மக்காச்சோளத்தின் விலை தீவணத் தேவையால் அதிகரிக்கும் : தமிழ்நாடு வேளாண் பல்கலை., கணிப்பு

கோவை : மக்காச்சோளத்தின் விலை தீவணத் தேவையினைப் பொருத்து அதிகரிக்கும் என வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டத்தின் கீழ் கணிக்கப்பட்டுள்ளது.

கோவை : மக்காச்சோளத்தின் விலை தீவணத் தேவையினைப் பொருத்து அதிகரிக்கும் என வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டத்தின் கீழ் கணிக்கப்பட்டுள்ளது. 

வேளாண் மற்றும் விவசாய நல அமைச்சகத்தின் மூன்றாவது முன் கூட்டிய மதிப்பீட்டின்படி, 2018-19 ஆண்டில் மக்காச்சோளம் 93 லட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு, 278.20 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், கர்நாடகா, பீகார், தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் மக்காச்சோளத்தை அதிகளவு பயிரிடுகின்றன. தமிழ்நாட்டில் சேலம், திண்டுக்கல், நாமக்கல், புதுக்கோட்டை, திருப்பூர், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய மாவட்டங்களில் மக்காச்சோளம் அதிகளவு பயிரிடப்படுகின்றது. 

வர்த்தக மூலகங்களின் படி, தமிழகத்தில் மக்காச்சோள பரப்பு மற்றும் உற்பத்தியானது தாமதமான பருவ மழையால் நடப்பு பருவத்தில் சென்ற ஆண்டை விட குறைவாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. மேலும், மக்காச்சோள படைப்புழுவின் தாக்கம் மக்காச்சோளம் உற்பத்தி செய்யப்படும் மாநிலங்களில் பரவலாக காணப்படுவதால், உற்பத்தி பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது. எனவே, தீவண தொழிற்சாலைகள் மாற்று தானியங்களான கோதுமை, உடைத்த அரிசி ஆகியவற்றை கொள்முதல் செய்கின்றனர். மக்காச்சோளத்தின் விலையானது கர்நாடக வரத்து மற்றும் இறக்குமதியைப் பொறுத்து மாறுபடும்.

இச்சூழலில், விவசாயிகள் விதைப்பு முடிவுகளை எடுக்க ஏதுவாக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் இயங்கி வரும், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 19 ஆண்டுகளாக உடுமலைப்பேட்டை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலவிய மக்காச்சோளம் விலையை மற்றும் சந்தை ஆய்வுகளை மேற்கொண்டது. à®†à®¯à¯à®µà¯à®•ளின் அடிப்படையில், தரமான மக்காச்சோளத்தின் பண்ணை விலை அறுவடையின் போது (செப்டம்பர் –அக்டோபர்) குவிண்டாலுக்கு ரூ. 2,300 ஆக இருக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில், விதைப்பு முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.

மேலும், விவரங்களுக்கு தொடர்பு கொள்ள : உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம். வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம் à®¤à®®à®¿à®´à¯à®¨à®¾à®Ÿà¯ வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோவை-641 003, தொலைபேசி- 0422-2431405.

Newsletter