உலக உணவு தினத்தை முன்னிட்டு வேளாண்‌ பல்கலையில்‌ தேசிய அளவிலான உணவு தொழில்நுட்ப கருத்தரங்கம்‌

கோவை : உலக உணவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தில்‌ பயிலும்‌ நான்காம்‌ ஆண்டு உணவு பதன்செய்‌ பொறியியல்‌ மாணவர்களால்‌ உணவு திருவிழா ‘19 என்னும்‌ தேசிய அளவிலான ஒருநாள்‌ கருத்தரங்கம்‌ கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

கோவை : உலக உணவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ வேளாண்‌ பொறியியல்‌ கல்லூரி மற்றும்‌ ஆராய்ச்சி நிலையத்தில்‌ பயிலும்‌ நான்காம்‌ ஆண்டு உணவு பதன்செய்‌ பொறியியல்‌ மாணவர்களால்‌ உணவு திருவிழா ‘19 என்னும்‌ தேசிய அளவிலான ஒருநாள்‌ கருத்தரங்கம்‌ கடந்த புதன்கிழமை நடைபெற்றது.

வேளாண் பொறியியல்‌ கல்லூரியின்‌ முதன்மையர்‌ முனைவர்‌ பா. ஸ்ரீதர்‌ அவர்கள்‌ இவ்விழாவின்‌ நோக்கத்தைக்‌ குறித்தும்‌ உலக உணவு தினம்‌ மற்றும்‌ கருத்தரங்கத்தின்‌ மையக்கருத்தான பட்டினியின்மையைப்‌ போக்க, சில கருத்துக்களைப்‌ பகிர்ந்து, இதன்‌ மூலம்‌ பல்வேறு உணவு பதன்செய்‌ மற்றும்‌ உணவு சார்ந்த பல்வேறு துறைகள்‌ தங்கள்‌ தொழில்நுட்பத்தை வளர்த்துக்‌ கொள்ள வழிவகுத்தார்‌.

ஈரோடு எஸ்‌. கே. எம்‌. முட்டை ஏற்றுமதி நிறுவன முதன்மை தொழில்நுட்ப அலுவலர்‌ வி.வி. கிருஷ்ணன்‌ அவர்கள்‌ முட்டையின்‌ உற்பத்தி அதிக அளவில்‌ இருப்பினும்‌ அதனை உட்கொள்ளும்‌ அளவு குறைவாகவே உள்ளதாகவும், மக்களிடையே பரவலாக உள்ள முட்டையைப்‌ பற்றிய தவறான புரிதலே இதற்குக்‌ காரணம்‌ என்றும்‌, கல்வியாளர்களால்‌ மட்டுமே இந்நிலையை மாற்ற முடியும்‌ என்று வலியுறுத்தினார்‌.

புதுதில்லி இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழக இணை இயக்குநர்‌ (வேளாண் பொறியியல்‌) முனைவர்‌ க. அழகுசுந்தரம்‌ அவர்களின்‌ எழுச்சியூட்டும்‌ உரை இந்திய அனைவரையும்‌ பெருமைப்படுத்தும்‌ விதமாக அமைந்தது. உணவுக்கு பஞ்சமில்லாத வளமான உணவு கிடைக்கப்பெறும்‌ நிலையில்‌ தான்‌ இன்றைய இந்திய தலைமுறையினர்‌ இருப்பதாகக்‌ கூறினார்‌.

உலக அளவில்‌, இந்தியா உணவு உற்பத்தியில்‌ மூன்றாம்‌ இடத்தில்‌ இருப்பதை சுட்டிக்காட்டி, இந்தியா உணவு பசியை போக்குவது மட்டுமின்றி சத்தான உணவையும்‌ வழங்கி வருகிறது என்றார்‌. மேலும்‌, தொழிலதிபர்களை உருவாக்குவதன்‌ மூலமே ஒரு நாடு பொருளாதாரத்தில்‌ வளர்ச்சி அடையமுடியும்‌ என்றும்‌ வலியுறுத்தினார்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ துணைவேந்தர்‌ முனைவர்‌ ந. குமார்‌ அவர்கள்‌ கருத்தரங்க விழாவினை இனிதே தொடங்கி வைத்தார்‌. அப்போது அவர் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு, ட்ரோன்‌ மற்றும்‌ தானியங்கி தொழில்நுட்பம்‌ போன்ற தொழில்நுட்பத்தை விவசாயம்‌, தோட்டக்கலை மற்றும்‌ உணவு பதன்செய்‌ துறைகளில்‌ பயன்படுத்த ஊக்குவித்தார்‌. இதுவே பட்டினியின்மை நிலையை அடைய சிறந்த வழி என்றும்‌ கூறினார்‌. இக்கருத்தரங்கிற்கு நாடெங்கிலும்‌ இருந்து 261 ஆய்வுக்‌ கட்டுரைகள்‌ தொழில்நுட்பங்களும்‌ சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

Newsletter