சுற்றுச்சூழல்‌ விழிப்புணர்வு மற்றும்‌ மரம்‌ நடும்‌ விழா ; 775 மரகன்றுகள்‌ வழங்கப்பட்டது

திருப்பூர் : இந்திய வேளாண்‌ ஆராய்ச்சி கழகம்‌ மற்றும்‌ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌, வேளாண்‌ அறிவியல்‌ நிலையம்‌, பொங்கலூர்‌ இணைந்து நடத்திய “சுற்றுச்சூழல்‌ விழிப்புணர்வு மற்றும்‌ மரம்‌ நடும்‌ விழாவானது” வேளாண்‌ அறிவியல்‌ நிலையம்‌, பொங்கலூரில்‌ நடைபெற்றது.

திருப்பூர் : இந்திய வேளாண்‌ ஆராய்ச்சி கழகம்‌ மற்றும்‌ தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்‌, வேளாண்‌ அறிவியல்‌ நிலையம்‌, பொங்கலூர்‌ இணைந்து நடத்திய “சுற்றுச்சூழல்‌ விழிப்புணர்வு மற்றும்‌ மரம்‌ நடும்‌ விழாவானது” வேளாண்‌ அறிவியல்‌ நிலையம்‌, பொங்கலூரில்‌ நடைபெற்றது.



இவ்விழாவில்‌ பங்கு பெற்ற 155 பொங்கலூர்‌ வட்ட விவசாயப்‌ பெருமக்களையும்‌, சிறப்பு விருந்தினர்களையும்‌, கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சியில்‌ பங்குபெறும்‌ வேளாண்மை கல்லூரி, கோவை மாணவர்கள்‌ மற்றும்‌ வேளாண்மை கல்லூரி, குடிமியான்மலை மாணவிகளையும்‌ வேளாண்‌ அறிவியல்‌ நிலையம்‌, பொங்கலூர்‌ திட்ட ஒருங்கிணைப்பாளர்‌ முனைவர்‌ ந.ஆனந்தராஜா வரவேற்புரை வழங்கி, இவ்விழாவின்‌ நோக்கத்தினை எடுத்துரைத்தார்‌. இதனைத் தொடர்ந்து வேளாண்‌ அறிவியல்‌ நிலைய வளாகத்தில்‌ மரக்கன்றுகள்‌ நடப்பட்டன.



இவ்விழாவிற்கு கோவை மரம்‌ வளர்ப்போர்‌ சங்க தலைவர்‌ தேவராஜன்‌ முன்னிளையுரையும்‌, மரம்‌ வளர்ப்பின்‌ தேவையையும்‌, வே. சுந்தர்ராஜ்‌, பொருளாளர்‌, வனாலயம்‌ தொண்டு நிறுவனம்‌ அவர்கள்‌ மரம்‌ வளர்ப்பின்‌ முக்கியத்துவத்தையும்‌ எடுத்துரைத்தார்‌.

மேலும்‌, முனைவர்‌ ரா. தனசேகரபண்டியன்‌, மண்ணும்‌ மண்ணின்‌ வளமும்‌ என்ற தலைப்பிலும்‌, முனைவர்‌ கி. மருதுபாண்டி மரமும்‌ மனிதனும்‌ என்ற தலைப்பிலும்‌ கருத்துரை வழங்கி சிறப்பித்தனர்‌. இறுதியாக முனைவர்‌ à®®. இராஜசேகர்‌ நன்றியுரை வழங்கினார்‌.



அதனை தொடர்ந்து விவசாய பெருமக்களுக்கும்‌, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கிராமப்புற வேளாண்மை அனுபவ பயிற்சி மாணவ மாணவிகளுக்கும்‌ 775 மரகன்றுகள்‌ புங்கம்‌, வேம்பு, மகாகோணி, சவுக்கு, ஈட்டி மற்றும்‌ செம்மர கன்றுகள்‌ இலவசமாக வழங்கப்பட்டது.

Newsletter