வனக்கல்லூரியில்‌ ஆசிய மற்றும்‌ ஆப்ரிக்க நாடுகளின்‌ விஞ்ஞானிகளுக்கு வேளாண் காடுகள் பயிற்சி

கோவை : மேட்டுப்பாளையம்‌ வனக்கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தில்‌ ஆசிய மற்றும்‌ ஆப்ரிக்கா நாட்டு விஞ்ஞானிகளுக்கு ஐந்து நாள்‌ பயிற்சி முகாம்‌ அக்டோபர்‌ 20 முதல்‌ 24ந்‌ தேதி வரை நடைபெற்றது.

கோவை : மேட்டுப்பாளையம்‌ வனக்கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தில்‌ ஆசிய மற்றும்‌ ஆப்ரிக்கா நாட்டு விஞ்ஞானிகளுக்கு ஐந்து நாள்‌ பயிற்சி முகாம்‌ அக்டோபர்‌ 20 முதல்‌ 24ந்‌ தேதி வரை நடைபெற்றது.

இப்பயிற்சியில்‌ பங்களாதேஷ்‌, போட்ஸ்வானா, கம்போடியா, மியான்மர்‌, மாலாவி, டான்சானியா, கென்யா, உகாண்டா, நேபாள்‌ மற்றும்‌ இலங்கை போன்ற நாடுகளிலிருந்து 26 ஆராய்ச்சியாளர்கள்‌ பங்கேற்றனர்‌. இப்பயிற்சியில்‌ வேளாண் காடுகள் சார்ந்த மரங்கள்‌ மற்றும்‌ மதிப்புக்கூட்டப்பட்ட சந்தைப்படுத்துதல்‌, தொழிற்சாலை சார்ந்த வேளாண்‌ காடுகளின்‌ வணிகம்‌ சார்ந்த அமைப்புகளை பற்றியும்‌ தெரிந்துகொள்ளும்‌ வகையில்‌ இப்பயிற்சி அமைந்திருந்தது.



கன்றக இனப்பெருக்க முறை பற்றியும்‌ எரிகட்டி தயாரித்தலிலும்‌ இவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும்‌ களப்பயிற்சியாக வேளாண் காடுகளின்‌ மாதிரி பண்ணைகள்‌, தொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள் மற்றும்‌ அதனை சார்ந்த தொழிற்சாலைகளான ஒட்டு பலகைத்‌ தயாரித்தல்‌, தீப்பெட்டி தொழிற்சாலை, எரிகட்டி தொழிற்சாலை மற்றும்‌ மரக்கட்டைத்‌ தொழிற்சாலைகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்‌.



இப்பயிற்சியின்‌ நிறைவு விழா 24.10.2019 அன்று வன்கலலூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தில்‌ நடைபெற்றது. இவ்விழாவில்‌ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌.ந.குமார்‌ அவர்கள்‌ கலந்துக்கொணொடு தலைமையுரையாற்றி சான்றிதழ்களை வழங்கினார்‌. சர்வதேச வேளாண் காடுகள் மையத்தை சார்ந்த முனைவர்‌.எஸ்கே.தியானி அவர்கள்‌ இவ்விழாவில்‌ சிறப்புரையாற்றினார்‌.

இப்பயிற்சியினை கல்லூரி முதல்வர்‌ முனைவர்‌ க.கு.சுரேஷ்‌ அவர்களும்‌, வேளாண் காடுகள் துறையின்‌ தலைவர்‌ முனைவர்‌.கா.த.பார்த்திபன்‌ அவர்களும்‌ ஏற்பாடு செய்தனர்‌. இப்பயிற்சியின்‌ மூலம்‌ பல்கலைக்கழகத்தின்‌ பல்வேறு வகையான வேளாண் காடுகள் தொழில்நுட்பங்கள்‌ ஆசியா மற்றும்‌ ஆப்ரிக்கா நாடுகளில்‌ பயன்படுத்தப்பட்டு அந்நாட்டு மக்களின்‌ பொருளாதாரம்‌ மற்றும்‌ சுற்றுச்சூழல்‌ பாதுகாக்க வழிவகை செய்யும்‌.

Newsletter