வேளாண்‌ பல்கலையில்‌ சுழறிசாவி முகவர்கள்‌ மற்றும்‌ சாண எரிவாயு திறன்‌ மேம்பாட்டு பயிற்சி

கோவை: வேளாண்‌ பல்கலையில்‌ சுழறிசாவி முகவர்கள்‌ மற்றும்‌ சாண எரிவாயு திறன்‌ மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற உள்ளது

கோவை: வேளாண்‌ பல்கலையில்‌ சுழறிசாவி முகவர்கள்‌ மற்றும்‌ சாண எரிவாயு திறன்‌ மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற உள்ளது

இன்றைய சூழ்நிலையில் புதிய மற்றும்‌ புதுப்பிக்கவல்ல எரிசக்தியின்‌ உற்பத்தி பெருக்கம்‌ மற்றும்‌ மாசற்ற முறையில்‌ எரிபொருளை உற்பத்தி செய்வது என்பது இன்றியமையாதது. இந்த நோக்குடன்‌, புதுடில்லியில் உள்ள புதிய மற்றும்‌ புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தின்‌ நிதியுதவியுடன்‌, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, வேளாண்மை பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தில்‌ உள்ள புதுப்பிக்கவல்ல ஆற்றல்‌ பொறியியல்‌ துறை, சாண எரிவாயு மேம்பாடு மற்றும்‌ பயிற்சி மையத்தின்‌ கீழ்‌ 2019 - 20-ம்‌ ஆண்டிற்கான பயிற்சிகள்‌ நடைபெற உள்ளன.

டிசம்பர்‌ மாதம்‌ (16.12.2019 - 04.01.2020) நடைபெற உள்ள இப்பயிற்சியில்‌ கலந்துகொள்பவர்களுக்கு சுயதொழில்‌ முனையவும்‌ மற்றும்‌ ஊரக வேலைவாயப்பை ஏற்படுத்திக்‌ கொள்ளவும்‌ ஏதுவாக அமையும்‌.

சுழற்சாவி முகவர்களுக்கான பயிற்சி

தகுதி - வேளாண்மையில்‌ பட்டயப்படிப்பு மற்றும்‌ இதர பட்டப்படிப்பு முடித்த அல்லது வேலையில்லா பட்டதாரிகள்‌

பயிற்சி காலம்‌ - 16.12.2019 முதல்‌ 04.01.2020 வரை (15 நாட்கள்)

சலுகைப்படிகள்‌ - .300/நாள்‌ மற்றும்‌ அசல்‌ பயணப்படி ரூ. 700-க்கு மிகாமல்‌ வழங்கப்படும்‌. தகுதியான நபர்கள்‌ 30.11.2019-ம் தேதிக்குள் தங்கள்‌ தகவல்களை அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தொடர்புக்கு

பேராசிரியர் மற்றும்‌ தலைவர்,

புதுப்பிக்கவல்ல ஆற்றல்‌ பொறியியல்‌ துறை,

வேளாண்மை பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌,

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌,

கோயமுத்தூர்‌ - 641 003.

மின் அஞ்சல்: bioenergy @tnau.ac.in

தொலைபேசி: 0422-6611276

Newsletter