வேளாண்‌ பல்கலை.யில் மாவிற்கான மிக அடர்‌ நடவு முறை செயல் விளக்கத் திடலை துவக்கி வைத்தார்‌ ஆளுநர்‌ புரோகித்‌

கோவை : தமிழ்நாடு வேளாண்‌மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ தோட்டக்கலைக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தின்‌ பழப்‌ பண்ணையில்‌ மாவிற்கான மிக அடர்‌ நடவு முறை செயல் விளக்கத்‌ திடலை தமிழக ஆளுநர்‌ பன்வாரிலால்‌ புரோகித்‌ இன்று துவக்கி வைத்தார்‌.


கோவை : à®¤à®®à®¿à®´à¯à®¨à®¾à®Ÿà¯ வேளாண்‌மைப்‌ பல்கலைக்கழகத்தில்‌ தோட்டக்கலைக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தின்‌ பழப்‌ பண்ணையில்‌ மாவிற்கான மிக அடர்‌ நடவு முறை செயல் விளக்கத்‌ திடலை தமிழக ஆளுநர்‌ பன்வாரிலால்‌ புரோகித்‌ இன்று துவக்கி வைத்தார்‌.



இந்த விழாவில்‌, தமிழக வேளாண்‌ துறை அமைச்சர்‌ இரா.துரைக்கண்ணு அவர்கள், இப்பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌. ந. குமார்‌ அவர்கள், தமிழ்நாடு அரசு வேளாண்‌ துறையின்‌ வேளாண்‌ உற்பத்தி ஆணையர்‌ மற்றும்‌ முதன்மை செயலர்‌ ககன்தீப்‌ சிங் பேடி, அவர்கள்‌, இதர அரசு துறைத்‌ தலைவர்கள்‌, இப்பல்கலைக்கழக மேலாண்மைக்‌ குழு உறுப்பினர்கள்‌, இப்பல்கலைக்கழக விஞ்ஞானிகள்‌, அலுவலர்கள்‌ மற்றும்‌ மாணவர்கள்‌ ஆகியோர்‌ பங்கேற்றனர்‌.



தமிழக ஆளுநர்‌ அவர்கள்‌, பங்கனப்பள்ளி மா ஒட்டுக்‌ கன்றை செயல் விளக்கத்‌ திடலில்‌ நடவு செய்து, நடவுப்‌ பணியைத்‌ துவக்கி வைத்தார்‌. இதைத்‌ தொடர்ந்து, பல்கலைக்கழக இளநிலை, முதுநிலை மற்றும்‌ முனைவர்‌ பட்டப்படிப்பு மாணவர்கள்‌ மற்றும்‌ விஞ்ஞானிகள்‌ மா நடவினை மேற்கொண்டனர்‌.

தமிழகத்தின்‌ மிக முக்கியப்‌ பழப்‌ பயிர்களில்‌ மா முதன்மையாக விளங்குகிறது. தமிழகத்தில்‌ மா 1.6 லட்சம்‌ எக்டர்‌ பரப்பளவில்‌ சாகுபடி செய்யப்பட்டு, 11.56 லட்சம்‌ டன்கள்‌ உற்பத்தியும்‌, ஒரு எக்டருக்கு 8.7 டன்கள்‌ என்ற அளவிற்கு உற்பத்தி திறனும்‌ பெறப்படுகின்றது. தமிழகத்தில்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம்‌, வேலூர்‌, தேனி, திருநெல்வேலி மற்றும்‌ திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில்‌ மா பரவலாக சாகுபடி செய்யப்படுகின்றது. மாவின்‌ மீதுள்ள ஈர்ப்பு / மாவின்‌ தேவை அதிகரித்து வருவதாலும்‌, நகர மயமாகுதல்‌ மற்றும்‌ பெருகி வரும்‌ மக்கள்தொகை காரணங்களினாலும்‌, சாகுபடி பரப்பளவு குறைந்து கொண்டே வருகிறதாலும்‌, குறைந்த நிலப்பரப்பளவில்‌ அதிகளவு மா உற்பத்தி செய்ய வேண்டிய கட்டாயத்தில்‌ இருக்கின்றோம்‌.

நவீன தோட்டக்கலை தொழில்நுட்பமான மிக அடர்‌ நடவு முறையானது, பழப்‌ பயிர்கள்‌ சாகுபடிக்கென்று உருவாக்கப்பட்டுள்ளது. இம்முறையில்‌, நடைமுறையில்‌ கடைப்பிடிக்கப்படும்‌ இடைவெளியை விட பழப்‌ பயிர்கள்‌ மிக நெருக்கமாக நடவு செய்யப்பட்டு, அதனுடன்‌ மேம்படுத்தப்பட்ட தோட்டக்கலைத்‌ தொழில்நுட்பங்களை இணைத்து செய்கையில், இடுபொருட்களான சூரிய ஒளி, நீர்‌ மற்றும்‌ ஊட்டச்சத்துக்கள்‌ ஆகியவற்றை திறமையாக பயிர்கள்‌ பயன்படுத்தி, அதிகளவு மகசூல்‌ கொடுக்கின்றன. மிக அடர்‌ நடவுடன்‌ சொட்டுநீர்‌ பாசனம்‌ மற்றும்‌ நீர்வழி உரமிடல்‌, கிளைப்‌ படர்வை மாற்றி அமைக்கும்‌ உருவமைப்பு மற்றும்‌ கவாத்து ஆகிய தொழில்நுட்பங்கள்‌ முக்கிய பங்காற்றி குறைந்த காலகட்டத்தில்‌ அதிக மற்றும்‌ நிலையான மகசூல்‌ மா சாகுபடி தருகின்றது.



இப்பல்கலைக்கழகத்தின்‌ தோட்டக்கலை கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தின்‌ பழப்‌ பண்ணையில்‌ மாவிற்கான மிக அடர்‌ நடவு முறை பற்றிய செயல் விளக்கத்‌ திடல்‌ புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. மா மரங்களுக்கு இடைப்பட்ட இடைவெளி குறைக்கப்பட்டு, அதாவது வரிசைகளுக்கு இடையில் நான்கு மீட்டர்‌ இடைவெளியும்‌, மரங்களுக்கு இடையே இரண்டு மீட்டர்‌ இடைவெளி இருக்குமாறும்‌ நடவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்‌ மூலம்‌, ஒரு ஏக்கரில்‌ 500 மரக்‌கன்றுகள்‌ நடவு செய்யப்பட்டது. ஆனால்‌, நடைமுறையிலுள்ள நடவு முறையில்‌, மாவானது 10 மீட்டர்‌ * 10 மீட்டர்‌ இடைவெளியில்‌ நடவு செய்யப்பட்டு, அதன்‌ மூலம்‌ ஒரு ஏக்கரில்‌ 40 மரங்கள்‌ மட்டுமே பராமரிக்கப்படுகின்றன. இந்த மிக அடர்‌ நடவு செயல் விளக்கத்‌ திடலில்‌ மா இரகங்களான சேலம்‌ பெங்களூரா, இமாம்பசந்த்‌, பங்கனபள்ளி மற்றும்‌ பெங்களூரா ஆகியவை

நடவு செய்யப்பட்டுள்ளன.

மிக அடர்‌ நடவு முறையினால்‌ உற்பத்தித் திறன்‌ 2-3 மடங்கு வரை அதிகரிக்கும்‌. ஒரு ஏக்கருக்கு, மகசூல்‌ 5-12 டன்கள்‌ வரை அதிகரிக்கும்‌ (ஒரு எக்டருக்கு 12.50 - 30 டன்கள்‌). மரங்களுக்கு இடையேயான மேல்மட்ட மற்றும்‌ கிடைமட்ட பரப்பு சிறப்பாக பயன்படுத்தப்படுகிறது.

நீரின்‌ பயன்பாட்டுத்‌ திறன்‌ அதிகரிப்பதால்‌, பாசன நீரின்‌ தேவை 50 சதவீதம்‌ குறைக்கப்படுகிறது. உரப்‌ பயன்பாட்டுத்‌ திறன்‌ மேம்படுவதினால்‌ பரிந்துரைக்கப்பட்ட உரத்தேவையில்‌ 30 சதவீதம்‌ சேமிக்கப்படுகின்றது. மரத்தின்‌ வேர் பகுதியில்‌ மட்டும்‌ நீர் பாய்ச்சப்படும்‌ போது களைகளின்‌ தாக்கம்‌ குறைகின்றது. இது தவிர, நட்ட ஆரம்பக்‌காலக்கட்டத்தில்‌ ஊடுபயிர்‌ செய்வதற்கு ஏதுவாகிறது. இது போன்ற பல‌ பயன்களை அடர்‌ நடவு முறையின்‌ மூலமாக பெறலாம்‌. இவ்வகையில்‌, மா சாகுபடியானது ஒரு நல்ல லாபம்‌ தரக்கூடிய பணப்பயிராக விளங்குகிறது.

இம்மா மிக அடர்‌ நடவு முறை செயல் விளக்கத்‌ திடலானது, மாணவர்களுக்கும்‌, விவசாயிகளுக்கும்‌ புதிய தொழில்நுட்பங்கள்‌ பயிற்றுவிப்பதற்கும்‌, ஆராய்ச்சியாளர்கள்‌ ஆராய்ச்சிகள்‌ மேற்கொள்ளுவதற்கும்‌ பயன்படும்‌. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தோட்டக்கலைக்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தின்‌ முதன்மையர்‌ முனைவர்‌. இல. புகழேந்தி அவர்கள்‌, விஞ்ஞானிகள்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ மேற்கொண்டனர்‌. இவ்விழாவில்‌ பல்கலைக்கழக மாணவர்கள்‌ மற்றும்‌ விஞ்ஞானிகள்‌ பங்கேற்றனர்‌.

Newsletter