தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சார்பில் மாதிரி வேளாண் காடுகள் உருவாக்கம்

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பயிர் மேலாண்மை மையத்தின் கீழ் உள்ள உழவியல் துறையின் சார்பில் மரம் நடும் விழா இன்று, செப்டம்பர் 25 ஆம் தேதி நடைபெற்றது.

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், பயிர் மேலாண்மை மையத்தின் கீழ் உள்ள உழவியல் துறையின் சார்பில் மரம் நடும் விழா இன்று, செப்டம்பர் 25 ஆம் தேதி நடைபெற்றது. 

பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் நீ.குமார் அவர்கள் தலைமையில் முனைவர். கே.கே. கிருஷ்ணமூர்த்தி, தலைவர் (கிருஷ்ணமூர்த்தி சர்வதேச வேளாண் மேம்பாட்டு அறக்கட்டளை) அவர்களால் துவக்கிவைக்கப்பட்டது. 

முனைவர்.பி.சுப்பையன், முன்னாள் பதிவாளர், தமிழ்நாடுவேளாண்மைப் பல்கலைக்கழகம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். 



இவ்விழாவில் 300 மரக்கன்றுகள் முறையே சிவப்பு சந்தனம், ஆப்ரிக்கன் மகாகனி, கடம்பு சந்தன வேம்பு, வேல்வாகை, கம்பு நேப்பியர் மற்றும் தீவனபுல் நடவு செய்யப்பட்டது. மரகன்றுகளுக்கு மாணவர் விடுதி மற்றும் அலுவலர் குடியிருப்பிலிருந்து பெறபட்ட கழிவு நீர் சுத்கரிக்கப்பட்டு நிலத்துக்கு அடியில் பதிக்கபட்ட தானியங்கி சொட்டு நீர் பாசன முறையின் மூலம் பயிர்களின் தேவைகேற்ப்ப நீர் பாசனம் செய்யப்படும்.

இவ்விழாவில், பல்கலைக்கழக அதிகாரிகள், பேராசிரியர் மற்றும் தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்று மரக்கன்றுகளை நடவு செய்தனர்.

இவ்விழவினைமுனைவர். சக்திவேல், முனைவர். கார்த்திகோயன், முனைவர். நடராஜன் மற்றும் முனைவர். தவபிரகாஷ் ஒருங்கிணைத்தனர். முன்னதாக, முனைவர் வெ.கீதாலட்சுமி, இயக்குநர், பயிர் மேலாண்மை மையம், வரவேற்றார் . முனைவர். சி.ஆர். சின்னமுத்து பேராசிரியர் மற்றும் தலைவர், உழவியல் துறை வேளாண் காடுகளின் முக்கியத்துவம் மற்றும் சிக்கன பாசன முறையை விளக்கி நன்றி கூறினார்.

Newsletter