மக்காச்சோள விவசாயிகளை அச்சுறுத்தும் படைப்புழு : ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்தும் வேளாண் பல்கலைக்கழகம்

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மக்காச்சோளப் படைப்புழு மேலாண்மை தொழில்நுட்பங்கள் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு இன்று நடைபெற்றது.


கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மக்காச்சோளப் படைப்புழு மேலாண்மை தொழில்நுட்பங்கள் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு இன்று நடைபெற்றது.



உணவு தானிய உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கும் மக்காச்சோளம் கடந்த ஆண்டு படைப்புழு தாக்குதலுக்கு உள்ளாகி பெரும் சேதம் ஏற்பட்டது. தமிழ்நாட்டில் மக்காச்சோளம் சாக்குபடி செய்யப்பட்ட 3.5 லட்சம் ஹெக்டரில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 986 ஹெக்டர் பாதிப்படைந்தது. இதற்கு இழப்பீடு வழங்கவும், இந்தப் படைப்புழு தாக்குதலை தடுக்கவும் தமிழக அரசு உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதனை தடுக்க வேளாண் பல்கலைகழகம் சார்பாக புதிய தொழில்நுட்பம் கொண்டு வரப்பட்டு விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்

.

இந்த நிலையில், கோவை வேளாண் பல்கலை.,யில் மாநில அளவிளான 'மக்காச்சோள மேலாண்மை' என்ற தலைப்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி மற்றும் உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது. இதில், பல்வேறு விஞ்ஞானிகள் படைப்புழுவை கட்டுப்படுத்தும் எளிய முறைகளை பட காட்சிகள் முலம் தெளிவுபடுத்தினர்.



இது குறித்து வேளாண் பல்கலை.,யின் பயிர் பாதுகாப்பு மையம் இயக்குனர் பிரபாகர் கூறியதாவது :- அமெரிக்காவை தாயகமாகக் கொண்ட இந்த படைப்புழு, ஆப்பிரிக்காவில் மிகப்பெரிக சேதத்தை ஏற்படுத்தி விட்டு, இந்தியாவிற்கு வந்துள்ளது. இதன் பாதிப்பால் மிசோரம் பகுதியில் மக்காச்சோளம் சாகுபடி முற்றிலும் அழிந்து விட்டது. ஆண்டு முழுவதும் தமிழகத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்படுவதால், மாநிலத்தில் கூடுதல் கவனம் தேவை என ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். ஆனால், விவசாயிகள் முழு விழிப்புணர்வுடன் செயல்பட்டாலும் கூட, இந்த படைப்புழுவை கட்டுப்படுத்த முதல் மூன்று ஆண்டுகள் தேவைப்படும்.



மேலும். வேளான் பெருமக்கள் கடைசி உழவின் போது வேப்பம் புண்ணாக்கு இடுவது, விதை நேர்த்தி செய்தல், வரப்பு இடைவெளி, வரப்பு பயிர்கள், இன கவர்ச்சி பொறி, மற்றும் அடுத்த கட்டமாக மூன்று மருந்துகள் அடிக்க வலியுறுத்தல் போன்றவை குறித்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இவை அனைத்தையும் பின்பற்றினாலும் கூட அதிகபட்சமாக 90 சதவிகிதம் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். 100 சதவிகிதம் கட்டுப்படுத்த முடியாது. பல்கலை.,யில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்கள் 8 பேர் தங்களது ஆய்வாக படைப்புழு மேலாண்மை எடுத்து ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த முடிவுகள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு பெறும், என தெரிவித்தார்



கோழி வளர்ப்பு, மாட்டு தீவனம் போன்றவைகளுக்கு மக்காச்சோளம் பெரிதும் பயன்பட்டு வருகிறது. மக்காச்சோளம் உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருந்தோம், ஆனால், படைப்புழு பாதிப்பிற்கு பின்னர், இந்த சூழ்நிலையில் வெளிநாடுகளில் மக்காச்சோளத்தை இறக்குமதி செய்யும் நிலைக்கு தள்ளப்படுவோம் என வேளாண் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, படைப்புழு பாதிப்பு குறித்து அதிளவு ஆராய்ச்சிகளை தீவிரப்படுத்தி உள்ளதாக வேளாண் பல்கலைக்கழகம் தெரிவி்க்கிறது. 

Newsletter