கரும்பிற்கு மாற்றான புதிய ரக பயிர் வரும் டிச., 1ம் தேதி சோதனைக்காக பயிரிடப்படும் - வேளாண் பல்கலை துணை வேந்தர்

கோவை: தண்ணீர் பஞ்சம் நிலவிவரும் நிலையில் நான்கரை மாதங்களில் கரும்பு வளரும் புதிய ரக பயிரை டிசம்பர் 1ம் தேதி சோதனைக்காக பயிரிடப்பட உள்ளதாக வேளாண்மை பல்கலை துணை வேந்தர் குமார் தெரிவித்துள்ளார்.


கோவை: தண்ணீர் பஞ்சம் நிலவிவரும் நிலையில் நான்கரை மாதங்களில் கரும்பு வளரும் புதிய ரக பயிரை டிசம்பர் 1ம் தேதி சோதனைக்காக பயிரிடப்பட உள்ளதாக வேளாண்மை பல்கலை துணை வேந்தர் குமார் தெரிவித்துள்ளார்.



கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தில், கரும்பிற்கு மாற்றான பயிர் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. 



இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வேளாண்மை பல்கலை துணை வேந்தர் குமார் பேசுகையில், 10 மாத பயிரான கரும்பிற்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும் என்ற நிலையில், தற்போது தண்ணீர் பஞ்சம் நிலவுவதால், கரும்பிற்கு மாற்றான பயிர் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டதாக கூறினார்.

அதனைதொடர்ந்து, பெல்ஜியம் நிறுவனம் வைத்துள்ள "சுகர் பீட்" எனும் புதிய ரக பயிரை தமிழகத்தில் ஆறு கரும்பு ஆராய்ச்சி மையங்களில் வரும் டிசம்பர் 1ம் தேதி சோதனைக்காக பயிரிடப்பட உள்ளதாகவும் இந்த பயிர் நான்கரை மாதங்களில் வளர்ந்து விடும் என்று தெரிவித்தார்.



மேலும், கரும்பை விட மூன்றில் ஒரு பங்கு தான் இதற்கு தண்ணீர் தேவைப்படும் எனவும் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த வகை பயிர்கள் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளதாக கூறிய துணை வேந்தர் குமார், ஆராய்ச்சி முடிவின் அடிப்படையில், விவசாயிகளுக்கு இந்த வகை பயிர்கள் பரிந்துரைக்கப்படும் என்று கூறினார்.

Newsletter