ஆக., இறுதி வரையில் கோவையில் விவசாயிகளுக்கான கிஸான் கிரெடிட் கார்டு வழங்கும் சிறப்பு முகாம்

கோவை : கோவை மாவட்டத்தில்‌ அனைத்து விவசாயிகளுக்கும்‌ கிஸான்‌ கிரெடிட்‌ கார்டு (உழவர்‌ கடன்‌ அட்டை) வழங்கும் சிறப்பு முகாம்‌ வரும் ஆகஸ்ட் இறுதி வரை நடைபெற இருப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாவட்டத்தில்‌ அனைத்து விவசாயிகளுக்கும்‌ கிஸான்‌ கிரெடிட்‌ கார்டு (உழவர்‌ கடன்‌ அட்டை) வழங்கும் சிறப்பு முகாம்‌ வரும் ஆகஸ்ட் இறுதி வரை நடைபெற இருப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கிஸான்‌ கிரெடிட்‌ கார்டு எனப்படும்‌ உழவர்‌ கடன்‌ அட்டை தற்போது அனைத்து தேசியமயமாக்கப்பட்ட மற்றும்‌ கூட்டுறவு வங்கிகளில்‌ வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்‌ மூலம்‌ ஒரு விவசாயிக்கு ஈட்டுறுதி இல்லாமல்‌ ரூ. 1,60.000 வரையிலும்‌ நில ஈட்டுறுதி அடிப்படையில்‌ ரூ. 3,00.000 வரையிலும்‌ கடன்‌ வழங்கப்படுகிறது. இந்திய அரசு 2 சதவீதம்‌ வட்டி தள்ளுபடியும்‌, உரிய காலத்தில்‌ கடனை திருப்பி செலுத்தும்‌ நிலையில்,‌ 3 சதவீத தள்ளுபடியும்‌ மானியமாக வழங்குவதால்‌ விவசாயிகள்‌ பெறும்‌ கடனுக்கு 4 சதவீதம்‌ வட்டி செலுத்தினால்‌ போதுமானதாகும்‌. இந்த கடன்‌ அட்டையின்‌ கால அளவு 5 ஆண்டுகள்‌ ஆகும்‌.

கோவை மாவட்டத்தில்‌ உழவர்‌ கடன்‌ அட்டை இல்லாத நில உடைமை உள்ள அனைத்து விவசாயிகளுக்கும்‌ இந்த கடன்‌ அட்டைகளை வழங்கும்‌ வகையில்‌ மாவட்டத்திலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்‌ மற்றும்‌ தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளிலும்‌ சிறப்பு முகாம்கள்‌ ஜுலை 3ம்‌ வாரம்‌ முதல்‌ ஆகஸ்ட்‌ இறுதி வரை வேளாண்மைத்துறை மற்றும்‌ வங்கித்துறை மூலம்‌ நடைபெறவுள்ளது. கால்நடை மற்றும்‌ மீன்வளர்க்கும்‌ விவசாயிகளும்‌ இந்த கடன்‌ அட்டையை பெறலாம்‌. உழவர்‌ கடன்‌ அட்டை பெறுவதற்கு விண்ணப்பத்துடன்‌ நில உரிமை ஆவணம்‌, ஆதார்‌ அட்டை மற்றும்‌ வங்கி சேமிப்பு புத்தக நகல்‌ அளிக்க வேண்டும்‌. விண்ணப்பம்‌ பெறப்பட்ட இரண்டு வார காலத்திற்குள்‌ உழவர்‌ கடன்‌ அட்டை வழங்கப்படும்‌. எனவே, நில உடைமைதாரர்கள்‌ இதுவரை கடன்‌ அட்டை பெறாத நிலையில்‌, இம்முகாமை பயன்படுத்தி உழவர்‌ கடன்‌ அட்டை பெற்று பயனடையலாம், என தெரிவித்துள்ளார். 

Newsletter