முனைவர்‌ டி.பி. மோதிரமணி அவர்களின்‌ 26வது நினைவு உரை உலோக கரிம கட்டமைப்புகள்‌ : சுத்தமான சூழலுக்கான எதிர்கால வாய்ப்புகள்‌

கோவை : முனைவர்‌ டி.பி. மோதிரமணி அவர்களின்‌ 26வது நினைவு உரை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ இயற்கை வள மேலாண்மை இயக்ககத்தில்‌ செயல்பட்டு வரும்‌ மண்ணியல் மற்றும்‌ வேளாண்‌ வேதியியல்‌ துறையில்‌ இன்று தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர். ந. குமார்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

கோவை : முனைவர்‌ டி.பி. மோதிரமணி அவர்களின்‌ 26வது நினைவு உரை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின்‌ இயற்கை வள மேலாண்மை இயக்ககத்தில்‌ செயல்பட்டு வரும்‌ மண்ணியல் மற்றும்‌ வேளாண்‌ வேதியியல்‌ துறையில்‌ இன்று தமிழ்நாடு வேளாண்மை‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர். ந. குமார்‌ அவர்கள்‌ தலைமையில்‌ நடைபெற்றது.

முனைவர்‌ ப. மலர்விழி, பேராசிரியர்‌ மற்றும்‌ தலைவர்‌, மண்ணியல் மற்றும்‌ வேளாண்‌ வேதியியல்‌ துறை, தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழகம்‌, கோயம்புத்தூர்‌ மற்றும்‌ தலைவர்‌, இந்திய மண்ணியல் கழகம்‌, கோவை பிரிவு அவர்கள்‌ சிறப்பு விருந்தினர்களையும்‌, விஞ்ஞானிகளையும்‌, மாணவர்களையும்‌ வரவேற்று பேசினார்‌. மேலும்‌, ஒரு சிறந்த மண்ணியல்‌ விஞ்ஞானியாகத்‌ திகழ்ந்த அஸ்ஸாம்‌ வேளாண்மைப்‌ பல்கலைக்கழகத்தின்‌ முன்னாள்‌ துணைவேந்தராக விளங்கிய முனைவர்‌ டி.பி. மோதிரமணி அவர்களின்‌ நினைவாக நடத்தப்படும்‌ இந்த நினைவு உரை இளம்‌ தலைமுறையினர்‌ தம்‌ அறிவை பெருக்கிக்கொள்ளவும்‌, முனைவர்‌ டி.பி. மோதிரமணி அவர்களின்‌ பங்களிப்பை நினைவுபடுத்தவும்‌ உதவும்‌ என்றார்‌. முனைவர்‌ ஆர. சாந்தி, இயக்குநர்‌, இயற்கை வளமேலாண்மை இயக்ககம்‌ அவர்கள்‌ சிறப்பு விருந்தினர்‌ முனைவர்‌ பி. சுரேஷ்குமார்‌ அவர்களை அரங்கிற்கு அறிமுகப்படுத்தினார்‌.

தமிழ்நாடு வேளாண்மைப்‌ பல்கலைக்கழக துணைவேந்தர்‌ முனைவர்‌ ந. குமார்‌ அவர்கள்‌ தனது தலைமை உரையில்‌ ஆரோக்கியமான மண் என்பது நிலையான விவசாயத்திற்கு அடித்தளமாகும்‌ என்று கூறினார்‌. மேலும்‌, சுற்றுச்சூழல்‌ பாதுகாப்பு குறித்து அதிகமாகப் பேசப்படும்‌ இக்காலகட்டத்தில்‌ கனிமங்களை அங்ககங்களுடன்‌ இணைப்பது குறித்த ஆராய்ச்சி மிகவும்‌ அவசியம்‌ என்றார்‌.



முனைவர்‌ பி. சுரேஷ்குமார்‌ அவர்கள்‌ உலோக கரிம கட்டமைப்புகள்‌: சுத்தமான சூழலுக்கான எதிர்கால வாய்ப்புகள்‌ என்ற தலைப்பில்‌ உரை ஆற்றினார்‌. அவர்‌ தம்‌ உரையில்‌, எல்லா வகையான மாசுகளும்‌ (மணர்‌, நீர்‌ மற்றும்‌ காற்று) உலகளவில்‌ சுற்றுச்சூழலில்‌ பெரும்‌ தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்று கூறினார்‌. தூய்மையான மற்றும்‌ பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதில்‌ அசுத்தங்களைத் திறம்பட அகற்றுவது முக்கியத்துவம்‌ வாய்ந்தது. சுற்றுச்சூழல்‌ தூய்மையாக்கலில்‌, ஒருங்கிணைப்பு வேதியியலின்‌ வேகமாக வளர்ந்து வரும்‌ கிளையான மெட்டல்‌ ஆர்கானிக்‌ கட்டமைப்புகளுக்கு ஏராளமான வாய்ப்புகள்‌ உள்ளன. மெட்டல்‌ ஆர்கானிக்‌ கட்டமைப்புகள்‌ பல்வேறு துறைகளில்‌ அவற்றின்‌ பயன்பாடுகள் காரணமாக அதிக கவனத்தை ஈர்த்துள்ளதாக கூறினார்.



மெட்டல்‌ ஆர்கானிக்‌ கட்டமைப்புகளில்‌ மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள்‌ நீர்‌ மற்றும்‌ காற்று சுத்திகரிப்புடன்‌ மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மெட்டல்‌ ஆர்கானிக்‌ கட்டமைப்புகள்‌ சுற்றுச்சூழல்‌ மேலாண்மைக்கு ஒரு திறமையான பொருளாக எதிர்காலத்தில்‌ விளங்கும்‌ என்பதில்‌ சந்தேகமில்லை.

இறுதியாக மண்ணியல்‌ மற்றும்‌ வேளாண்‌ வேதியியல்‌ துறையின்‌ பேராசிரியரும்‌, இந்திய மண்ணியல் கழகத்தின்‌ கோயம்புத்தூர்‌ பிரிவின்‌ துணைத்‌ தலைவருமான முனைவர்‌ து. வசந்தி அவர்கள்‌ நன்றி நவில விழா இனித நிறைவு பெற்றது.

Newsletter