வேளாண்‌ பல்கலைக்கழகத்தில்‌ விஞ்ஞானிகளுக்கு 21 நாட்கள் பயிற்சி

கோவை:இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின்‌ நிதியுதவியுடன்‌ மேம்பட்ட ஆசிரிய பயிற்சி மையத்தின்‌ பயிற்சி ஆண்டுதோறும்‌ நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான பயிற்சி 05.11.2019 முதல்‌ 25.11.2019 வரை 21 நாட்களுக்கு பூச்சிகளை எதிர்ப்பதற்கான சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ மூலக்கூறு அணுகுமுறைகள்‌ என்ற தலைப்பில்‌ தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள பயிர்‌ பாதுகாப்பு மையத்தின்‌ கீழ்‌ இயங்கும்‌ வேளாண்‌ பூச்சியியல்‌ துறையில்‌ இன்று (நவ 6) நடத்தப்பட்டது.

கோவை:இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின்‌ நிதியுதவியுடன்‌ மேம்பட்ட ஆசிரிய பயிற்சி மையத்தின்‌ பயிற்சி ஆண்டுதோறும்‌ நடைபெறுகிறது. இந்த ஆண்டுக்கான பயிற்சி 05.11.2019 முதல்‌ 25.11.2019 வரை 21 நாட்களுக்கு பூச்சிகளை எதிர்ப்பதற்கான சுற்றுச்சூழல்‌ மற்றும்‌ மூலக்கூறு அணுகுமுறைகள்‌ என்ற தலைப்பில்‌ தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகத்தில்‌ உள்ள பயிர்‌ பாதுகாப்பு மையத்தின்‌ கீழ்‌ இயங்கும்‌ வேளாண்‌ பூச்சியியல்‌ துறையில்‌ இன்று (நவ 6) நடத்தப்பட்டது.

இதில்‌ உள்ள பயிற்சியாளர்கள்‌ நாட்டின்‌ பத்து வெவ்வேறு மாநிலங்களைச்‌ சேர்ந்த விவசாய பல்கலைக்கழகங்கள்‌, தேசிய அமைப்புகள்‌ மற்றும்‌ இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கழகத்தின்‌ நிறுவனங்களைச்‌ சேர்ந்த விஞ்ஞானிகள்‌ இடம்பெற்றுள்ளனர்‌.

வேளாண்மை‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ என்‌. குமார்‌ விழாவிற்கு தலைமை தாங்கி பயிற்சித்‌ திட்டத்தைத்‌ தொடங்கி வைத்தார்‌. தனது உரையில்‌, பங்கேற்பாளர்களுக்கு 5.11.2019 மதியம்‌ நிலவரப்படி உலக மக்கள்தொகை கடிகாரம்‌ 7.7418 பில்லியன்கள்‌ என்றும்‌ அது எப்போதும்‌ அதிகரித்து வருவதாகவும், அவர்களுக்கு உணவளிக்க வேண்டும்‌ என்றும்‌ தெரிவித்தார்‌.

ஐக்கிய நாடுகள்‌ தரவுகளின்படி 5.11.2019 அன்று நிலவரப்படி மக்கள்‌ தொகை 1.371 பில்லியன்‌ மக்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மக்கள்தொகை மொத்த உலக மக்கள்தொகையில்‌ 17.71% க்கு சமம்‌. இந்த மக்களுக்கு உணவளிக்க நாம்‌ வரையறுக்கப்பட்ட நிலம், நீர்‌, அதிகரிக்கும்‌ அச்சுறுத்தல்கள்‌ மற்றும்‌ செலவுகளிலிருந்து அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும்‌ என்றார்.

இந்தியாவின்‌ விளைநிலங்கள்‌ 159.7 மில்லியன்‌ ஹெக்டேர்‌ (394.6 மில்லியன்‌ ஏக்கர்‌) அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின்‌ இரண்டாவது பெரிய நிலமாகும்‌. அதன்‌ மொத்த நீர்ப்பாசன பயிர்‌ பரப்பளவு 82.6 மில்லியன்‌ ஹெக்டேர்‌ (215.6 மில்லியன்‌ ஏக்கர்‌) இது உலகிலேயே மிகப்பெரியது. மனிதன்‌ விவசாயத்தைத்‌ தொடங்கியபோதே பூச்சிகள்‌ பயிர்களில்‌ குடியேறத்‌ தொடங்கின. இதனால்‌, குறைந்த சேதத்துடன்‌ தாவர வகைகளைத்‌ தேர்ந்தெடுப்பதும்‌ தொடங்கியிருக்கலாம்‌.

பூச்சி எதிர்ப்பு திறன்‌ கொண்ட பயிர்கள்‌ வரும்‌ காலங்களில்‌ விஞ்ஞானிகளுக்குப் பல பதில்களை அளிக்கும்‌ என்று கருதப்படுகிறது. ஒரு பூச்சிக்கு தாவரத்தின்‌ எதிர்ப்பு திறன்‌ என்பது பரம்பரை குணங்களின்‌ ஒப்பீட்டு அது பூச்சியால்‌ ஏற்படும்‌ சேதத்தின்‌ இறுதி அளவை நிர்ணயிக்கிறது. பூச்சி மேலாண்மையில்‌ ஒரு அணுகுமுறையாக எதிர்ப்புத் திறன்‌ கொண்ட பயிர்களை தேர்ந்தெடுப்பது பல நன்மைகளை வழங்குகிறது. உதாரணமாக பூச்சி மேலாண்மையில்‌ மில்லியன்‌ டன்‌ கணக்கான பூச்சிக்கொல்லிகளின்‌ பயன்பாட்டை தவிர்த்து சுற்றுச்சூழலை பாதுகாக்கிறது.

தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகத்தின்‌ வரலாற்றை எடுத்துக்‌ கொண்டால்‌ உலகப்‌ புகழ்பெற்ற எதிர்ப்பு திறன்‌ கொண்ட மற 24 அரிசி இரகமானது அறிவியலுக்கு பெரிதும்‌ உதவியது மற்றும்‌ அரிசி பயிர்களுக்கு உலகெங்கிலும்‌ வெளியிடப்பட்ட பெரும்பாலான வகைகளுக்கு அடிப்படையாக அமைகிறது. பூச்சி எதிர்க்கும்‌ திறன்‌ கொண்ட வகைகளை நேரடியாக வெளியிடுவதன்‌ மூலம்‌ விவசாய சமூகத்திற்கு பங்களிப்பு செய்துள்ளது (அரிசி: பாரி, முல்லை போன்ற மலர்‌ பயிர்கள்‌ உட்பட கோ 25, ஏஎஸ்டி 5 கோ 42, ஏடிடி 36, பிஒய்‌ 3, ஏடிடி 37, ஏடிடி 53 போன்றவை பழுப்பு நிற தத்துப்‌ பூச்சிகளுக்கு எதிர்ப்பு திறன்‌ கொண்டது). முக்கிய பூச்சிகள்‌ மற்றும்‌ நோய்களை எதிர்க்கும்‌ மரபணு பின்னணியை எப்போதும்‌ சுமந்து கொண்டிருக்கும்‌ புதிய வகை பயிர்களை உற்பத்தி செய்யவதற்கும்‌ தேர்ந்தெடுப்பதற்கும்‌ பிரத்தேயக கொள்கையை தமிழ்நாடு வேளாண்‌ பல்கலைக்கழகம்‌ ஏற்றுக்கொண்டுள்ளது.

முன்னாள்‌ டீன்‌ (பி.ஜி. ஆய்வுகள்‌) மற்றும்‌ முன்னாள்‌ இயக்குநர்‌ (பயிர்‌ பாதுகாப்பு) மேலும்‌ முன்னாள்‌ ஆசிரியரான டாக்டர்‌ எம்‌.கோபாலன்‌ பேசுகையில், பூச்சிகள்‌ மற்றும்‌ நோய்களை நிர்வகிப்பதற்கான பயிர்‌ எதிர்ப்பு முறை விஞ்ஞானத்தின்‌ வரலாறு மற்றும்‌ வளர்ச்சியை விவரித்தார்‌. பயிர்களில்‌ பூச்சி கட்டுப்பாட்டின்‌ புதிய முறைகளை எதிர்ப்புத் திறன்‌ கொண்ட பயிர்களும்‌ அதன்‌ முக்கிய காரணிகளையும்‌ ஆராய்ந்து புதிய ரகங்களை உருவாக்க விஞ்ஞானிகளை அவர்‌ கேட்டுக்கொண்டார்‌.

பூச்சிகளின்‌ பயிர்‌ எதிர்ப்பு ரகங்களை தேர்ந்தெடுக்கும்‌ உத்தியானது ஒருங்கிணைந்த பயிர்‌ பாதுகாப்பில்‌ அடிப்படை அங்கமாக அமைகிறது மேலும்‌ இந்த பல்கலைக்கழகமானது 1960ம்‌ வருடத்திலிருந்து பல ஒருங்கிணைந்த பயிர்‌ பாதுகாப்பு பறிற்ச்சிகளை அளித்து வருகிறது என்று பயிர்‌ பாதுகாப்பு மையத்தின்‌ இயக்குநர்‌ டாக்டர்‌ கே. பிரபாகர்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

வேளாண்‌ பூச்சியியல்‌ துறையின்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ டாக்டர்‌ என்‌. சாத்தையா, பயிற்சி தொகுதியின்‌ பகுதிகள்‌ மற்றும்‌ உள்ளடக்கங்களை விளக்கினார்‌ மேலும்‌, பங்கேற்பாளர்களின்‌ தேவைகளைப்‌ பூர்த்தி செய்வதற்காக விரிவுரை அட்டவணை நன்கு கட்டமைக்கப்பட்டிருப்பதைக்‌ குறிப்பிட்டார்‌. பூச்சியியல்‌ துறை பேராசிரியர்‌ டாக்டர்‌ எம்‌.முத்துசாமி வரவேற்றார்‌. விழாவில்‌ பயிற்சியாளர்கள்‌, விஞ்ஞானிகள்‌ மற்றும்‌ முதுகலை மாணவர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter