப்பட்ட ஆராயச்சித்திட்டத்தின்‌ முப்பதாவது குழு கூட்டம்‌ நேற்று துவங்கியது. இதை கோழிக்கோட்டில்‌ அமைந்துள்ள இந்திய வாசனைப்பயிர்கள்‌ ஆராய்ச்சி நிறுவனமும்‌, கோவை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ வாசனை மற்றும்‌ மலைத்தோட்டப்பயிர்கள்‌ துறையும்‌ இணைந்து நடத்தியது. இந்த கூட்டம்‌ நாளை வரை நடைபெற உள்ளது.

விஞ்ஞானிகளை தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக ஆராய்ச்சி இயக்குனர்‌ முனைவர்‌ கே.எஸ்‌.சுப்பிரமணியன்‌ அவர்கள்‌ வரவேற்றார்‌. அவர்‌ தனது வரவேற்புரையில்‌ வாசனைப்பயிர்களின்‌ ஆராய்ச்சியின்‌ முக்கியத்துவத்தையும்‌, ஆராய்ச்சிகளின்‌ முடிவாக வெளியிடப்பட்டுள்ள வாசனைப்பயிர்‌ இரகங்களைப்பறறியும்‌ எடுத்துரைத்தார்‌. இந்திய வாசனைப்பயிர்களின்‌ ஆராய்ச்சி நிறுவனத்தின்‌ இயக்குநர்‌ முனைவர்‌. க. நிர்மல்‌ பாபு ஒருங்கிணைப்பாளரின்‌ அறிக்கையைச் சமர்ப்பித்தார்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ ந. குமார்‌ அவர்கள்‌ தனது தலைமையுரையில்‌ வாசனைப்பயிர்களில்‌ உலகளாவிய தேவையை ஈடுசெய்யும்‌ வகையில்‌ ஆராய்ச்சிகள்‌ மேற்கொள்ள வேண்டிய முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்‌.

புதுடெல்லியில்‌ அமைந்துள்ள இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுமத்தின்‌ பொது உதவி இயக்குனர்‌ (தோட்டக்கலை) முனைவர்‌. டி. ஜானகிராம்‌ அவர்கள்‌ தனது துவக்கவுரையில்‌ வாசனைப்பயிர்களின்‌ உற்பத்தி மற்றும்‌ ஏற்றுமதியின்‌ முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்‌.

கோழிக்கோடு பாக்கு மற்றும்‌ வாசனைப்பயிர்களின்‌ இயக்ககத்தின்‌ இயக்குனர்‌ முனைவர்‌. ஹோமிசெரியன்‌ மற்றும்‌ ராஜஸ்தான்‌ அஜ்மீர்‌ விதை வாசனைப்பயிர்கள்‌ தேசிய ஆராய்ச்சி நிறுவன இயக்குனர்‌ முனைவர்‌. கோபால்‌ லால்‌ ஆகியோர்‌ வாழ்த்துரை வழங்கினார்.

2018-19ம் ஆண்டிற்கான சிறந்த அகில இந்திய அளவில்‌ ஒருங்கிணைக்கப்பட்ட ஆராய்ச்சித்திட்டத்தின்‌ விருது ஒரிஸா வேளாண்மைப்‌ பல்கலைக்கழக பொட்டங்கி ஆராய்ச்சி நிலையம்‌ மற்றும்‌ உத்தரப்பிரதேச நரேந்திரதேவ்‌ வேளாண்மைப்‌ பலகலைக்கழகத்திற்கும்‌ வழங்கப்பட்டது. மேலும்‌ ராஜஸ்தான்‌ அஜ்மீர்‌ விதை வாசனைப்பயிர்கள்‌ தேசிய ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சிறந்த துணை நிறுவனத்திற்கான விருது வழங்கப்பட்டது.

மேலும்‌ வாசனைப்பயிர்களாகிய மிளகு, மஞ்சள்‌, ஏலக்காய்‌, இஞ்சி ஆகிய பயிர்களின்‌ சாகுபடித்‌ தொழில்நுட்பம்‌ அடங்கிய புத்தகம்‌ மற்றும்‌ கையேடுகள்‌ வெளியிடப்பட்டன. தோட்டக்கலைக்கலலூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தின்‌ முதன்மையர்‌ முனைவர்‌. இல.புகழேந்தி அவர்கள்‌ நன்றியுரை ஆற்றினார்‌.

Newsletter