வேளாண் பல்கலைக்கழக பேராசிரியருக்கு தேசிய வேளாண் அறிவியல் கண்டுபிடிப்பு விருது

கோவை : தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக உணவு பதன்செய் பொறியியல் துறை பேராசிரியர் பெ. ராஜ்குமாருக்கு டெல்லி வேளாண் ஆராய்ச்சி நிலையம் தேசிய வேளாண் அறிவியல் கண்டுபிடிப்பு விருதினை வழங்கி சிறப்பித்துள்ளது.

உணவு பதன்செய் துறையில் புளி விதை நீக்கும் இயந்திரம் போன்ற பல்வேறு இயந்திரங்களில் பெ. ராஜ்குமார் மேற்கொண்ட ஆராய்ச்சி மற்றும் பங்களிப்புக்காக இவ்விருது வழங்கப்பட்டது. இவ்விருது பெற்றமைக்காக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் நீ. குமார், பெ. ராஜ்குமாரை பாராட்டி நினைவு பரிசு வழங்கினார். மேலும், பல்கலைக்கழக இயக்குநர்கள் மற்றும் முதன்மையர்களும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

Newsletter