வேளாண்‌ பல்கலைக்கழகத்தில்‌ தூய்மை இந்தியா விழிப்புணர்வு திட்ட முகாம்‌

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ பயிர்‌ மேலாண்மை இயக்கத்தின்‌ கீழ்‌ செயல்படும்‌ அனைத்து துறைகளின்‌ பங்களிப்புடன்‌ மருதமலை கோவில்‌ சுற்றுப்புற வளாகம்‌ மற்றும்‌ செல்லும்‌ பாதைகள்‌, அடிவாரம்‌ ஆகிய பகுதிகளில்‌ மத்திய அரசின்‌ திட்டமான தூய்மை இந்தியா விழிப்புணர்வு முகாம்‌ கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது.

உழவியல்‌ துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ ஒருங்கிணைந்த பண்னைத்திட்டம்‌ மற்றும்‌ வளங்குன்றா அங்கக வேளாண்மை துறையின்‌ கீழ்‌ செயல்படும்‌ தேசிய அங்கக வேளாண்மை திட்டம்‌ ஆகியவற்றின்‌ துணையோடு சுமார்‌ 100க்கும்‌ மேற்பட்ட வேளாண்‌ முனைவர்‌ மற்றும்‌ முதுநிலை பட்ட மாணவர்கள்‌ மற்றும்‌ பல்துறை பேராசிரியர்கள்‌ மற்றும்‌ சக அலுவலர்கள்‌, முழு ஈடுபாட்டுடன்‌ மருதமலை வளாகம்‌ முழுவதும்‌ மக்காத பிளாஸ்டிக்‌, கண்ணாடி பாட்டில்கள்‌, பாலித்தீன்‌ பைகள்‌, சில்வர்‌ பாயில்‌ பார்சல்‌, பேக்கிங கவர்கள்‌ ஆகியவற்றை காலை முதல்‌ மதியம்‌ வரை சேகரித்து திடக்கழிவு மேலாண்மைக்காக மாநகராட்சிக்கு ஒப்படைத்தனர்‌.

பயிர்‌ மேலாண்மை இயக்குநர்‌ வெ.கீதாலட்சுமி மற்றும்‌ மருதமலை துணை கமிஷ்னர்‌ மேனகா அவர்களின்‌ வழிகாட்டுதலுடன்‌ பேராசிரியர்கள்‌ சின்னமுத்து, லதா, சோமசுந்தரம்‌, ராமநாதன்‌, ஜெயகுமார்‌ மற்றும்‌ ஜானசிராணி ஆகியோர்‌ மேற்பார்வையில்‌ வேளாண் பல்கலைக்கழக மாணவர்கள்‌ தூய்மை இந்தியா திட்டத்தின்‌ கீழ்‌ மருதமலை வளாகம்‌ முழுவதும்‌ வரும்‌ வழித்தடங்களை சுத்தப்படுத்தி பொதுமக்களுக்கும்‌, வியாபாரிகளுக்கும்‌, பக்தர்களுக்கும்‌ மாணவர்கள்‌ மூலம்‌ விழிப்புணர்வை ஏற்படுத்தினர்‌.

Newsletter