வேளாண்மையில்‌ உற்பத்தியை பெருக்க தரமான விதையைப்‌ பயன்படுத்த அறிவுறுத்தல்‌

கோவை : கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ விதை அறிவியல்‌ மற்றும்‌ தொழில் நுட்பத்துறையில்‌ தேசிய வேளாண்மை மற்றும்‌ ஊரக வளர்ச்சி! வங்கியின்‌ (நபார்டு) நிதி உதவியுடன்‌ விவசாயிகளுக்கான விதைத்தர மேம்பாட்டுத்‌ திறன்‌ பயிற்சி நேற்று நடைபெற்றது.

கோவை : கோவையில் அமைந்துள்ள தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ விதை அறிவியல்‌ மற்றும்‌ தொழில் நுட்பத்துறையில்‌ தேசிய வேளாண்மை மற்றும்‌ ஊரக வளர்ச்சி! வங்கியின்‌ (நபார்டு) நிதி உதவியுடன்‌ விவசாயிகளுக்கான விதைத்தர மேம்பாட்டுத்‌ திறன்‌ பயிற்சி நேற்று நடைபெற்றது.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக விதை மைய இயக்குனர்‌ முனைவர்‌. செ. சுந்தரேஸ்வரன்‌ அவர்கள்‌ தனது துவக்க உரையில்‌, 6 வேளாண் பெருமக்கள்‌ தரமான விதை உற்பத்தி செய்ய முன்வர வேண்டும்‌ எனவும்‌ புதிய அதிக மகசூல்‌ இரகங்களை விதை உற்பத்திக்கு பயன்படுத்துமாறும்‌ அறிவுறுத்தினார்‌. மேலும்‌ விதை உற்பத்தி செய்வதன்‌ மூலம்‌ வேளாண் பெருமக்கள்‌ இரட்டிப்பு இலாபம்‌ பெறலாம்‌ எனவும்‌ தெரிவித்தார்‌. மேலும்‌, விவசாயிகள்‌ விதை உற்பத்தி செய்யும்‌ போது புதியதாக வெளியிடப்பட்ட இரகங்களை உற்பத்தி செய்து மற்ற விவசாயிகளுக்கு விதைகள்‌ கிடைக்கச்‌ செய்ய வேண்டும்‌ என்றும்‌ வேண்டுகோள்‌ விடுத்தார்‌. விவசாயிகள்‌ பயிர்‌ இரகத்தின்‌ இனத்தூய்மையை பராமரிக்க வேண்டும்‌ எனவும்‌ நல்ல முளைப்புத்‌ திறனுடன்‌ கூடிய தரமான விதையை உற்பத்தி செய்து மற்ற விவசாயிகளுக்கும்‌ உதவுமாறும்‌ கேட்டுக்‌ கொண்டார்‌.

வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ விதை அறிவியல்‌ மற்றும்‌ தொழில்‌ நுட்பத்துறையின்‌ பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌ முனைவர்‌. பெ.இரா. ரெங்கநாயகி அவர்கள்‌ தனது உரையில்‌, விவசாயிகள்‌ தரமான விதையைப்‌ பயன்படுத்தி வயலில்‌ பயிர்‌ எண்ணிக்கையைப்‌ பராமரித்து அதிக மகசூல்‌ பெறலாம்‌ எனக்கூறினார்‌. தரமான விதை உற்பத்தி செய்யும்‌ போது, வயலில்‌ பயிர்‌ பாதுகாப்பு செய்வதோடு மட்டுமல்லாது அறுவடைக்குப்‌ பிந்திய விதை நேர்த்தி முறைகளையும்‌ பின்பற்ற வேண்டுமென எடுத்துரைத்தார்‌.

பயிற்சியின்‌ ஒருங்கிணைப்பாளர்‌ முனைவர்‌. ௧. இராஜா அவர்கள்‌ பயிற்சியில்‌ கலந்து கொண்ட விவசாயிகள்‌ அனைவரும்‌ தனிப்பட்ட நிலையிலோ அல்லது ஒருங்கிணைந்தோ விதை உற்பத்தி தொழில்‌ தொடங்கி கூடுதல்‌ இலாபம்‌ பெற வேண்டும்‌ என அறிவுறுத்தினார்‌.

பயிற்சியின்‌ போது, விதைப்பயிர்‌ மேலாண்மை, விதை சுத்திகரிப்பு, தரக்கட்டுப்பாடு, பல்வேறு விதை நேர்த்தி முறைகள்‌ போன்ற தொழில்‌ நுட்பங்கள்‌ விவசாயிகளுக்கு விஞ்ஞானிகளால்‌ எடுத்துரைக்கப்பட்டது. மேலும், பல்வேறு விதை நேர்த்தி செயல்‌ விளக்கங்களும்‌ விவசாயிகளுக்கு செய்து காண்பிக்கப்பட்டது.

Newsletter