தோட்டக்கலைத்துறை பயிர்களில் நூற்புழு மேலாண்மை பற்றிய கலந்தாய்வுக் கூட்டம்

கோவை : தோட்டக்கலைத்துறை பயிர்களை தாக்கக்கூடிய தாவர ஒட்டுண்ணி பற்றிய நூற்புழு மேலாண்மை பற்றிய கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்றது.

கோவை : தோட்டக்கலைத்துறை பயிர்களை தாக்கக்கூடிய தாவர ஒட்டுண்ணி பற்றிய நூற்புழு மேலாண்மை பற்றிய கலந்தாய்வுக் கூட்டம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் இன்று நடைபெற்றது. 

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நூற்புழுவியல் துறையின் சார்பில் வேளாண் அறிவியல் மைய ஆராய்ச்சியாளர்களுக்கான, தோட்டக்கலைத்துறை பயிர்களில் நூற்புழு பாதிப்பு பற்றியும், அதனால் ஏற்படும் மகசூல் இழப்புப் பற்றியும் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், நூற்புழுவியல் துறைத் தலைவர் கே. பூர்ணிமா நூற்புழு பற்றிய முகவுரை அளித்து தோட்டக்கலை பயிர்களான தக்காளி, கத்தரி, வெண்டை, வாழை மற்றும் கொய்யா ஆகியவற்றில் நூற்புழுவினால் ஏற்படும் மகசூல் இழப்பு பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். 

இப்பயிற்சியில் பயிர் பாதுகாப்பு இயக்குநர் கு. பிரபாகரன் (தாவர பயிர்பாதுகாப்பு மையம்), வேளாண் விரிவாக்கக் கல்வி இயக்குநர் ஜவஹர்லால் மற்றும் பல்வேறு வேளாண் அறிவியல் மைய ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொண்டனர். 

Newsletter