ஒரு லட்சம்‌ இயல் தாவர மரங்கள்‌ வளர்க்கும்‌ திட்டம்‌ - தமிழக ஆளுநர் தொடங்கி வைத்தார்

கோவை : ஒரு தேசத்தின்‌ ஆரோக்கியமான வளர்ச்சி அதனுடைய வன வளங்களை பொறுத்தே அமையும்‌ என்ற கோட்பாட்டின்‌ அடிப்படையில், தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின் உறுப்புக்‌ கல்லூரியான, மேட்டுப்பாளையத்தில்‌ அமைந்துள்ள வனக்கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தில்‌ ஒரு லட்சம்‌ இயல் தாவர மரக்கன்றுகள்‌ வளர்க்கும்‌ திட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கோவை : ஒரு தேசத்தின்‌ ஆரோக்கியமான வளர்ச்சி அதனுடைய வன வளங்களை பொறுத்தே அமையும்‌ என்ற கோட்பாட்டின்‌ அடிப்படையில், தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின் உறுப்புக்‌ கல்லூரியான, மேட்டுப்பாளையத்தில்‌ அமைந்துள்ள வனக்கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தில்‌ ஒரு லட்சம்‌ இயல் தாவர மரக்கன்றுகள்‌ வளர்க்கும்‌ திட்ட நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.



வேளாண்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ நீ. குமார்‌ அவர்கள்‌ மற்றும்‌ தமிழ்நாடு அரசு வேளாண் துறையின்‌ வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும்‌ முதன்மைச் செயலர் ககனத ப சிங் பேடி ஆகியோர்‌ முன்னிலையில்‌ தமிழக ஆளுநர்‌ பனவாரிலால்‌ புரோகித்‌ அவர்கள்‌ செண்பக மரக்கன்றை முதல்‌ மரக்கன்றாக நட்டு இந்நிகழ்ச்சியினை துவக்கிவைத்தார்‌.

ஒரு கல்வி நிறுவனத்தில்‌ ஒரு லட்சம்‌ மரக்கன்றுகளை நடுவது இதுவே முதல்‌ முறை ஆகும். இந்நிகழ்ச்சியின்‌ மூலம்‌, வனக்கல்லூரியில்‌ உற்பத்தி செய்யப்பட்ட மரக்கன்றுகள்‌ கல்லூரியின்‌ 50 ஏக்கர்‌ பரப்பளவில்‌ நடப்பட்டு இதன்‌ மூலம்‌ தரம்‌ முறைந்த வனப்பகுதிகள்‌ சீரமைக்கப்படும்‌.

மரக்கன்றுகள்‌ நடுவதற்கு, மரவளர்ப்பு முறையில்‌ குழிகள்‌ எடுக்கப்பட்டு, அதில்‌ மனர்புழு உரம், தொழு உரம்‌ மற்றும்‌ உயிர்‌ கட்டுப்பாட்டுக்‌ காரணிகள்‌ ஆகியவற்றை தகுந்த அளவுகளில் இடப்பட்டன. இதனால்‌ மர வளர்ச்சி அதிகரிப்பதுடன்‌, வறட்சியினைத்‌ தாங்கி வளரக்கூடிய à®šà®•்தியையும்‌ கன்றுகள்‌ பெறும்‌.

துவக்க விழா அன்று, மரக்கன்றுகளை இப்பல்கலைக்கழகத்தின்‌ மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்‌, வனக்கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌ மற்றும்‌ தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மாணவர்கள்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ ஆகியோரால்‌ நடப்பட்டன.

மொத்தம்‌ 35 இயல் தாவர வகைகளைச்‌ சோந்த கன்றுகள்‌ நடப்பட்டன. அதில், சந்தனம்‌, புரசு, தான்றிக்காய்‌, அலுன்ஜி, கா லிட்சி, தனுக்கு, வேம்பு, கருவேல்‌, இலுப்பை, புங்கம்‌ மற்றும்‌ பூவரசு கன்றுகள்‌ குறிப்பிடத்தக்கவை. இம்மரவகைகள்‌ ஆக்சிஜனை வெளியேற்றுதல்‌, கரியமிலவாயு சேகரித்தல்‌, வெப்பநிலை சீரமைத்தல்‌, நீர்‌ மற்றும்‌ நிலவளம்‌ பாதுகாத்தல்‌, நிலத்தடி நீர் அதிகரித்தல்‌ ஆகிய நன்மைகளை அடையச்செய்வதன்‌ மூலமாக சீரான சீதோஷன நிலை ஏற்படுத்தி சுற்றுச்சூழலை பாதுகாப்பதுடன்‌ வன விலங்குகளுக்கும்‌ பறவைகளுக்கும்‌

சரணாலயமாகவும்‌ இப்பகுதி அமையும்‌.

மேலும், மரவளர்ப்பின்‌ மூலம்‌ உணவு, தி.வனம்‌, எரிபொருள்‌, மரம்‌ அல்லாத வனப்‌ பொருட்களான தேன்‌, பழங்கள்‌ மற்றும்‌ தடிமரஙகள்‌ கிடைக்கப்பெறுவதுடன், இம்மர வளர்ப்பு திடல்கள்‌ மாணவர்கள்‌ மற்றும்‌ ஆராய்ச்சியாளர்களுக்கு கல்வி ஊடகமாகவும்‌ செயல்படும்‌. 

மேலும்‌, விவசாயிகள்‌, வனத்துறை அதிகாரிகள்‌ மற்றும்‌ பிற பங்குதாரர்களுக்கு செயல்விளக்க திடலாகவும்‌ அமைகிறது.

இம்மரக்கன்றுகள்‌ யானை மற்றும்‌ இதர வன விலங்குகளிடமிருந்து தகுந்த முறையில் பாதுகாக்கப்படும்‌. கோடை காலங்களில்‌ உயிர்‌ நீர்‌ பாசனம்‌ மூலம்‌ நர்‌ மேலாண்மை செய்யப்படும். மர பாதுகாப்பு மற்றும்‌ மேலாண்மை மாணவர்களின்‌ பாடத்திட்டத்தின்‌ ஒர்‌ பகுதியாக அமைவதால், மரக்கன்றுகள்‌ பராமரிப்பில்‌ மாணவர்கள்‌ ஈடுபடுத்தப்படுவர்‌.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வனக்கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மையர்‌ முனைவர்‌ கு. சுரேஷ்‌ அவர்கள்‌, விஞ்ஞானிகள்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ மேற்கொண்டனர்‌. இந்நிகழ்ச்சியில்‌ மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்‌, வனக்கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையம்‌ மற்றும்‌ தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக விஞ்ஞானிகள், மாணவர்கள்‌ மற்றும்‌ அலுவலர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter